தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
1. அப்பொழுது கடவுளின் ஆவி ஒதேதின் மகன் அசரியாசின் மேல் இறங்கியது.
2. உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கி, "ஆசாவே, யூதாவின் புதல்வரே, பென்யமீன் குலத்தினரே கேளுங்கள்: நீங்கள் ஆண்டவரோடு இருக்கும் வரை அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரும் உங்களைப் புறக்கணிப்பார்.
3. இஸ்ராயேல் நடுவே பல நாளாய் உண்மைக் கடவுள் இல்லை; போதிக்கக் குருக்களும் இல்லை; திருச்சட்டமும் இல்லை.
4. ஆனால் இஸ்ராயேலர் துன்பப் புயலில் அகப்பட்டுத் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மனம் திரும்பி அவரைத் தேடுவார்கள். அப்பொழுது அவர்கள் அவரைக் கண்டடைவர்.
5. அக்காலத்தில் யாரும் அமைதியில் நடமாட முடியாது. ஏனெனில் மண்ணக மக்கள் அனைவருக்குள்ளும் பயங்கரக் குழப்பம் ஏற்படும்.
6. நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து எழும். கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களாலும் துன்புறுத்துவார்.
7. நீங்கள் கலங்க வேண்டாம்; தைரியமாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
8. ஒதேதின் மகனான இறைவாக்கினர் அசரியாசு உரைத்த இறைவாக்கைக் கேட்ட போது ஆசா வீறு கொண்டான்; யூதா நாட்டிலும் பென்யமீன் நாட்டிலும், தான் கைப்பற்றியிருந்த நகர்களிலும், எப்பிராயீம் மலை நாட்டிலும் அகப்பட்ட சிலைகளை அகற்றி, ஆண்டவரின் மண்டபத்திற்கு முன்பாக இருந்த ஆண்டவரின் பலிபீடத்தைப் புதுப்பித்தான்.
9. பிறகு யூதா மக்களையும் பென்யமீன் மக்களையும், அவர்களோடு எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமேயோனிலும் வாழ்ந்து வந்த புறவினத்தாரையும் ஒன்று திரட்டினான். கடவுளாகிய ஆண்டவர் ஆசாவோடு இருக்கிறதைக் கண்டு இவர்களில் பலரும் இஸ்ராயேலை விட்டு அவனிடம் தஞ்சம் அடைந்தனர்.
10. அவர்கள் எல்லாரும் அரசன் ஆசாவின் பதினைந்தாம் ஆண்டில் யெருசலேமில் கூடி வந்தனர்.
11. தங்கள் கொள்ளைப் பொருட்களில் எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் கடாக்களையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
12. அவர்கள் முழு ஆன்மாவோடும் முழு மனதோடும் தங்கள் முன்னோர்களின் கடவுளாகிய ஆண்டவரை தேடுவோம் என்றும்,
13. சிறியோர் பெரியோர், ஆண் பெண் அனைவரிலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் தேடாமல் இருக்கிறார்களோ அவர்கள் சாகக்கடவர் என்றும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
14. பூரிகைகளும் எக்காளங்களும் ஒலிக்க, மிகுந்த ஆரவாரத்துடன் ஆண்டவரின் திருப் பெயரால் ஆணையிட்டார்கள்.
15. இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தங்கள் முழு இதயத்தோடும் ஆணையிட்டுத் தங்கள் முழுமனத்தோடும் அவரைத் தேடிக் கண்டடைந்தனர். ஆண்டவரும் அவர்களுக்கு அமைதி அளித்தார்.
16. ஒரு சிலைத்தோப்பிலே அரசனின் தாய் மாக்கா பரியப் என்ற அருவருப்பான ஒரு சிலையைச் செய்து வைத்திருந்தாள். அதைக் கேள்வியுற்ற ஆசா அவளை அரசியாய் இராதபடி விலக்கி வைத்தான். மேலும் அச்சிலையை உடைத்து நொறுக்கிக் கெதிரோன் பள்ளத்தாக்கிலே அதைச் சுட்டெரித்தான்.
17. மேடைகள் இன்னும் இஸ்ராயேலிலே ஒழிந்தபாடில்லை. ஆசாவோ தன் வாழ்நாள் முழுவதும் நேரிய வழியிலேயே நடந்து வந்தான்.
18. தன் தந்தையும் தானும் நேர்ந்து கொண்ட வெள்ளியையும் பொன்னையும் பலவிதத் தட்டுமுட்டுகளையும் ஆசா கடவுளின் ஆலயத்திற்குச் செலுத்தினான்.
19. ஆசாவினது ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டு வரை நாட்டில் போரே இல்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 36
2 நாளாகமம் 15:28
1 அப்பொழுது கடவுளின் ஆவி ஒதேதின் மகன் அசரியாசின் மேல் இறங்கியது. 2 உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கி, "ஆசாவே, யூதாவின் புதல்வரே, பென்யமீன் குலத்தினரே கேளுங்கள்: நீங்கள் ஆண்டவரோடு இருக்கும் வரை அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரும் உங்களைப் புறக்கணிப்பார். 3 இஸ்ராயேல் நடுவே பல நாளாய் உண்மைக் கடவுள் இல்லை; போதிக்கக் குருக்களும் இல்லை; திருச்சட்டமும் இல்லை. 4 ஆனால் இஸ்ராயேலர் துன்பப் புயலில் அகப்பட்டுத் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மனம் திரும்பி அவரைத் தேடுவார்கள். அப்பொழுது அவர்கள் அவரைக் கண்டடைவர். 5 அக்காலத்தில் யாரும் அமைதியில் நடமாட முடியாது. ஏனெனில் மண்ணக மக்கள் அனைவருக்குள்ளும் பயங்கரக் குழப்பம் ஏற்படும். 6 நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து எழும். கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களாலும் துன்புறுத்துவார். 7 நீங்கள் கலங்க வேண்டாம்; தைரியமாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு கிடைக்கும்" என்றார். 8 ஒதேதின் மகனான இறைவாக்கினர் அசரியாசு உரைத்த இறைவாக்கைக் கேட்ட போது ஆசா வீறு கொண்டான்; யூதா நாட்டிலும் பென்யமீன் நாட்டிலும், தான் கைப்பற்றியிருந்த நகர்களிலும், எப்பிராயீம் மலை நாட்டிலும் அகப்பட்ட சிலைகளை அகற்றி, ஆண்டவரின் மண்டபத்திற்கு முன்பாக இருந்த ஆண்டவரின் பலிபீடத்தைப் புதுப்பித்தான். 9 பிறகு யூதா மக்களையும் பென்யமீன் மக்களையும், அவர்களோடு எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமேயோனிலும் வாழ்ந்து வந்த புறவினத்தாரையும் ஒன்று திரட்டினான். கடவுளாகிய ஆண்டவர் ஆசாவோடு இருக்கிறதைக் கண்டு இவர்களில் பலரும் இஸ்ராயேலை விட்டு அவனிடம் தஞ்சம் அடைந்தனர். 10 அவர்கள் எல்லாரும் அரசன் ஆசாவின் பதினைந்தாம் ஆண்டில் யெருசலேமில் கூடி வந்தனர். 11 தங்கள் கொள்ளைப் பொருட்களில் எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் கடாக்களையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர். 12 அவர்கள் முழு ஆன்மாவோடும் முழு மனதோடும் தங்கள் முன்னோர்களின் கடவுளாகிய ஆண்டவரை தேடுவோம் என்றும், 13 சிறியோர் பெரியோர், ஆண் பெண் அனைவரிலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் தேடாமல் இருக்கிறார்களோ அவர்கள் சாகக்கடவர் என்றும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். 14 பூரிகைகளும் எக்காளங்களும் ஒலிக்க, மிகுந்த ஆரவாரத்துடன் ஆண்டவரின் திருப் பெயரால் ஆணையிட்டார்கள். 15 இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தங்கள் முழு இதயத்தோடும் ஆணையிட்டுத் தங்கள் முழுமனத்தோடும் அவரைத் தேடிக் கண்டடைந்தனர். ஆண்டவரும் அவர்களுக்கு அமைதி அளித்தார். 16 ஒரு சிலைத்தோப்பிலே அரசனின் தாய் மாக்கா பரியப் என்ற அருவருப்பான ஒரு சிலையைச் செய்து வைத்திருந்தாள். அதைக் கேள்வியுற்ற ஆசா அவளை அரசியாய் இராதபடி விலக்கி வைத்தான். மேலும் அச்சிலையை உடைத்து நொறுக்கிக் கெதிரோன் பள்ளத்தாக்கிலே அதைச் சுட்டெரித்தான். 17 மேடைகள் இன்னும் இஸ்ராயேலிலே ஒழிந்தபாடில்லை. ஆசாவோ தன் வாழ்நாள் முழுவதும் நேரிய வழியிலேயே நடந்து வந்தான். 18 தன் தந்தையும் தானும் நேர்ந்து கொண்ட வெள்ளியையும் பொன்னையும் பலவிதத் தட்டுமுட்டுகளையும் ஆசா கடவுளின் ஆலயத்திற்குச் செலுத்தினான். 19 ஆசாவினது ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டு வரை நாட்டில் போரே இல்லை.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 36
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References