தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
1. ரொபோவாம் தன் அரசை உறுதிப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திய பின்பு, அவனும் அவனோடு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஆண்டவரின் திருச்சட்டத்தை மீறி நடந்தனர்.
2. இவ்வாறு அவர்கள் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் புரிந்தனர். எனவே, ரொபோவாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில், எகிப்திய அரசன் சேசாக் யெருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தான்.
3. அவனது படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதினாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். எண்ணற்ற லீபியரும், திரொகுலதித்தரும், எத்தியோப்பியரும் அவனோடு வந்திருந்தனர்.
4. அவன் யூதாவைச் சேர்ந்த அரணுள்ள நகர்களைப் பிடித்தான். பிறகு யெருசலேமுக்கு வந்தான்.
5. அப்பொழுது இறைவாக்கினர் செமெயாஸ், சேசாக் அரசனுக்குப் பயந்தோடிய ரொபோவாமிடமும் யெருசலெமில் கூடியிருந்த யூதாவின் மூப்பர்களிடமும் வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: 'நீங்கள் நம்மை விட்டு அகன்றீர்கள். எனவே, நாமும் உங்களைக் கைவிட்டு உங்களைச் சேசாக்கிற்குக் கையளித்தோம்' என்கிறார்" என்று சொன்னார்.
6. இஸ்ராயேலின் மூப்பர்களும் மக்கள் தலைவர்களும் அரசனும் இதைக் கேட்டுத் தங்களைத் தாழ்த்தி, "ஆண்டவர் நீதியுள்ளவர்" என்றனர்.
7. அவர்கள் தங்களைத் தாழ்த்தினதை ஆண்டவர் கண்டு மீண்டும் செமெயாசை நோக்கி, "அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள். ஆகையால் நாம் அவர்களை அழிக்கமாட்டோம். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்போம். நமது சீற்றம் சேசாக்கின் மூலமாய் யெருசலேமின் மேல் வராது.
8. ஆயினும் நமக்கு ஊழியம் செய்வதற்கும், உலக அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை அடிமைகளாய் இருப்பார்கள்" என்றார்.
9. அவ்விதமே எகிப்திய அரசன் சேசாக் ஆண்டவரின் ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களையும், சாலமோன் செய்து வைத்திருந்த பொற் கேடயங்களையும் கொள்ளையிட்டபின் யெருசலேமை விட்டு அகன்றான்.
10. அவற்றிற்குப் பதிலாக ரொபோவாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற் காவலரின் தலைவர்கள் வசம் ஒப்புவித்தான்.
11. அரசன் ஆண்டவரின் ஆலயத்துக்குள் நுழையும் போதெல்லாம் அவ்வாயிற் காவலர் அக்கேடயங்களை ஏந்தி நிற்பார்கள். பின்னர் அவற்றை ஆயுதக்கிடங்கில் திரும்ப வைப்பார்கள்.
12. அவர்கள் தங்களைத் தாழ்த்தினபடியாலும், யூதாவிலே இன்னும் சில நற்செயல்கள் இருந்து வந்தமையாலும் ஆண்டவரின் கோபம் அவர்களை விட்டு அகன்றது. எனவே அவர்கள் அடியோடு அழிக்கப் படவில்லை.
13. ஆதலால் அரசன் ரொபோவாம் யெருசலேமில் தன் அரசை உறுதிப்படுத்தி அங்கு அரசோச்சி வந்தான். அவன் அரசனான போது அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களினின்றும் தேர்ந்து கொண்ட யெருசலேம் மாநகரில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசோச்சினான். அவன் தாய் அம்மோனியா இனத்தைச் சேர்ந்தவள்; பெயர் நாவாமா.
14. அவனோ ஆண்டவரைப் பின்பற்ற மனதில்லாதவனாய்த் தீய வழியில் நடந்து வந்தான்.
15. ரொபோவாமின் வரலாறு முழுவதும் இறைவாக்கினரான செமெயாசின் நூலிலும், திருக்காட்சியாளர் இத்தோவின் நூலிலும் விரிவாய் வரையப்பட்டுள்ளது. ரொபோவாமும் எரொபோவாமும் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டு வந்தனர்.
16. இறுதியில் ரொபோவாம் தன் முன்னோரோடு கண்ணயர்ந்தான்; தாவீதின் நகரில் புதைக்கப்பட்டான். அவன் மகன் ஆபியா அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 36
1 ரொபோவாம் தன் அரசை உறுதிப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திய பின்பு, அவனும் அவனோடு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஆண்டவரின் திருச்சட்டத்தை மீறி நடந்தனர். 2 இவ்வாறு அவர்கள் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் புரிந்தனர். எனவே, ரொபோவாம் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில், எகிப்திய அரசன் சேசாக் யெருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்தான். 3 அவனது படையில் ஆயிரத்து இருநூறு தேர்களும், அறுபதினாயிரம் குதிரை வீரரும் இருந்தனர். எண்ணற்ற லீபியரும், திரொகுலதித்தரும், எத்தியோப்பியரும் அவனோடு வந்திருந்தனர். 4 அவன் யூதாவைச் சேர்ந்த அரணுள்ள நகர்களைப் பிடித்தான். பிறகு யெருசலேமுக்கு வந்தான். 5 அப்பொழுது இறைவாக்கினர் செமெயாஸ், சேசாக் அரசனுக்குப் பயந்தோடிய ரொபோவாமிடமும் யெருசலெமில் கூடியிருந்த யூதாவின் மூப்பர்களிடமும் வந்து அவர்களை நோக்கி, "ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: 'நீங்கள் நம்மை விட்டு அகன்றீர்கள். எனவே, நாமும் உங்களைக் கைவிட்டு உங்களைச் சேசாக்கிற்குக் கையளித்தோம்' என்கிறார்" என்று சொன்னார். 6 இஸ்ராயேலின் மூப்பர்களும் மக்கள் தலைவர்களும் அரசனும் இதைக் கேட்டுத் தங்களைத் தாழ்த்தி, "ஆண்டவர் நீதியுள்ளவர்" என்றனர். 7 அவர்கள் தங்களைத் தாழ்த்தினதை ஆண்டவர் கண்டு மீண்டும் செமெயாசை நோக்கி, "அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள். ஆகையால் நாம் அவர்களை அழிக்கமாட்டோம். விரைவில் அவர்களுக்கு விடுதலை அளிப்போம். நமது சீற்றம் சேசாக்கின் மூலமாய் யெருசலேமின் மேல் வராது. 8 ஆயினும் நமக்கு ஊழியம் செய்வதற்கும், உலக அரசர்களுக்கு ஊழியம் செய்வதற்கும் உள்ள வேறுபாட்டை அடிமைகளாய் இருப்பார்கள்" என்றார். 9 அவ்விதமே எகிப்திய அரசன் சேசாக் ஆண்டவரின் ஆலயத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களையும், சாலமோன் செய்து வைத்திருந்த பொற் கேடயங்களையும் கொள்ளையிட்டபின் யெருசலேமை விட்டு அகன்றான். 10 அவற்றிற்குப் பதிலாக ரொபோவாம் வெண்கலக் கேடயங்களைச் செய்து, அவற்றை அரண்மனை வாயிற் காவலரின் தலைவர்கள் வசம் ஒப்புவித்தான். 11 அரசன் ஆண்டவரின் ஆலயத்துக்குள் நுழையும் போதெல்லாம் அவ்வாயிற் காவலர் அக்கேடயங்களை ஏந்தி நிற்பார்கள். பின்னர் அவற்றை ஆயுதக்கிடங்கில் திரும்ப வைப்பார்கள். 12 அவர்கள் தங்களைத் தாழ்த்தினபடியாலும், யூதாவிலே இன்னும் சில நற்செயல்கள் இருந்து வந்தமையாலும் ஆண்டவரின் கோபம் அவர்களை விட்டு அகன்றது. எனவே அவர்கள் அடியோடு அழிக்கப் படவில்லை. 13 ஆதலால் அரசன் ரொபோவாம் யெருசலேமில் தன் அரசை உறுதிப்படுத்தி அங்கு அரசோச்சி வந்தான். அவன் அரசனான போது அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களினின்றும் தேர்ந்து கொண்ட யெருசலேம் மாநகரில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசோச்சினான். அவன் தாய் அம்மோனியா இனத்தைச் சேர்ந்தவள்; பெயர் நாவாமா. 14 அவனோ ஆண்டவரைப் பின்பற்ற மனதில்லாதவனாய்த் தீய வழியில் நடந்து வந்தான். 15 ரொபோவாமின் வரலாறு முழுவதும் இறைவாக்கினரான செமெயாசின் நூலிலும், திருக்காட்சியாளர் இத்தோவின் நூலிலும் விரிவாய் வரையப்பட்டுள்ளது. ரொபோவாமும் எரொபோவாமும் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டு வந்தனர். 16 இறுதியில் ரொபோவாம் தன் முன்னோரோடு கண்ணயர்ந்தான்; தாவீதின் நகரில் புதைக்கப்பட்டான். அவன் மகன் ஆபியா அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References