தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 இராஜாக்கள்
1. எலிசேயு ஒரு பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுத்திருந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, "நீயும் உன் குடும்பத்தாரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான ஓர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், ஆண்டவர் நாட்டில் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது ஏழாண்டு வரை நீடிக்கும்" என்று சொன்னார்.
2. அவளோ கடவுளின் மனிதர் கூறியபடி தன் வீட்டாரோடு சென்று பிலிஸ்தியர் நாட்டில் நீண்ட நாள் வாழ்ந்து வந்தாள்.
3. ஏழு ஆண்டுகள் கடந்தபின், அந்தப் பெண் பிலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தன் வீடும் நிலங்களும் தனக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிட வந்தாள்.
4. அரசனும் கடவுளின் மனிதருக்கு ஊழியம் செய்து வந்த ஜியேசியோடு பேசி, "எலிசேயு புரிந்துள்ள அரும் பெரும் செயல்களை எல்லாம் எனக்கு விவரித்துச் சொல்" எனக் கேட்டான்.
5. அதற்கு ஜியேசி, இறந்த ஒருவனுக்கு எலிசேயு உயிர் கொடுத்திருந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறினான். அப்போது உயிர் பெற்ற சிறுவனின் தாய் அரசன் முன் வந்து, தன் வீட்டையும் நிலங்களையும் தனக்குத் திரும்பித் தரவேண்டும் என்று அரசனிடம் முறையிட்டாள். அப்போது ஜியேசி, "என் தலைவராகிய அரசே, இதோ! அந்த பெண்; இவளுடைய மகனுக்குத் தான் எலிசேயு உயிர் கொடுத்தார்" என்றான்.
6. அரசன் அதைப்பற்றி அவளை வினவ, அவள் நடந்ததை எல்லாம் விரிவாக எடுத்துரைத்தாள். அப்பொழுது அரசன் ஓர் அண்ணகனை அழைத்து, "நீ அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திரும்பக்கொடு; அதோடு அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள் முதல் இன்று வரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு" என்று கட்டளையிட்டான்.
7. எலிசேயு தமாஸ்கு நகருக்கு வந்தார். அப்போது சீரியாவின் அரசன் பெனாதாத் நோயுற்றிருந்தான். "கடவுளின் மனிதர் இங்கு வந்திருக்கிறார்" என்று யாரோ அவனுக்கு அறிவித்தனர்.
8. அதனால் அரசன் அசாயேலைப் பார்த்து, "நீ பரிசில்களை எடுத்துக் கொண்டு கடவுளின் மனிதரிடம் போய், 'நான் நோயினின்று நலம் பெறுவேனா?' என்று, அவர் மூலம் ஆண்டவரை விசாரித்துக் கேட்பாயாக" என்றான்.
9. ஆகையால் அசாயேல் தமாஸ்கு நகரிலுள்ள விலையுயர்ந்த எல்லாவிதப் பரிசில்களையும் நாற்பது ஒட்டகங்கள் மேல் ஏற்றிக் கொண்டு எலிசேயுவிடம் வந்தான். அவர் முன் வந்து நின்று அவரை நோக்கி, 'எனது நோயினின்று நான் நலம் பெறுவேனா?' என உம்மிடம் கேட்டு வரச் சீரியாவின் அரசரும் உமது அடியானுமான பெனாதார் உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார்" என்றான்.
10. எலிசேயு மறுமொழியாக, "நீ போய் 'நீர் நலமடைவீர்; ஆயினும் நிச்சயம் அவர் சாவார் என்று ஆண்டவர் எனக்குத் தெரிவித்துள்ளார் என்று அவரிடம் சொல்" என்றார்.
11. அன்றியும் கடவுளின் மனிதர் அவனோடு நின்றார். மனம் கலங்க, முகம் சிவக்க அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
12. அசாயேல் அவரைப் பார்த்து, "தாங்கள் இவ்வாறு அழுவது- ஏன்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீ இஸ்ராயேல் மக்களுக்குச் செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன். அவர்களின் சிறந்த நகர்களைத் தீக்கு இரையாக்குவாய்; இளைஞரை வாளுக்கு இரையாக்குவாய்; சிறு குழந்தைகளைத் தரையில் அறைந்து கொல்லுவாய்; கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய் என்று எனக்குத் தெரியும்" என்றார்.
13. அசாயேல் அவரை நோக்கி, "இவ்வளவு பெரும் காரியத்தைச் செய்ய உம் அடியானாகிய நாயேன் எம்மாத்திரம்?" எனக் கேட்டான். அதற்கு எலிசேயு, "நீ சீரியாவின் அரசனாய் இருப்பாய் என்று ஆண்டவர் எனக்கு அறிவித்திருக்கின்றார்" என மொழிந்தார்.
14. அசாயேல் எலிசேயுவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவரைக் காண வந்தான். அரசன் அவனைப் பார்த்து, "எலிசேயு உன்னிடம் என்ன சொன்னார்?" என்று கேட்டான். அதற்கு அசாயேல், "நீர் நலமடைவீர் என எனக்குச் சொன்னார்" என்றான்.
15. மறுநாள் அசாயேல் ஒரு போர்வையை எடுத்து நீரில் தோய்த்து அரசனுடைய முகத்தை மூட, அவன் இறந்தான். அசாயேல் அவனுக்குப்பின் அரியணை ஏறினான்.
16. இஸ்ராயேல் அரசன் ஆக்காபின் மகன் யோராமுடைய ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில், யூதாவின் அரசன் யோசபாத்தின் இருபத்திரண்டாம் ஆண்டில், யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனாகப் பதவி ஏற்றான்.
17. இவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரியணை ஏறி எட்டு ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி புரிந்தான்.
18. அவன் ஆக்காபுடைய வீட்டாரைப் போல் இஸ்ராயேல் அரசர்களைப் பின்பற்றியே நடந்தான். ஏனெனில், இவனுடைய மனைவி ஆக்காபின் மகளே. ஆண்டவர் திருமுன் அவன் பாவம் புரிந்தான்.
19. ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு, யூதா மக்களை அழிக்கவில்லை. ஏனெனில், அவர் தாவீதுக்கும் அவருடைய புதல்வர்களுக்கும் ஓர் ஒளி விளக்கைக் கொடுப்பதாக வாக்களித்திருந்தார்.
20. அவனது காலத்தில் இதுமேயர் யூதா அரசருக்கு அடிபணிய மறுத்துத் தங்களுக்கென ஓர் அரசனை ஏற்படுத்திக் கொண்டனர்.
21. ஆனால் யோராம் அரசன் செயீரா என்ற ஊருக்குத் தன் எல்லாத் தேர்களோடும் வந்தான். இரவில் வந்து தன்னைச் சூழ்ந்திருந்த இதுமேயர்களையும் தேர்ப்படைத் தலைவர்களையும் வெட்டி வீழ்த்தினான். மக்களோ தங்கள் கூடாரங்களுக்கு ஓட்டம் பிடித்தனர்.
22. அன்று முதல் இதுமேயர் யூதா அதிகாரத்திற்கு உட்படாது விலகியே நின்றனர். அதே வேளையில் லோப்னா நகரத்தாரும் யூதாவை விட்டு விலகிப்போனார்கள்.
23. யோராம் அரசனின் மற்றச் செயல்கள் எல்லாம் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
24. யோராம் அரசன் தன் முன்னோரோடு துயில் கொண்டான். தாவீது நகரில் அவர்களோடு புதைக்கப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் ஒக்கோசியாசு அரியணை ஏறினான்.
25. இஸ்ராயேலின் அரசனான ஆக்காபின் மகன் யோராமினுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், யூதா அரசனான யோராமின் மகன் ஒக்கோசியாசு அரசாளத் தொடங்கினான்.
26. தன் இருபத்திரண்டாம் வயதில் அரியணை ஏறிய ஒக்கோசியாசு யெருசலேமில் ஓராண்டு ஆட்சி செலுத்தினான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியா. இவள் யூதா அரசன் அம்ரியின் மகள்.
27. அவன் ஆக்காபின் குடும்பத்தாரைப் பின்பற்றி ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். அவன் ஆக்காபின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு மருமகனாய் இருந்ததால் அவர்களைப் போலவே அவனும் தீயவழியில் நடந்து வந்தான்.
28. அன்றியும், சீரியாவின் அரசன் அசாயேலுக்கு எதிராய்ப் போரிட, ஆக்காபின் மகன் யோராமோடு காலாதிலுள்ள இராமோத் நகருக்குப் போனான். அங்கு யோராம் சீரியர் கையில் காயம் அடைந்தான்.
29. இவன் சீரியாவின் அரசன் அசாயேலோடு இராமோத்தில் போரிடுகையில், சீரியரால் காயப்படுத்தப்பட்டதால், சிகிச்சை பெறும்படி ஜெஸ்ராயேலுக்கு வந்தான். ஆக்காபின் மகன் யோராம் ஜெஸ்ராயேலில் நோயுற்றிருந்ததால் அவனைப் பார்த்து வரும் பொருட்டு யூதாவின் அரசன் யோராமின் மகன் ஒக்கோசியாசு அங்குச் சென்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 25 Chapters, Current Chapter 8 of Total Chapters 25
2 இராஜாக்கள் 8:1

×

Alert

×

tamil Letters Keypad References