தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 கொரிந்தியர்
1. மறுபடியும் எங்களைப்பற்றி நாங்களே நற்சான்று கூறத்தொடங்குகிறோமா? அல்லது நற்சான்றுக் கடிதங்கள் சிலருக்குத் தேவையாய் இருப்பதுபோல் அத்தகைய கடிதங்களை உங்களிடம் காட்டவோ, உங்களிடமிருந்து பெறவோ வேண்டிய தேவை எங்களுக்கு உண்டா?
2. நீங்களே எங்களுடைய நற்சான்றுக் கடிதம்; அது எங்கள் உள்ளங்களில் பொறிக்கப்பட்டுள்ளது; இதை எல்லா மனிதரும் பார்க்கவும் படிக்கவும் கூடும்.
3. எங்கள் ஊழியத்தைப் பயன்படுத்தி, கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. எழுதியதோ மையினாலன்று, உயிருள்ள கடவுளின் ஆவியினாலே; கற்பலகையில் அன்று, உங்கள் உள்ளங்களாகிய உயிர்ப் பலகைகளிலேயே எழுதப்பட்டது.
4. இத்தகைய நம்பிக்கையே நாங்கள் கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்மேல் வைத்திருக்கிறோம்.
5. நாங்களே செய்துவிட்டது போல எதன்மேலும் உரிமை பாராட்டிக்கொள்ளும் தகுதி எங்களுக்கு இல்லை; எங்கள் தகுதியுடைமை கடவுளிடமிருந்தே வருகிறது.
6. அவரே எங்களுக்குப் புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியைத் தந்தார்: அந்த உடன்படிக்கையோ எழுதிய சட்டத்தைச் சார்ந்ததன்று; ஆவியானவரையே சார்ந்தது. ஏனெனில், எழுதிய சட்டம் விளைப்பது சாவு, ஆவியானவர் அளிப்பதோ வாழ்வு.
7. கற்களில் எழுத்துக்களால் வரையப்பட்ட அச்சட்டத்தோடு பொருந்திய திருப்பணி சாவை விளைப்பதாய் இருந்தும், அத்திருப்பணி இறைமாட்சிமை சூழ அருளப்பட்டது. விரைவில் மறையவேண்டியதாய் இருந்த அந்த மாட்சிமை மோயீசன் முகத்தில் எவ்வளவு ஒளி வீசிற்றென்றால், இஸ்ராயேல் மக்கள் அவர் முகத்தை உற்றுப் பார்க்கவும் இயலவில்லை.
8. அத்தகைய மாட்சிமை அதைச் சூழ்ந்திருந்ததென்றால், ஆவியின் திருப்பணியை இன்னும் எவ்வளவு மாட்சிமை சூழவேண்டும்!
9. ஏனெனில், தண்டனைத் தீர்ப்புக் குட்படுத்தும் திருப்பணி இவ்வளவு மாட்சிமையுள்ளதாய் இருந்ததென்றால், மன்னிப்புத் தரும் திருப்பணி இன்னும் எவ்வளவோ மாட்சிமை நிறைந்ததாய் இருக்கவேண்டும்!
10. உள்ளபடி அன்றைய மாட்சிமையை இவ்வளவு மேன்மையுள்ள இன்றைய மாட்சிமையோடு ஒப்பிட்டால் அது மாட்சிமையே அன்று.
11. ஏனெனில், மறையப்போவது மாட்சிமையினிடையே தோன்றியதென்றால், நிலைத்திருக்கப்போவது இன்னும் எவ்வளவோ மாட்சிமையோடு விளங்க வேண்டும்!
12. இத்தகைய நம்பிக்கைகொண்ட நாங்கள் மிக்க துணிவோடு இருக்கிறோம்.
13. மறைந்து போகும் மகிமையொளி மங்கி அணைவதை இஸ்ராயேல் மக்கள் உற்றுப் பார்க்காதபடி தம் முகத்தை மூடிக்கொண்ட மோயீசனைப் போல் நாங்கள் செய்வதில்லை...
14. அவர்களின் அறிவுப்புலன் மழுங்கிப் போயிற்று. ஆம், இன்று வரை, அவர்கள் பழைய ஏற்பாட்டைப் படிக்கும்போது, அதே முகத்திரை இன்னும் எடுபடாமலே இருக்கிறது; கிறிஸ்துவில்தான் அது மறைந்தொழியும்.
15. உண்மைதான், இன்று வரை, மோயீசன் எழுதியதைப் படிக்கும்போதெல்லாம், அவர்களுடைய மனத்தின் மீது திரை ஒன்று கிடக்கிறது.
16. "ஆண்டவர்பால் திரும்பினால்தான் அந்த மூடு திரை அகற்றப்படும்."
17. ஆண்டவர் என்றது ஆவியானவரைத்தான்; ஆண்டவரின் ஆவியானவர் எங்கிருக்கிறாரோ அங்கு விடுதலை உண்டு.
18. இப்பொழுது நாமனைவரும் மூடு திரையில்லா முகத்தினராய், ஆண்டவரின் மாட்சிமையைக் கண்ணாடிபோல் காட்டுகிறோம். அதனால் மேன்மேலும் மாட்சிமை ஒளி பெற்று. அதன் சாயலாகவே உருமாற்றம் அடைகிறோம்; இவையெல்லாம் ஆவியாகிய ஆண்டவரின் செயலே.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 13 Chapters, Current Chapter 3 of Total Chapters 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
2 கொரிந்தியர் 3:1

×

Alert

×

tamil Letters Keypad References