தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 தெசலோனிக்கேயர்
1. சகோதரர்களே காலங்கள் நேரங்களைப் பற்றி உங்களுக்கு எழுதத் தேவையில்லை.
2. திருடன் நள்ளிரவில் வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும் என்பது உங்களுக்குத் திண்ணமாய்த் தெரியும்.
3. 'எல்லாம் அமைதி, ஆபத்து ஒன்றுமில்லை ' என்று மக்கள் கூறும்போதே, கர்ப்பவதிகளுக்கு வேதனை ஏற்படுவதைப்போல் திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது.
4. ஆனால், சகோதரர்களே, நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல. திடீரெனத் தாக்கும் திருடனைப்போல் அந்த நாள் உங்களுக்கு இராது.
5. நீங்கள் அனைவரும் ஒளியின் மக்கள், பகலின் மக்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ உரியவரல்ல.
6. எனவே, மற்றவர்களைப்போல் நாமும் தூங்காது, விழித்திருக்க வேண்டும்; மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும்.
7. தூங்குபவர்கள் இரவில்தான் தூங்குபவர்கள்; குடிகாரர் இரவில் தான் குடிப்பார்கள்.
8. பகலைச் சார்ந்த நாமோ மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும். விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்பின் நம்பிக்கையைத் தலைச்சீராகவும் அணிந்து கொள்வோமாக.
9. ஏனெனில், கடவுள் நம்மைத் தம் சினத்திற்கு ஆளாகும்படி ஏற்படுத்தவில்லை; நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தினார்.
10. நாம் விழித்திருந்தாலும், சாவில் உறங்கினாலும் தம்மோடு ஒன்றித்து வாழும்படி இவரே நமக்காக இறந்தார்.
11. ஆகையால் நீங்கள் இப்போது செய்து வருவதுபோலவே, ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்; ஞான வளர்ச்சி அடைய ஒருவர்க்கொருவர் துணை செய்யுங்கள்.
12. சகோதரர்களே, உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களுக்குத் தலைவர்களாக இருந்து, அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
13. அவர்கள் ஆற்றும் பணியை முன்னிட்டு, அவர்களுக்கு அன்பும், மிக்க மேரை மரியாதையும் காட்டுங்கள். உங்களிடையே சமாதானம் நிலவட்டும்.
14. சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரையாவது: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள். சோர்வுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள். மனவலிமையற்றவர்களைத் தாங்குங்கள். எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
15. உங்களுள் யாரும் பழிக்குப் பழி வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக எப்போதும் நன்மையே செய்ய நாடுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; மற்றெல்லார்க்கும் நன்மை செய்யுங்கள்.
16. எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.
17. இடைவிடாது செபியுங்கள்.
18. என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
19. தேவ ஆவியை அணைத்துவிட வேண்டாம்.
20. இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
21. அவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதையே ஏற்றுக்கொள்ளுங்கள்.
22. தீமையானதெல்லாம் விட்டு விலகுங்கள்.
23. சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களை முற்றும் பரிசுத்தராக்குவாராக. அவ்வாறே உங்கள் ஆவி, ஆன்மா, உடல் அனைத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது சீர்குலையாமல் குற்றமின்றி இருக்கும்படி காக்கப்படுவதாக.
24. உங்களை அழைக்கும் இறைவன் நம்பிக்கைக்குரியவர். சொன்னதைச் செய்து முடிப்பார்.
25. சகோதரர்களே, எங்களுக்காகவும் செபியுங்கள்.
26. பரிசுத்த முத்தம் கொடுத்து, சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
27. சகோதரர்கள் அனைவருக்கும் இக்கடிதத்தை வாசித்துக் காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் கேட்டுக்கொள்கிறேன்.
28. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 5
1 2 3 4 5
1 சகோதரர்களே காலங்கள் நேரங்களைப் பற்றி உங்களுக்கு எழுதத் தேவையில்லை. 2 திருடன் நள்ளிரவில் வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும் என்பது உங்களுக்குத் திண்ணமாய்த் தெரியும். 3 'எல்லாம் அமைதி, ஆபத்து ஒன்றுமில்லை ' என்று மக்கள் கூறும்போதே, கர்ப்பவதிகளுக்கு வேதனை ஏற்படுவதைப்போல் திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது. 4 ஆனால், சகோதரர்களே, நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல. திடீரெனத் தாக்கும் திருடனைப்போல் அந்த நாள் உங்களுக்கு இராது. 5 நீங்கள் அனைவரும் ஒளியின் மக்கள், பகலின் மக்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ உரியவரல்ல. 6 எனவே, மற்றவர்களைப்போல் நாமும் தூங்காது, விழித்திருக்க வேண்டும்; மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும். 7 தூங்குபவர்கள் இரவில்தான் தூங்குபவர்கள்; குடிகாரர் இரவில் தான் குடிப்பார்கள். 8 பகலைச் சார்ந்த நாமோ மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும். விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்பின் நம்பிக்கையைத் தலைச்சீராகவும் அணிந்து கொள்வோமாக. 9 ஏனெனில், கடவுள் நம்மைத் தம் சினத்திற்கு ஆளாகும்படி ஏற்படுத்தவில்லை; நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தினார். 10 நாம் விழித்திருந்தாலும், சாவில் உறங்கினாலும் தம்மோடு ஒன்றித்து வாழும்படி இவரே நமக்காக இறந்தார். 11 ஆகையால் நீங்கள் இப்போது செய்து வருவதுபோலவே, ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்; ஞான வளர்ச்சி அடைய ஒருவர்க்கொருவர் துணை செய்யுங்கள். 12 சகோதரர்களே, உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களுக்குத் தலைவர்களாக இருந்து, அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 13 அவர்கள் ஆற்றும் பணியை முன்னிட்டு, அவர்களுக்கு அன்பும், மிக்க மேரை மரியாதையும் காட்டுங்கள். உங்களிடையே சமாதானம் நிலவட்டும். 14 சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரையாவது: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள். சோர்வுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள். மனவலிமையற்றவர்களைத் தாங்குங்கள். எல்லாரோடும் பொறுமையாயிருங்கள். 15 உங்களுள் யாரும் பழிக்குப் பழி வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக எப்போதும் நன்மையே செய்ய நாடுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; மற்றெல்லார்க்கும் நன்மை செய்யுங்கள். 16 எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள். 17 இடைவிடாது செபியுங்கள். 18 என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. 19 தேவ ஆவியை அணைத்துவிட வேண்டாம். 20 இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். 21 அவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதையே ஏற்றுக்கொள்ளுங்கள். 22 தீமையானதெல்லாம் விட்டு விலகுங்கள். 23 சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களை முற்றும் பரிசுத்தராக்குவாராக. அவ்வாறே உங்கள் ஆவி, ஆன்மா, உடல் அனைத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது சீர்குலையாமல் குற்றமின்றி இருக்கும்படி காக்கப்படுவதாக. 24 உங்களை அழைக்கும் இறைவன் நம்பிக்கைக்குரியவர். சொன்னதைச் செய்து முடிப்பார். 25 சகோதரர்களே, எங்களுக்காகவும் செபியுங்கள். 26 பரிசுத்த முத்தம் கொடுத்து, சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். 27 சகோதரர்கள் அனைவருக்கும் இக்கடிதத்தை வாசித்துக் காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் கேட்டுக்கொள்கிறேன். 28 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 5
1 2 3 4 5
×

Alert

×

Tamil Letters Keypad References