தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 சாமுவேல்
1. அப்படியே கரியாத்தியாரிம் மனிதர்கள் வந்து ஆண்டவருடைய பேழையை எடுத்துப் போய்க் காபாவிலே அபினதாப் வீட்டில் நிறுவினார்கள். மேலும் அவன் மகன் எலெயசாரை ஆண்டவருடைய பேழையைக் காத்துக் கொள்ளும்படி அபிஷுகம் செய்தார்கள்.
2. ஆண்டவருடைய பேழை கரியாத்தியாரிமில் நிறுவப்பட்டபின், வெகுகாலம் அதாவது இருபது ஆண்டுகள் கடந்து போயின. அப்போது இஸ்ராயேல் வீடு முழுவதும் ஆண்டவருக்காக ஏங்கி நின்றது.
3. அக்காலத்தில் சாமுவேல் எல்லா இஸ்ராயேலர்களையும் பார்த்து, "நீங்கள் முழு இதயத்துடன் ஆண்டவரிடம் திரும்பி வருவதாயிருந்தால், உங்கள் நடுவிலிருந்து பாவால், அஸ்தரோத் என்ற அன்னிய தெய்வங்களை அகற்றிவிடுங்கள். ஆண்டவர்பால் உங்கள் இதயத்தைத் திருப்பி, அவரை மட்டும் வழிபட்டு வாருங்கள். அவரும் பிலிஸ்தியர் கையினின்று உங்களை மீட்பார்" என்றார்.
4. ஆகையால் இஸ்ராயேல் மக்கள் பாவாலையும் அஸ்தரோத்தையும் தள்ளிவிட்டு, ஆண்டவரை மட்டும் தொழுது வந்தனர்.
5. பிறகு சாமுவேல், "நான் உங்களுக்காக ஆண்டவரை மன்றாடும்படி, மாஸ்பாவில் இஸ்ராயேலர் அனைவரையும் ஒன்று திரட்டுங்கள்" என்று சொன்னார்.
6. அப்படியே அவர்கள் மாஸ்பாவில் கூடி, நீரை மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றினார்கள். அன்று நோன்பு காத்து, "ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தோம்" என்று அங்குச் சொன்னார்கள். சாமுவேல் மாஸ்பாவில் இஸ்ராயேல் மக்களுக்கு நீதி வழங்கினார்.
7. அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவில் கூடியிருக்கிறார்கள் என்று பிலிஸ்தியர் கேள்விப்பட்டு பிலிஸ்தியரின் ஆளுநர்கள் இஸ்ராயேல் மேல் படையெடுத்தார்கள். இஸ்ராயேல் மக்கள் அதைக் கேள்விப்பட்டுப் பிலிஸ்தியருக்கு அஞ்சினார்கள்.
8. மேலும், சாமுவேலை நோக்கி, "பிலிஸ்தியர் கையினின்று எங்களை மீட்கும்படி நம் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் நீர் எமக்காக மன்றாடுவதை விட்டு விடாதேயும்" என்று கூறினர்.
9. அப்போது சாமுவேல் பால் குடிக்கிற ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதை ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்தார். இஸ்ராயேலுக்காக ஆண்டவரை நோக்கி மன்றாடினார். ஆண்டவரும் அவரது மன்றாட்டைக் கேட்டருளினார்.
10. சாமுவேல் பலி ஒப்புக் கொடுக்கையில் பிலிஸ்தியர் இஸ்ராயேலருடன் போரிடும்படி நேரிட்டது; அன்று ஆண்டவர் பிலிஸ்தியர் மேல் பேரோசையுடன் இடி இடிக்கச் செய்து அவர்களை அச்சுறுத்தினார். அவர்கள் இஸ்ராயேலர் முன் மாண்டார்கள்.
11. இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவினின்று புறப்பட்டுப் பெத்காருக்குக்கீழ் இருந்த இடம் வரை பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்து வெட்டி வீழ்த்தினார்கள்.
12. சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மாஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவில் அதை நிறுத்திவைத்து, அந்த இடத்திற்குச் சனுகுப்பாறை என்று பெயரிட்டார்: "இதுவரை ஆண்டவர் நமக்கு உதவியாய் இருந்தார்" என்று சொன்னார்.
13. பிலிஸ்தியர் தாழ்வுற்றனர். அதற்குமேல் அவர்கள் இஸ்ராயேலின் எல்லைகளில் வரத் துணியவில்லை; சாமுவேலின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருடைய கை பிலிஸ்தியர்மேல் இருந்தது.
14. பிலிஸ்தியர் இஸ்ராயேல் கையிலிருந்து கெத் முதல் அக்கரோன் வரை கைப்பற்றின நகர்களும் அவற்றின் எல்லைகளும் இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்டன. பிலிஸ்தியர் கையினின்று சாமுவேல் இஸ்ராயேலை மீட்டார். அமோறையருக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே அமைதி நிலவி வந்தது.
15. சாமுவேல் தம் வாழ்நாள் முழுதும் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்தார்.
16. ஆண்டுதோறும் அவர் பேத்தல், கல்கலா, மாஸ்பாவிற்குச் சுற்றுப்பயணம் செய்து, அவ்விடங்களில் இஸ்ராயேலுக்கு நீதி வழங்குவார்.
17. பிறகு ராமாத்தாவுக்குத் திரும்பி வருவார். அங்கு அவருடைய வீடு இருந்தது. அங்கும் அவர் இஸ்ராயேலுக்கு நீதி வழங்குவது வழக்கம். அங்கு அவர் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 31
1 சாமுவேல் 7:32
1 அப்படியே கரியாத்தியாரிம் மனிதர்கள் வந்து ஆண்டவருடைய பேழையை எடுத்துப் போய்க் காபாவிலே அபினதாப் வீட்டில் நிறுவினார்கள். மேலும் அவன் மகன் எலெயசாரை ஆண்டவருடைய பேழையைக் காத்துக் கொள்ளும்படி அபிஷுகம் செய்தார்கள். 2 ஆண்டவருடைய பேழை கரியாத்தியாரிமில் நிறுவப்பட்டபின், வெகுகாலம் அதாவது இருபது ஆண்டுகள் கடந்து போயின. அப்போது இஸ்ராயேல் வீடு முழுவதும் ஆண்டவருக்காக ஏங்கி நின்றது. 3 அக்காலத்தில் சாமுவேல் எல்லா இஸ்ராயேலர்களையும் பார்த்து, "நீங்கள் முழு இதயத்துடன் ஆண்டவரிடம் திரும்பி வருவதாயிருந்தால், உங்கள் நடுவிலிருந்து பாவால், அஸ்தரோத் என்ற அன்னிய தெய்வங்களை அகற்றிவிடுங்கள். ஆண்டவர்பால் உங்கள் இதயத்தைத் திருப்பி, அவரை மட்டும் வழிபட்டு வாருங்கள். அவரும் பிலிஸ்தியர் கையினின்று உங்களை மீட்பார்" என்றார். 4 ஆகையால் இஸ்ராயேல் மக்கள் பாவாலையும் அஸ்தரோத்தையும் தள்ளிவிட்டு, ஆண்டவரை மட்டும் தொழுது வந்தனர். 5 பிறகு சாமுவேல், "நான் உங்களுக்காக ஆண்டவரை மன்றாடும்படி, மாஸ்பாவில் இஸ்ராயேலர் அனைவரையும் ஒன்று திரட்டுங்கள்" என்று சொன்னார். 6 அப்படியே அவர்கள் மாஸ்பாவில் கூடி, நீரை மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றினார்கள். அன்று நோன்பு காத்து, "ஆண்டவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தோம்" என்று அங்குச் சொன்னார்கள். சாமுவேல் மாஸ்பாவில் இஸ்ராயேல் மக்களுக்கு நீதி வழங்கினார். 7 அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவில் கூடியிருக்கிறார்கள் என்று பிலிஸ்தியர் கேள்விப்பட்டு பிலிஸ்தியரின் ஆளுநர்கள் இஸ்ராயேல் மேல் படையெடுத்தார்கள். இஸ்ராயேல் மக்கள் அதைக் கேள்விப்பட்டுப் பிலிஸ்தியருக்கு அஞ்சினார்கள். 8 மேலும், சாமுவேலை நோக்கி, "பிலிஸ்தியர் கையினின்று எங்களை மீட்கும்படி நம் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் நீர் எமக்காக மன்றாடுவதை விட்டு விடாதேயும்" என்று கூறினர். 9 அப்போது சாமுவேல் பால் குடிக்கிற ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதை ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்தார். இஸ்ராயேலுக்காக ஆண்டவரை நோக்கி மன்றாடினார். ஆண்டவரும் அவரது மன்றாட்டைக் கேட்டருளினார். 10 சாமுவேல் பலி ஒப்புக் கொடுக்கையில் பிலிஸ்தியர் இஸ்ராயேலருடன் போரிடும்படி நேரிட்டது; அன்று ஆண்டவர் பிலிஸ்தியர் மேல் பேரோசையுடன் இடி இடிக்கச் செய்து அவர்களை அச்சுறுத்தினார். அவர்கள் இஸ்ராயேலர் முன் மாண்டார்கள். 11 இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவினின்று புறப்பட்டுப் பெத்காருக்குக்கீழ் இருந்த இடம் வரை பிலிஸ்தியரைப் பின்தொடர்ந்து வெட்டி வீழ்த்தினார்கள். 12 சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மாஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவில் அதை நிறுத்திவைத்து, அந்த இடத்திற்குச் சனுகுப்பாறை என்று பெயரிட்டார்: "இதுவரை ஆண்டவர் நமக்கு உதவியாய் இருந்தார்" என்று சொன்னார். 13 பிலிஸ்தியர் தாழ்வுற்றனர். அதற்குமேல் அவர்கள் இஸ்ராயேலின் எல்லைகளில் வரத் துணியவில்லை; சாமுவேலின் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருடைய கை பிலிஸ்தியர்மேல் இருந்தது. 14 பிலிஸ்தியர் இஸ்ராயேல் கையிலிருந்து கெத் முதல் அக்கரோன் வரை கைப்பற்றின நகர்களும் அவற்றின் எல்லைகளும் இஸ்ராயேலுக்குக் கொடுக்கப்பட்டன. பிலிஸ்தியர் கையினின்று சாமுவேல் இஸ்ராயேலை மீட்டார். அமோறையருக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே அமைதி நிலவி வந்தது. 15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுதும் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்தார். 16 ஆண்டுதோறும் அவர் பேத்தல், கல்கலா, மாஸ்பாவிற்குச் சுற்றுப்பயணம் செய்து, அவ்விடங்களில் இஸ்ராயேலுக்கு நீதி வழங்குவார். 17 பிறகு ராமாத்தாவுக்குத் திரும்பி வருவார். அங்கு அவருடைய வீடு இருந்தது. அங்கும் அவர் இஸ்ராயேலுக்கு நீதி வழங்குவது வழக்கம். அங்கு அவர் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 31
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References