தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 சாமுவேல்
1. ஆண்டவருடைய பேழை பிலிஸ்தியர் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.
2. பிலிஸ்தியர் தங்கள் குருக்களையும் சூனியக்காரர்களையும் அழைத்து, "ஆண்டவருடைய பேழையைப் பற்றி என்ன செய்யலாம்? அதை அதன் இருப்பிடத்திற்கு எப்படி அனுப்பலாம்?" என்று கேட்டனர்.
3. அதற்கு அவர்கள், "இஸ்ராயேல் கடவுளின் பேழையை அனுப்ப வேண்டுமானால், அதை வெறுமையாய் அனுப்ப வேண்டாம். ஆனால், நீங்கள் உங்கள் பாவங்களுக்காக அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்துங்கள். அப்போது நலம் பெறுவீர்கள். அவருடைய கை உங்களை விட்டு நீங்காது இருந்ததின் காரணத்தை அறிந்து கொள்வீர்கள்" என்றனர்.
4. பாவத்திற்காக அவருக்கு நாங்கள் செலுத்தவேண்டியது என்ன?" என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அதற்கு மறுமொழியாகக் கூறினதாவது:
5. உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரே நோய் கண்டிருப்பதனால், பிலிஸ்தியர் மாநிலங்களின் கணக்குப்படி ஐந்து பொன் குதங்களும் ஐந்து பொன் எலிகளும் செய்யக்கடவீர்கள். உங்கள் குதங்களின் உருவங்களையும், நிலத்தைப் பாழ்படுத்தி வரும் எலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ராயேல் கடவுளுக்கு ஒப்பு கொடுத்து அவரை மாட்சிப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிடமிருந்தும் உங்கள் தேவர்களினின்றும் உங்கள் பூமியினின்றும் தமது கைவன்மையை நீக்குவார்.
6. எகிப்து நாட்டாரும் பாரவோனும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்தினதுபோல், உங்கள் இதயங்களை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்கள் வதைக்கப்பட்ட பின் இஸ்ராயேலர்களை அனுப்பிவிட நேரிட்டதே! அவர்களும் புறப்பட்டுச் செல்லவில்லையா?
7. இப்பொழுது புதுவண்டி ஒன்றைச் செய்து இன்னும் நுகத்தடி வைக்கப்படாத இரண்டு கறவைப் பசுக்களை அதில் பூட்டுங்கள்; அவற்றின் கன்றுகளை வீட்டில் அடைத்து வையுங்கள்.
8. ஆண்டவருடைய பேழையை எடுத்து வண்டியில் ஏற்றுங்கள். குற்றத்துக்குப் பரிகாரமாக அதற்குச் செலுத்துகிற தங்கப் பொருட்களைச் சிறு பெட்டியில் அடக்கி அதன் பக்கத்திலே வைத்துப் போகும்படி விடுங்கள்.
9. அப்பொழுது, அது தன் எல்லைகளின் வழியாய்ப் பெத்சாமேசை நோக்கி போனால், இப்பெரிய தீங்கை அவரே நமக்குச் செய்தார். வேறுவிதமானால், அவடைய கை ஒருபோதும் நம்மை தொட்டதில்லை; தற்செயலாய் நடந்தது என்று அறிந்து கொள்வீர்கள்."
10. அவ்விதமாய் அவர்கள் செய்தார்கள். கன்றுகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்த இரு பசுக்களைக் கொணர்ந்து வண்டியில் பூட்டி, அவற்றின் கன்றுகளை வீட்டில் அடைத்து வைத்தார்கள்.
11. ஆண்டவருடைய பெட்டகத்தையும், பொன் எலிகளும் குதங்களின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் வண்டியில் வைத்தார்கள்.
12. பசுக்களோ பெத்சாமேசுக்குச் செல்லும் வழியாய் நேரே சென்று நடந்து கொண்டும் கதறிக்கொண்டும் ஒரே நடையாய் முன்சென்றன. வலமோ இடமோ திரும்பவேயில்லை. பிலிஸ்தியரின் ஆளுநர்களோ பெத்சாமேஸ் எல்லைகள் வரை பின் சென்றனர்.
13. அப்போது பெத்சாமித்தர் பள்ளத்தாக்கில் கோதுமை அறுத்துக் கொண்டிருந்தனர். கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது பேழையைக் கண்டனர். அதைப் பார்த்ததினால் மகிழ்ச்சி அடைந்தனர்.
14. வண்டி பெத்சாமித்தனாகிய யோசுவாவின் வயலுக்கு வந்து அங்கே நின்று விட்டது. அங்கு ஒரு பெரும் பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றின் மேல் பசுக்களை வைத்து ஆண்டவருக்குத் தகனப்பலி செலூததினார்கள்.
15. லேவியர் கடவுளின் பேழையையும் அதன் அருகில் தங்கப் பொருட்கள் இருந்த சிறு பெட்டியையும் இறக்கி, அந்தப் பாறைகளின் மேல் வைத்தனர். பெத்சாமித்த மனிதர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளை ஒப்புக் கொடுத்தனர். அன்றே சமாதானப் பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.
16. பிலிஸ்தியரில் ஐந்து ஆளுநர்கள் இதைப் பார்த்து விட்டு அன்றே அக்கரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.
17. பிலிஸ்தியர் குற்றத்திற்காக அசோத், காஜா, அஸ்கலோன், கெத், அக்கரோன் ஆகிய நகர்கள் பொன் குதங்களைச் செலுத்தின.
18. பிலிஸ்தியர் தங்கள் நகர்களின் எண்ணிக்கைப்படி பொன் எலிகளையும் செலுத்தினர். கடல் துவக்கி ஆண்டவரின் பேழை இறக்கி வைக்கப்பட்ட பெரிய ஆபேல் வரையிலுமுள்ள ஐந்து மாநிலங்களில் இருந்த மதில் உள்ளதும், இல்லாததுமான நகர்கள் எல்லாம் பொன் எலிகளைச் செலுத்தி வந்தன. கடவுளின் பேழை இன்று வரை பெத்சாமித்தனாகிய யோசுவாவின் வயலில் இருக்கின்றது.
19. தம்முடைய பேழையைப் பார்த்தபடியால், ஆண்டவர் பெத்சாமேஸ் மனிதர்களைத் தண்டித்தார். பெருமக்களில் எழுபது பேரையும், சாதாரண மக்களில் ஐம்பதாயிரம் பேரையும் கொன்றார். ஆண்டவர் மக்களைப் பெரும் கொள்ளை நோயால் தண்டித்ததால், ஊரார் அழுதனர்.
20. பெத்சாமேஸ் மனிதர்கள், "ஆண்டவராகிய இத்தூய கடவுள் திருமுன் நிற்கக் கூடியவன் யார்? அவர் நம்மை விட்டு வேறுயாரிடம் செல்வார்?" என்றனர்.
21. பிறகு அவர்கள் கரியாத்தியாரிம் குடிகளுக்குத் தூதர்களை அனுப்பி, "பிலிஸ்தியர் ஆண்டவருடைய பேழையைத் திரும்பக் கொண்டு வந்துள்ளார்கள். நீங்கள் வந்து அதை உங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லச் சொன்னார்கள்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 31
1 ஆண்டவருடைய பேழை பிலிஸ்தியர் நாட்டில் ஏழு மாதம் இருந்தது. 2 பிலிஸ்தியர் தங்கள் குருக்களையும் சூனியக்காரர்களையும் அழைத்து, "ஆண்டவருடைய பேழையைப் பற்றி என்ன செய்யலாம்? அதை அதன் இருப்பிடத்திற்கு எப்படி அனுப்பலாம்?" என்று கேட்டனர். 3 அதற்கு அவர்கள், "இஸ்ராயேல் கடவுளின் பேழையை அனுப்ப வேண்டுமானால், அதை வெறுமையாய் அனுப்ப வேண்டாம். ஆனால், நீங்கள் உங்கள் பாவங்களுக்காக அவருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்துங்கள். அப்போது நலம் பெறுவீர்கள். அவருடைய கை உங்களை விட்டு நீங்காது இருந்ததின் காரணத்தை அறிந்து கொள்வீர்கள்" என்றனர். 4 பாவத்திற்காக அவருக்கு நாங்கள் செலுத்தவேண்டியது என்ன?" என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அதற்கு மறுமொழியாகக் கூறினதாவது: 5 உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரே நோய் கண்டிருப்பதனால், பிலிஸ்தியர் மாநிலங்களின் கணக்குப்படி ஐந்து பொன் குதங்களும் ஐந்து பொன் எலிகளும் செய்யக்கடவீர்கள். உங்கள் குதங்களின் உருவங்களையும், நிலத்தைப் பாழ்படுத்தி வரும் எலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ராயேல் கடவுளுக்கு ஒப்பு கொடுத்து அவரை மாட்சிப்படுத்துங்கள். ஒருவேளை அவர் உங்களிடமிருந்தும் உங்கள் தேவர்களினின்றும் உங்கள் பூமியினின்றும் தமது கைவன்மையை நீக்குவார். 6 எகிப்து நாட்டாரும் பாரவோனும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்தினதுபோல், உங்கள் இதயங்களை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்? அவர்கள் வதைக்கப்பட்ட பின் இஸ்ராயேலர்களை அனுப்பிவிட நேரிட்டதே! அவர்களும் புறப்பட்டுச் செல்லவில்லையா? 7 இப்பொழுது புதுவண்டி ஒன்றைச் செய்து இன்னும் நுகத்தடி வைக்கப்படாத இரண்டு கறவைப் பசுக்களை அதில் பூட்டுங்கள்; அவற்றின் கன்றுகளை வீட்டில் அடைத்து வையுங்கள். 8 ஆண்டவருடைய பேழையை எடுத்து வண்டியில் ஏற்றுங்கள். குற்றத்துக்குப் பரிகாரமாக அதற்குச் செலுத்துகிற தங்கப் பொருட்களைச் சிறு பெட்டியில் அடக்கி அதன் பக்கத்திலே வைத்துப் போகும்படி விடுங்கள். 9 அப்பொழுது, அது தன் எல்லைகளின் வழியாய்ப் பெத்சாமேசை நோக்கி போனால், இப்பெரிய தீங்கை அவரே நமக்குச் செய்தார். வேறுவிதமானால், அவடைய கை ஒருபோதும் நம்மை தொட்டதில்லை; தற்செயலாய் நடந்தது என்று அறிந்து கொள்வீர்கள்." 10 அவ்விதமாய் அவர்கள் செய்தார்கள். கன்றுகளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்த இரு பசுக்களைக் கொணர்ந்து வண்டியில் பூட்டி, அவற்றின் கன்றுகளை வீட்டில் அடைத்து வைத்தார்கள். 11 ஆண்டவருடைய பெட்டகத்தையும், பொன் எலிகளும் குதங்களின் உருவங்களும் வைத்திருந்த பெட்டியையும் வண்டியில் வைத்தார்கள். 12 பசுக்களோ பெத்சாமேசுக்குச் செல்லும் வழியாய் நேரே சென்று நடந்து கொண்டும் கதறிக்கொண்டும் ஒரே நடையாய் முன்சென்றன. வலமோ இடமோ திரும்பவேயில்லை. பிலிஸ்தியரின் ஆளுநர்களோ பெத்சாமேஸ் எல்லைகள் வரை பின் சென்றனர். 13 அப்போது பெத்சாமித்தர் பள்ளத்தாக்கில் கோதுமை அறுத்துக் கொண்டிருந்தனர். கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது பேழையைக் கண்டனர். அதைப் பார்த்ததினால் மகிழ்ச்சி அடைந்தனர். 14 வண்டி பெத்சாமித்தனாகிய யோசுவாவின் வயலுக்கு வந்து அங்கே நின்று விட்டது. அங்கு ஒரு பெரும் பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி அவற்றின் மேல் பசுக்களை வைத்து ஆண்டவருக்குத் தகனப்பலி செலூததினார்கள். 15 லேவியர் கடவுளின் பேழையையும் அதன் அருகில் தங்கப் பொருட்கள் இருந்த சிறு பெட்டியையும் இறக்கி, அந்தப் பாறைகளின் மேல் வைத்தனர். பெத்சாமித்த மனிதர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலிகளை ஒப்புக் கொடுத்தனர். அன்றே சமாதானப் பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர். 16 பிலிஸ்தியரில் ஐந்து ஆளுநர்கள் இதைப் பார்த்து விட்டு அன்றே அக்கரோனுக்குத் திரும்பிப் போனார்கள். 17 பிலிஸ்தியர் குற்றத்திற்காக அசோத், காஜா, அஸ்கலோன், கெத், அக்கரோன் ஆகிய நகர்கள் பொன் குதங்களைச் செலுத்தின. 18 பிலிஸ்தியர் தங்கள் நகர்களின் எண்ணிக்கைப்படி பொன் எலிகளையும் செலுத்தினர். கடல் துவக்கி ஆண்டவரின் பேழை இறக்கி வைக்கப்பட்ட பெரிய ஆபேல் வரையிலுமுள்ள ஐந்து மாநிலங்களில் இருந்த மதில் உள்ளதும், இல்லாததுமான நகர்கள் எல்லாம் பொன் எலிகளைச் செலுத்தி வந்தன. கடவுளின் பேழை இன்று வரை பெத்சாமித்தனாகிய யோசுவாவின் வயலில் இருக்கின்றது. 19 தம்முடைய பேழையைப் பார்த்தபடியால், ஆண்டவர் பெத்சாமேஸ் மனிதர்களைத் தண்டித்தார். பெருமக்களில் எழுபது பேரையும், சாதாரண மக்களில் ஐம்பதாயிரம் பேரையும் கொன்றார். ஆண்டவர் மக்களைப் பெரும் கொள்ளை நோயால் தண்டித்ததால், ஊரார் அழுதனர். 20 பெத்சாமேஸ் மனிதர்கள், "ஆண்டவராகிய இத்தூய கடவுள் திருமுன் நிற்கக் கூடியவன் யார்? அவர் நம்மை விட்டு வேறுயாரிடம் செல்வார்?" என்றனர். 21 பிறகு அவர்கள் கரியாத்தியாரிம் குடிகளுக்குத் தூதர்களை அனுப்பி, "பிலிஸ்தியர் ஆண்டவருடைய பேழையைத் திரும்பக் கொண்டு வந்துள்ளார்கள். நீங்கள் வந்து அதை உங்கள் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று சொல்லச் சொன்னார்கள்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References