தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 சாமுவேல்
1. ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் நிகழ்ந்ததாவது: அம்மோனியனாகிய நாவாஸ் எழுந்து காலாதில் ஜாபேசுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினான். ஜாபேசின் மனிதர்கள் எல்லாம் நாவாசை நோக்கி, "எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்; அப்போது நாங்கள் உனக்குப் பணிவிடை செய்வோம்" என்று சொன்னார்கள்.
2. அம்மோனியனாகிய நாவாஸ் மறுமொழியாக, "உங்கள் எல்லோருடைய வலக்கண்களையும் பிடுங்குவேன்; இஸ்ராயேலர்அனைவரும் உங்களைப் பழிக்கச் செய்வேன். இது தான் நான் உங்களுடன் செய்யும் உடன்படிக்கை" என்றான்.
3. அதற்கு ஜாபேசின் மூப்பர்கள், "இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் தூதர்களை அனுப்பும்படி எங்களுக்கு ஏழுநாள் தவணை கொடு. எங்களைக் காப்பாற்ற ஒருவனும் இல்லாவிட்டால் உன்னிடம் திரும்பி வருவோம்" என்றனர்.
4. தூதர்கள் சவுலின் ஊராகிய காபாவிற்கு வந்து, மக்கள் கேட்க அந்தச் செய்திகளை எல்லாம் சொன்னார்கள். மக்கள் அனைவரும் கதறி அழுதார்கள்.
5. அவர்கள் அழுது கொண்டிருந்த நேரத்தில் சவுல் வயலினின்று எருதுகளை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். "மக்கள் அழக் காரணம் என்ன?" என்றார். அவர்கள் ஜாபேசின் மனிதர்கள் தங்களுக்குச் சொன்னவற்றை அவருக்கு விவரித்தார்கள்.
6. சவுல் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், ஆண்டவருடைய ஆவி அவர் மேல் இறங்கினது. அவர் மிகுந்த கோபமுற்று,
7. தன் இரு எருதுகளையும் பிடித்துத் துண்டு துண்டாய் வெட்டி அந்தத் தூதர்கள் கையில் கொடுத்து, இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் அனுப்பி, "சவுலையும் சாமுவேலையும் பின்செல்லாதவனுடைய மாடுகளுக்கு இவ்வாறே நேரும்" என்று சொல்லச் சொன்னார். மக்கள் ஆண்டவர்பால் அச்சம் கொண்டனர். ஒரே மனிதனைப்போல் அவர்கள் வெளிப்போந்தனர்.
8. சவுல் அவர்களைப் பெசேக்கில் கணக்கிட்டார். இஸ்ராயேல் மக்கள் மூன்று இலட்சம் பேரும், யூதா புதல்வர்கள் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.
9. அவர்கள் வந்த தூதர்களைப் பார்த்து, "நீங்கள் 'நாளைக்கு வெயில் கடுமையாய் இருக்கும் போது உங்களுக்கு மீட்புக் கிடைக்கும்' என்று காலாத்தின் ஜாபேசிலிருக்கிற மனிதர்களுக்குச் சொல்வீர்கள்" என்று சொன்னார்கள். தூதர்கள் வந்து ஜாபேஸ் மனிதர்களுக்குத் தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
10. பிறகு ஜாபேசியர், "காலையில் உங்களிடம் வருவோம். உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் எங்களுக்குச் செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.
11. மறுநாள் சவுல் மக்களை மூன்று படையாகப் பிரித்து விடியற் காலையில் பாளையத்திற்குள் வந்து வெயில் கடுமையாகும் வரை அம்மோனியரை முறியடித்தார். எஞ்சியோர் இருவர் இருவராய்ச் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
12. அப்பொழுது மக்கள் சாமுவேலை நோக்கி, 'சவுலா நம்மை ஆளப்போகிறான்' என்று கேட்டவர்கள் யார்? அம்மனிதர்களைக் கொண்டு வாருங்கள்; அவர்களைக் கொல்வோம்" என்றனர்.
13. அதற்குச் சவுல், "இன்று ஆண்டவர் இஸ்ராயேலை மீட்டபடியால் ஒருவனையும் கொல்லக் கூடாது" என்று சொன்னார்.
14. அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து, வாருங்கள், கல்கலாவுக்குப் போவோம்; அங்கே சவுலை அரசனாக ஏற்படுத்துவோம்" என்று சொன்னார்.
15. மக்கள் அனைவரும் கல்கலாவுக்குப் போய் அங்கு ஆண்டவர் திருமுன் சவுலை அரசனாக்கினார்கள்; ஆண்டவருக்குச் சமாதானப் பலிகளைச் செலுத்தினார்கள். அங்கே சவுல் மகிழ்ச்சி கொண்டாடினார்; இஸ்ராயேல் மனிதர்கள் எல்லாரும் இன்னும் அதிகமாய் இன்புற்றனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 31
1 சாமுவேல் 11:43
1 ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பின் நிகழ்ந்ததாவது: அம்மோனியனாகிய நாவாஸ் எழுந்து காலாதில் ஜாபேசுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினான். ஜாபேசின் மனிதர்கள் எல்லாம் நாவாசை நோக்கி, "எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்; அப்போது நாங்கள் உனக்குப் பணிவிடை செய்வோம்" என்று சொன்னார்கள். 2 அம்மோனியனாகிய நாவாஸ் மறுமொழியாக, "உங்கள் எல்லோருடைய வலக்கண்களையும் பிடுங்குவேன்; இஸ்ராயேலர்அனைவரும் உங்களைப் பழிக்கச் செய்வேன். இது தான் நான் உங்களுடன் செய்யும் உடன்படிக்கை" என்றான். 3 அதற்கு ஜாபேசின் மூப்பர்கள், "இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் தூதர்களை அனுப்பும்படி எங்களுக்கு ஏழுநாள் தவணை கொடு. எங்களைக் காப்பாற்ற ஒருவனும் இல்லாவிட்டால் உன்னிடம் திரும்பி வருவோம்" என்றனர். 4 தூதர்கள் சவுலின் ஊராகிய காபாவிற்கு வந்து, மக்கள் கேட்க அந்தச் செய்திகளை எல்லாம் சொன்னார்கள். மக்கள் அனைவரும் கதறி அழுதார்கள். 5 அவர்கள் அழுது கொண்டிருந்த நேரத்தில் சவுல் வயலினின்று எருதுகளை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். "மக்கள் அழக் காரணம் என்ன?" என்றார். அவர்கள் ஜாபேசின் மனிதர்கள் தங்களுக்குச் சொன்னவற்றை அவருக்கு விவரித்தார்கள். 6 சவுல் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், ஆண்டவருடைய ஆவி அவர் மேல் இறங்கினது. அவர் மிகுந்த கோபமுற்று, 7 தன் இரு எருதுகளையும் பிடித்துத் துண்டு துண்டாய் வெட்டி அந்தத் தூதர்கள் கையில் கொடுத்து, இஸ்ராயேல் எல்லைகள் முழுவதற்கும் அனுப்பி, "சவுலையும் சாமுவேலையும் பின்செல்லாதவனுடைய மாடுகளுக்கு இவ்வாறே நேரும்" என்று சொல்லச் சொன்னார். மக்கள் ஆண்டவர்பால் அச்சம் கொண்டனர். ஒரே மனிதனைப்போல் அவர்கள் வெளிப்போந்தனர். 8 சவுல் அவர்களைப் பெசேக்கில் கணக்கிட்டார். இஸ்ராயேல் மக்கள் மூன்று இலட்சம் பேரும், யூதா புதல்வர்கள் முப்பதாயிரம் பேரும் இருந்தனர். 9 அவர்கள் வந்த தூதர்களைப் பார்த்து, "நீங்கள் 'நாளைக்கு வெயில் கடுமையாய் இருக்கும் போது உங்களுக்கு மீட்புக் கிடைக்கும்' என்று காலாத்தின் ஜாபேசிலிருக்கிற மனிதர்களுக்குச் சொல்வீர்கள்" என்று சொன்னார்கள். தூதர்கள் வந்து ஜாபேஸ் மனிதர்களுக்குத் தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். 10 பிறகு ஜாபேசியர், "காலையில் உங்களிடம் வருவோம். உங்களுக்கு விருப்பமானபடி நீங்கள் எங்களுக்குச் செய்யுங்கள்" என்று சொன்னார்கள். 11 மறுநாள் சவுல் மக்களை மூன்று படையாகப் பிரித்து விடியற் காலையில் பாளையத்திற்குள் வந்து வெயில் கடுமையாகும் வரை அம்மோனியரை முறியடித்தார். எஞ்சியோர் இருவர் இருவராய்ச் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறடிக்கப்பட்டார்கள். 12 அப்பொழுது மக்கள் சாமுவேலை நோக்கி, 'சவுலா நம்மை ஆளப்போகிறான்' என்று கேட்டவர்கள் யார்? அம்மனிதர்களைக் கொண்டு வாருங்கள்; அவர்களைக் கொல்வோம்" என்றனர். 13 அதற்குச் சவுல், "இன்று ஆண்டவர் இஸ்ராயேலை மீட்டபடியால் ஒருவனையும் கொல்லக் கூடாது" என்று சொன்னார். 14 அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து, வாருங்கள், கல்கலாவுக்குப் போவோம்; அங்கே சவுலை அரசனாக ஏற்படுத்துவோம்" என்று சொன்னார். 15 மக்கள் அனைவரும் கல்கலாவுக்குப் போய் அங்கு ஆண்டவர் திருமுன் சவுலை அரசனாக்கினார்கள்; ஆண்டவருக்குச் சமாதானப் பலிகளைச் செலுத்தினார்கள். அங்கே சவுல் மகிழ்ச்சி கொண்டாடினார்; இஸ்ராயேல் மனிதர்கள் எல்லாரும் இன்னும் அதிகமாய் இன்புற்றனர்.
மொத்தம் 31 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 31
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References