தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 இராஜாக்கள்
1. இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்றெண்பதாம் ஆண்டிலும், சாலமோன் இஸ்ராயேலின் அரசரான நான்காம் ஆண்டு சியோ மாதமாகிய இரண்டாவது மாதத்திலும் ஆண்டவருடைய ஆலய வேலை ஆரம்பமானது.
2. சாலமோன் அரசர் கட்டின ஆலயத்தின் நீளம் அறுபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் முப்பது முழம்.
3. ஆலய முன்மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், பத்து முழ அகலமும் கொண்டிருந்தது.
4. அவர் ஆலயத்திற்கு வளைவான சன்னல்களை அமைத்தார்.
5. கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்கும் கடவுள் சந்நிதிக்கும் அருகில் அடைப்பு மதிலின் மேல் அறைகளையும், கோயிலைச் சுற்றித் தாழ்வாரங்களையும் கட்டினார்.
6. முதலடுக்கு அறைகள் ஐந்து முழ அகலமும், இரண்டாமடுக்கு அறைகள் ஆறு முழ அகலமும், மூன்றாமடுக்கு அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அவை கோயிலின் சுவர்களிலே தாங்காத படி அவர் சுற்றிலும் வெளிப்புறமாக உத்திரங்களை அமைத்தார்.
7. செதுக்கிச் சீர்படுத்தப்பெற்ற கற்களால் கோயில் கட்டப்பட்டது. ஆகையால், அது கட்டப்பட்ட போது, சுத்தியல்கள், கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அங்கே கேட்கப்படவில்லை.
8. இரண்டாம் மாடிக்கு போகிற வாயில் கோயிலின் வலப்புறம் இருந்தது. சுழற்படிகளால் இரண்டாம் மாடிக்கும், இரண்டாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்கும் ஏற வசதி அமைக்கப் பெற்றிருந்தது.
9. இவ்விதமாய் அவர் கோயிலைக் கட்டிக் கேதுரு மரப்பலகைகளால் அதை மச்சுப்பாவி முடித்தார்.
10. அவர் ஐந்து முழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின் மேல் எங்கும் கட்டுவித்தார். அவை கேதுரு மரங்களால் மூடப்பட்டிருந்தன.
11. அப்போது கடவுள் சாலமோனுடன் உரையாடி அவரை நோக்கி,
12. நீ நம் கட்டளைகளின்படி ஒழுகி, நம் தீர்ப்புக்களை நிறைவேற்றி, நம் கற்பனைகளின்படி அணுப்பிசகாது நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோயிலைக் குறித்து நாம் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன நமது வார்த்தையை உன்னில் நிறைவேற்றுவோம்.
13. இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழ்ந்து நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கைவிடாதிருப்போம்" என்றார்.
14. அப்படியே சாலமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தார்.
15. ஆலயச் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் தொடங்கி மேல் மச்சு வரை கேதுருப் பலகைகளால் மூடினார். மேலும் கோயிலின் கீழ்த்தளத்தைச் சப்பீன் பலகைகளால் பாவினார்.
16. ஆனால் ஆலயத்தின் பின்புறத்தில், கீழ்த்தளம் முதல் மேல் தளம் வரை இருபது முழ உயரத்துக்குக் கேதுரு மரப் பலகைகளால் மூடப்பட்ட ஓர் இடத்தை அமைத்துத் திருத்தலத்தின் உட்புறத்தை அதிபரிசுத்த தலமாக ஏற்படுத்தினார்.
17. அவ்விடத்திற்கு முன்னிருந்த ஆலய நீளம் நாற்பது முழம்.
18. இப்படி ஆலயத்தின் உட்புறமெங்கும் கேதுரு மரப்பலகைகளால் மூடியிருந்ததும் தவிர, பலகைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடங்கள் சிற்ப சித்திரக் கலைகளால் அழகு செய்யப் பட்டிருந்தன. இப்படியே பார்வைக்கு ஒரு கல்லாவது காணப்படாமல் கோயில் முழுவதும் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது.
19. ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை வைக்க அவர் ஆலயத்தின் உட்புறத்தில் திருத்தலத்தை அமைத்திருந்தார்.
20. திருத்தலம் மட்டும் இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது; அதைப் பசும் பொன்னால் மூடினார்; பலி பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார்.
21. திருத்தலத்திற்கு முன் இருந்த ஆலயத்தையும் பசும் பொன்னால் மூடி, பொன் அணிகள் தொடுக்கப்பட்ட தகடுகளைத் தொங்க விட்டார்.
22. இப்படி ஆலயம் முழுவதும் பொன்னால் மூடப்படாத இடம் ஒன்றும் இல்லை. திருத்தலத்திற்கு முன் இருந்த பலிபீடம் முழுவதையும் பொன்னால் மூடினார்.
23. அவர் திருத்தலத்தில் ஒலிவ மரங்களால் பத்து முழ உயரமான இரு கெருபீம்களைச் செய்து வைத்தார்.
24. கெருபீம்களின் இறக்கைகளுடைய நீளம் ஐந்து முழம்; இறக்கைகளின் முனைகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம். மற்றக் கெருபீமும் பத்து முழம்.
25. இரு கெருபீம்களும் ஒரே அளவாயும், ஒரே வேலைப்பாடுடையனவாயும் இருந்தன.
26. அதாவது ஒரு கெருபீமும் அதே அளவாய் இருந்தது.
27. அவர் அக்கெருபீம்களை உள் ஆலயத்தின் நடுவே வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்திருந்ததினால், ஒரு கெருபீமின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரிலும், மற்றக் கெருபீமின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியாயிருந்தன. ஆலயத்தின் நடுவில் அவற்றின் இறக்கைகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன.
28. அவர் அக்கெருபீம்களையும் பொன்னால் மூடினார்.
29. ஆலயத்தின் சுவர்கள் முழுவதும், சுற்றிலும் தொங்கிக்கொண்டிருந்த கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளால் அழகு செய்யப்பட்டிருந்தன.
30. ஆலயத்துத் தளங்களையும் அவர் உள்ளும் புறமும் பொன்னால் மூடினார்.
31. திருத்தலத்தின் வாயிலுக்கு ஒலிவ மரங்களால் கதவுகளையும், ஐந்து கோணமுள்ள தூண்களையும் செய்துவைத்தார்.
32. ஒலிவ மரத்தாலான அந்த இரட்டைக் கதவுகளைக் கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளாலும் அழகு செய்து இவை அனைத்தையும் பொன்னால் அலங்கரித்தார்.
33. அவர் ஆலயத்தின் வாயிலுக்கும் ஒலிவ மரத்தினால் நான்கு கோணமுள்ள தூண்களை நிறுத்தினர்.
34. மேலும் அதன் பக்கத்தில் சப்பீன் மரத்தால் இரு கதவுகளைச் செய்து வைத்தார். ஒவ்வொரு கதவும் இரண்டு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது; எனவே, கதவுகளைத் திறக்கும் போது இரு மடிப்புப் பலகைகள் ஒன்றோடொன்று சேர்ந்தே திறக்கப்படும்.
35. அவற்றைக் கெருபீம்களும் ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைப்பாடுகளால் அழகு செய்து, அவற்றின் அளவுப்படி அவற்றைப் பொன்னால் அலங்கரித்தார்.
36. உள்முற்றத்தை மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும் ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் அமைத்தார்.
37. நான்காம் ஆண்டு சியோ மாதத்தில் ஆண்டவருடைய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
38. பதினோராம் ஆண்டு பூல் என்ற எட்டாம் மாதத்தில் ஆலயத்தின் எல்லா வேலைகளும் முற்றுப் பெற்றன. அதற்குத் தேவையான எல்லாத் தட்டுமுட்டுச் சாமான்களும் தயாராகின. அவர் அதைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.
மொத்தம் 22 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 22
1 இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறின நானூற்றெண்பதாம் ஆண்டிலும், சாலமோன் இஸ்ராயேலின் அரசரான நான்காம் ஆண்டு சியோ மாதமாகிய இரண்டாவது மாதத்திலும் ஆண்டவருடைய ஆலய வேலை ஆரம்பமானது. 2 சாலமோன் அரசர் கட்டின ஆலயத்தின் நீளம் அறுபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் முப்பது முழம். 3 ஆலய முன்மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், பத்து முழ அகலமும் கொண்டிருந்தது. 4 அவர் ஆலயத்திற்கு வளைவான சன்னல்களை அமைத்தார். 5 கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்கும் கடவுள் சந்நிதிக்கும் அருகில் அடைப்பு மதிலின் மேல் அறைகளையும், கோயிலைச் சுற்றித் தாழ்வாரங்களையும் கட்டினார். 6 முதலடுக்கு அறைகள் ஐந்து முழ அகலமும், இரண்டாமடுக்கு அறைகள் ஆறு முழ அகலமும், மூன்றாமடுக்கு அறைகள் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. அவை கோயிலின் சுவர்களிலே தாங்காத படி அவர் சுற்றிலும் வெளிப்புறமாக உத்திரங்களை அமைத்தார். 7 செதுக்கிச் சீர்படுத்தப்பெற்ற கற்களால் கோயில் கட்டப்பட்டது. ஆகையால், அது கட்டப்பட்ட போது, சுத்தியல்கள், கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அங்கே கேட்கப்படவில்லை. 8 இரண்டாம் மாடிக்கு போகிற வாயில் கோயிலின் வலப்புறம் இருந்தது. சுழற்படிகளால் இரண்டாம் மாடிக்கும், இரண்டாம் மாடியிலிருந்து மூன்றாம் மாடிக்கும் ஏற வசதி அமைக்கப் பெற்றிருந்தது. 9 இவ்விதமாய் அவர் கோயிலைக் கட்டிக் கேதுரு மரப்பலகைகளால் அதை மச்சுப்பாவி முடித்தார். 10 அவர் ஐந்து முழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின் மேல் எங்கும் கட்டுவித்தார். அவை கேதுரு மரங்களால் மூடப்பட்டிருந்தன. 11 அப்போது கடவுள் சாலமோனுடன் உரையாடி அவரை நோக்கி, 12 நீ நம் கட்டளைகளின்படி ஒழுகி, நம் தீர்ப்புக்களை நிறைவேற்றி, நம் கற்பனைகளின்படி அணுப்பிசகாது நடந்து வருவாயாகில், நீ கட்டுகிற இக் கோயிலைக் குறித்து நாம் உன் தந்தை தாவீதுக்குச் சொன்ன நமது வார்த்தையை உன்னில் நிறைவேற்றுவோம். 13 இஸ்ராயேல் மக்கள் நடுவில் வாழ்ந்து நம் மக்களாகிய இஸ்ராயேலரைக் கைவிடாதிருப்போம்" என்றார். 14 அப்படியே சாலமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தார். 15 ஆலயச் சுவர்களின் உட்புறத்தைக் கீழ்த்தளம் தொடங்கி மேல் மச்சு வரை கேதுருப் பலகைகளால் மூடினார். மேலும் கோயிலின் கீழ்த்தளத்தைச் சப்பீன் பலகைகளால் பாவினார். 16 ஆனால் ஆலயத்தின் பின்புறத்தில், கீழ்த்தளம் முதல் மேல் தளம் வரை இருபது முழ உயரத்துக்குக் கேதுரு மரப் பலகைகளால் மூடப்பட்ட ஓர் இடத்தை அமைத்துத் திருத்தலத்தின் உட்புறத்தை அதிபரிசுத்த தலமாக ஏற்படுத்தினார். 17 அவ்விடத்திற்கு முன்னிருந்த ஆலய நீளம் நாற்பது முழம். 18 இப்படி ஆலயத்தின் உட்புறமெங்கும் கேதுரு மரப்பலகைகளால் மூடியிருந்ததும் தவிர, பலகைகள் ஒன்றோடு ஒன்று பொருந்தும் இடங்கள் சிற்ப சித்திரக் கலைகளால் அழகு செய்யப் பட்டிருந்தன. இப்படியே பார்வைக்கு ஒரு கல்லாவது காணப்படாமல் கோயில் முழுவதும் கேதுரு மரப்பலகைகளால் மூடப்பட்டிருந்தது. 19 ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை வைக்க அவர் ஆலயத்தின் உட்புறத்தில் திருத்தலத்தை அமைத்திருந்தார். 20 திருத்தலம் மட்டும் இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாய் இருந்தது; அதைப் பசும் பொன்னால் மூடினார்; பலி பீடத்தையும் கேதுருப் பலகைகளால் மூடினார். 21 திருத்தலத்திற்கு முன் இருந்த ஆலயத்தையும் பசும் பொன்னால் மூடி, பொன் அணிகள் தொடுக்கப்பட்ட தகடுகளைத் தொங்க விட்டார். 22 இப்படி ஆலயம் முழுவதும் பொன்னால் மூடப்படாத இடம் ஒன்றும் இல்லை. திருத்தலத்திற்கு முன் இருந்த பலிபீடம் முழுவதையும் பொன்னால் மூடினார். 23 அவர் திருத்தலத்தில் ஒலிவ மரங்களால் பத்து முழ உயரமான இரு கெருபீம்களைச் செய்து வைத்தார். 24 கெருபீம்களின் இறக்கைகளுடைய நீளம் ஐந்து முழம்; இறக்கைகளின் முனைகளுக்கு இடையே இருந்த தூரம் பத்து முழம். மற்றக் கெருபீமும் பத்து முழம். 25 இரு கெருபீம்களும் ஒரே அளவாயும், ஒரே வேலைப்பாடுடையனவாயும் இருந்தன. 26 அதாவது ஒரு கெருபீமும் அதே அளவாய் இருந்தது. 27 அவர் அக்கெருபீம்களை உள் ஆலயத்தின் நடுவே வைத்தார். அவற்றின் இறக்கைகள் விரிந்திருந்ததினால், ஒரு கெருபீமின் இறக்கை ஒரு பக்கத்துச் சுவரிலும், மற்றக் கெருபீமின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியாயிருந்தன. ஆலயத்தின் நடுவில் அவற்றின் இறக்கைகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன. 28 அவர் அக்கெருபீம்களையும் பொன்னால் மூடினார். 29 ஆலயத்தின் சுவர்கள் முழுவதும், சுற்றிலும் தொங்கிக்கொண்டிருந்த கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளால் அழகு செய்யப்பட்டிருந்தன. 30 ஆலயத்துத் தளங்களையும் அவர் உள்ளும் புறமும் பொன்னால் மூடினார். 31 திருத்தலத்தின் வாயிலுக்கு ஒலிவ மரங்களால் கதவுகளையும், ஐந்து கோணமுள்ள தூண்களையும் செய்துவைத்தார். 32 ஒலிவ மரத்தாலான அந்த இரட்டைக் கதவுகளைக் கெருபீம்களும், ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைகளாலும் அழகு செய்து இவை அனைத்தையும் பொன்னால் அலங்கரித்தார். 33 அவர் ஆலயத்தின் வாயிலுக்கும் ஒலிவ மரத்தினால் நான்கு கோணமுள்ள தூண்களை நிறுத்தினர். 34 மேலும் அதன் பக்கத்தில் சப்பீன் மரத்தால் இரு கதவுகளைச் செய்து வைத்தார். ஒவ்வொரு கதவும் இரண்டு மடிப்பாய்ச் செய்யப்பட்டிருந்தது; எனவே, கதவுகளைத் திறக்கும் போது இரு மடிப்புப் பலகைகள் ஒன்றோடொன்று சேர்ந்தே திறக்கப்படும். 35 அவற்றைக் கெருபீம்களும் ஈச்ச மரங்களும் இன்னும் பிற ஓவியங்களுமான சிற்ப சித்திர வேலைப்பாடுகளால் அழகு செய்து, அவற்றின் அளவுப்படி அவற்றைப் பொன்னால் அலங்கரித்தார். 36 உள்முற்றத்தை மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும் ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் அமைத்தார். 37 நான்காம் ஆண்டு சியோ மாதத்தில் ஆண்டவருடைய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 38 பதினோராம் ஆண்டு பூல் என்ற எட்டாம் மாதத்தில் ஆலயத்தின் எல்லா வேலைகளும் முற்றுப் பெற்றன. அதற்குத் தேவையான எல்லாத் தட்டுமுட்டுச் சாமான்களும் தயாராகின. அவர் அதைக் கட்டி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின.
மொத்தம் 22 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References