தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 இராஜாக்கள்
1. சாலமோனை அவருடைய தந்தைக்குப் பின் அரசராக அபிஷுகம் செய்துள்ளார்கள்" என்று தீரின் அரசன் ஈராம் கேள்விப்பட்டுத் தன் ஊழியரை அவரிடம் அனுப்பினான். ஏனெனில் ஈராம் என்றும் தாவீதின் நண்பனாய் இருந்து வந்திருந்தான்.
2. அப்பொழுது சாலமோனும் ஈராமிடம் தம் ஆட்களை அனுப்பி,
3. என் தந்தை தாவீதின் எதிரிகளை ஆண்டவர் அவர் தம் தாள் பணியச் செய்யும் வரை சுற்றிலும் நடந்து வந்த போரின் காரணத்தால், அவர்தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்கு ஆலயம் எழுப்ப அவரால் முடியவில்லை என்று நீர் அறிவீர்.
4. இப்பொழுதோ என் கடவுளாகிய ஆண்டவர் சுற்றிலும் எனக்குச் சமாதானத்தைத் தந்துள்ளார். எனக்கு எதிரியுமில்லை; இடையூறுமில்லை.
5. ஆகையால் 'உனக்குப்பின், உன் அரியணையில் நாம் அமர்த்தும் உன் மகனே நமது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவான்' என்று ஆண்டவர் என் தந்தை தாவீதுக்குச் சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஆலயம் எழுப்ப எண்ணியுள்ளளேன்.
6. ஆதலால், லீபானின் கேதுரு மரங்களை எனக்கென்று வெட்டிவர உம் ஊழியர்களுக்குக் கட்டளையிடும்; சீதோனியரைப் போல் மரம் வெட்ட அறிந்தவர்கள் என் குடிகளுள் ஒருவரும் இல்லை என்று உமக்குத் தெரியுமே. ஆதலால் என் ஊழியர் உம் ஊழியரோடு வேலை செய்வார்கள்; நீர் கேட்கும் கூலியை உம் ஊழியர்களுக்குக் கொடுப்பேன்" என்று சொல்லச் சொன்னார்.
7. ஈராம் சாலமோனின் வார்த்தைகளைக் கேட்ட போது, மிகவும் மகிழ்ச்சியுற்று, "இத்தனை ஏராள மக்களை ஆளும்படி தாவீதுக்கு ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்த ஆண்டவராகிய கடவுள் இன்று வாழ்த்தப் பெறுவாராக" என்று சொன்னான்.
8. மேலும் சாலமோனிடம் ஆட்களை அனுப்பி, "நீர் எனக்குச் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்; கேதுரு மரங்களைக் குறித்தும், சப்பீன் மரங்களைக் குறித்தும் உமது விருப்பப்படியே செய்வேன்.
9. என் வேலைக்காரர் லீபானிலிருந்து அவற்றைக் கொண்டு வந்து கடலோரத்தில் சேர்ப்பார்கள்; அங்கே நான் அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் குறிக்கும் இடத்திற்குக் கடல் வழியாய் அனுப்பி அவற்றைக் கரையேற்றுவேன். அவற்றை நீர் பெற்றுக் கொண்டு என் வீட்டாருக்குத் தேவையான உணவுப் பொருட்களை நீர் எனக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்று சொல்லி அனுப்பினான்.
10. அப்படியே ஈராம் சாலமோனுக்கு வேண்டிய மட்டும் கேதுரு மரங்களையும் சப்பீன் மரங்களையும் கொடுத்து வந்தான்.
11. சாலமோனோ ஈராமின் அரண்மனைக்கு உணவுக்காக இருபதாயிரம் மரக்கால் கோதுமையும் இருபது மரக்கால் சுத்தமான ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு சாலமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.
12. ஆண்டவரும் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடி அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார். ஈராமுக்கும் சாலமோனுக்கும் இடையே அமைதி நிலவிற்று; இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
13. சாலமோன் அரசர் இஸ்ராயேலர் அனைவரிலும் வேலை செய்வதற்காக முப்பதாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார்.
14. ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை மாற்றி மாற்றி லீபானுக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர்கள் இரண்டு மாதம் வீட்டில் இருக்க வாய்ப்புக் கிட்டியது. அதோனிராம் அக்கூலியாட்களுக்குக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.
15. சாலமோனிடம் சுமை சுமப்பவர்கள் எழுபதாயிரம் பேரும், மலையில் கல் வெட்டுகிறவர்கள் எண்பதாயிரம் பேரும் இருந்தனர்.
16. இவர்களைத் தவிர ஒவ்வொரு வேலையையும் கவனிக்க மூவாயிரம் மேற்பார்வையாளர்கள் இருந்தனர்; மக்களையும் வேலையாட்களையும் கவனித்து வர முந்நூறு ஆளுநரும் இருந்தனர்.
17. ஆலயத்துக்கு அடித்தளம் இட மிக விலையுர்ந்த கற்களைக் கொண்டு வந்து அவற்றைச் சீர்படுத்த அவர் கட்டளையிட்டார்.
18. ஆலயத்தைக் கட்டுவதற்காக சாலமோனின் கொத்தர்களும், ஈராமின் கொத்தர்களும் கற்களைச் செதுக்க, கிப்லியர் மரங்களையும் கற்களையும் தயார்படுத்தினார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 5 of Total Chapters 22
1 இராஜாக்கள் 5:30

×

Alert

×

tamil Letters Keypad References