தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 இராஜாக்கள்
1. நாபாத்தின் மகன் எரோபோவாம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான்.
2. மூன்று ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய்.
3. அபியாம் தன் தந்தை தனக்கு முன் செய்திருந்த எல்லாப் பாவங்களிலும் வீழ்ந்தான். அவனது இதயம் தன் தந்தையாகிய தாவீதின் இதயத்தைப்போல் தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிறைவுள்ளதாய் இருக்கவில்லை.
4. ஆயினும், தாவீதின் பொருட்டு அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் யெருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கை அளித்தார்; இவ்வாறு யெருசலேமை நிலைநாட்ட அவனுக்குப் பிறகு ஒரு மகன் உதிக்கச் செய்தார்.
5. தாவீது ஏத்தையனான உரியாசின் மட்டில் நடந்து கொண்டதைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் கட்டளைகளினின்று வழுவாது அவர் திருமுன் நேர்மையாக நடந்து வந்திருந்தார்.
6. எனினும் ரொபோவாம் தன் வாழ்நாள் முழுவதும் எரோபோவாமோடு போரிட்டு வந்தான்.
7. அபியாமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் எரோபோவாமுக்கும் இடையே போர் நடந்தது.
8. அதன் பிறகு அபியாம் தன் முன்னோரோடு துயில் கொண்டான். அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தார்கள். அவன் மகன் ஆசா அவனுக்குப் பிறகு அரியணை ஏறினான்.
9. இஸ்ராயேலின் அரசன் எரோபோவாம் ஆட்சியின் இருபதாம் ஆண்டில் ஆசா யூதாவின் அரசன் ஆனான்.
10. அவன் நாற்பத்தோர் ஆண்டுகள் யெருசலேமில் அரசாண்டான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய்.
11. ஆசா தன் தந்தை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.
12. அவன் பெண் தண்மையுள்ள ஆடவரைத் தன் நாட்டிலிருந்து துரத்தி விட்டுத் தன் முன்னோர் செய்து வைத்திருந்த அருவருப்பான சிலைகளை எல்லாம் தகர்த்தெறிந்தான்.
13. அன்றியும் ஆசாவின் தாய் மாக்கா, பிரியாப் என்ற சிலைக்கு ஒரு தோப்பை நேர்ந்துவிட்டு, அங்கே அதற்குச் செலுத்தப்பட்ட பலிகளை நடத்தி வந்தாள். அது நடவாதவாறு ஆசா அவளை நீக்கிவிட்டு கோயிலை இடித்து அதனுள் இருந்த அந்த அருவருப்பான சிலையைத் தவிடுபொடியாக்கிக் கெதிரோன் நதிக்கரையில் அதைச் சுட்டெரித்தான்.
14. ஆனால் மேட்டுக் கோயில்களை ஆசா அழிக்கவில்லை. எனினும் ஆசா தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் திருமுன் உத்தமனாய் நடந்து வந்தான்.
15. அவன் தந்தை புனிதப்படுத்தி ஆண்டவருக்கு நேர்ந்து கொண்ட பொன்னையும் வெள்ளியையும் தட்டு முட்டுகளையும் ஆசா ஆண்டவரின் ஆலயத்துக்குக் கொண்டுவந்தான்.
16. ஆசாவுக்கும் இஸ்ராயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து கொண்டிருந்தது.
17. இஸ்ராயேலின் அரசன் பாசா யூதாவுக்கு வந்து மன்னன் ஆசாவின் நாட்டில் ஒருவரும் காலெடுத்து வைக்க முடியாதபடி ராமா நகரைக் கட்டி எழுப்பினான்.
18. அப்பொழுது ஆசா ஆலயத்தின் கருவூலங்களிலும், அரண்மனையின் கருவூலங்களிலும் எஞ்சியிருந்த பொன் வெள்ளி முழுவதையும் எடுத்து அவற்றைத் தன் ஊழியர் கையில் கொடுத்து அவர்களைத் தமாஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகன் தப்ரேமோனுக்குப் பிறந்த பெனாதாத் என்ற சீரியாவின் மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.
19. எனக்கும் உமக்கும், என் தந்தைக்கும் உம் தந்தைக்கும் உடன்படிக்கை இருந்ததே. அதை முன்னிட்டுப் பொன், வெள்ளி முதலியவற்றை உமக்கு அனுப்புகிறேன். மேலும், இஸ்ராயேலின் அரசன் பாசா என் எல்லையை விட்டு விலகிப் போகும்படி நீர் தயவு செய்து வந்து அவனோடு நீர் செய்துகொண்ட உடன்படிக்கையை முறித்து விடும் என்று சொல்லச் சொன்னான்.
20. பெனாதாத் அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத்தலைவர்களை இஸ்ராயேலின் நகர்கள்மேல் படையெடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஐயோனையும் தானையும், மாக்கா என்ற அபேல்தோமையும், கென்னரோத் முழுவதையும், அதாவது நெப்தலி நாடு முழுவதையும் தாக்கி முறியடித்தார்கள்.
21. பாசா அதைக் கேள்வியுற்ற போது ராமா நகரைக் கட்டுவதை விட்டுவிட்டுத் தேர்சாவுக்குத் திரும்பி வந்தான்.
22. அப்பொழுது அரசன் ஆசா யூதாவெங்கும் ஆள் அனுப்பி, எல்லாரும் போய் ராமாவைக் கட்டி எழுப்பப் பாசா பயன்படுத்தி வந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவரச் சொன்னான். பிறகு அவற்றைக் கொண்டு அரசன் ஆசா பெஞ்சமின் நாட்டில் காபாவையும் மாஸ்பாவையும் கட்டி எழுப்பினான்.
23. ஆசாவின் மற்ற எல்லாச் செயல்களும், அவனுடைய எல்லாச் சாதனைகளும் அவன் செய்தவை யாவும், அவன் கட்டின நகர்களின் வரலாறும் யூதாவின் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய இறுதி நாட்களில் அவன் கால்களில் நோய் கண்டது.
24. ஆசா தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் தன் தந்தை தாவீதின் நகரில் தன் முன்னோருக்கருகில் புதைக்கப்பட்டான். அவன் மகன் யோசபாத் அவனுக்குப்பின் ஆட்சி பீடம் ஏறினான்.
25. யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறின இரண்டாம் ஆண்டில் எரோபோவாமின் மகன் நாதாப் இஸ்ராயேலுக்கு அரசனாகி ஈராண்டுகள் அதை ஆண்டு வந்தான்.
26. அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து தன் தந்தையின் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவனுடைய தீய வழியிலும் நடந்து வந்தான்.
27. இசாக்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஆகியாசின் மகன் பாசா நாதாபுக்கு எதிராகச் சதி செய்து கெபெதோனில் அவனைக் கொலை செய்தான். கெபெதோன் என்பது நாதாபும் இஸ்ராயேலர் அனைவரும் முற்றுகை இட்டிருந்த ஒரு நகர்.
28. இப்படி யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபைச் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து வந்தான்.
29. பாசா அரசனானவுடன், ஆண்டவர் சிலோனித்தராகிய ஆகியாசு என்ற தம் ஊழியர் மூலம் சொல்லியிருந்த வார்த்தையின் படியே, எரோபோவாமின் வீட்டார் அனைவரையும் கொன்று குவித்தான். அதோடு அவன் பிள்ளைகளில் ஒன்றையும் விட்டு வைக்காது, அவனது குலத்தையே அடியோடு அழித்தான்.
30. ஏனெனில் எரோபோவாம் செய்த பாவங்களை முன்னிட்டும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவன் பாவங்களை முன்னிட்டும், அவர்கள் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்த பாவத்தின் பொருட்டும் இது நிறைவேறிற்று.
31. நாதாபின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ராயேல் மன்னர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
32. ஆசாவுக்கும் இஸ்ராயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து வந்தது.
33. யூதாவின் அரசன் ஆசா அரசனான மூன்றாம் ஆண்டில் ஆகியாசின் மகன் பாசா இஸ்ராயேல் அனைத்துக்கும் தேர்சாவில் அரசனாகி இருபத்து நான்கு ஆண்டுகள் அரசோச்சி வந்தான்.
34. ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து எரோபோவாமின் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவனுடைய தீய வழியிலும் நடந்து வந்தான்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 22 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 22
1 இராஜாக்கள் 15:56
1 நாபாத்தின் மகன் எரோபோவாம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான். 2 மூன்று ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய். 3 அபியாம் தன் தந்தை தனக்கு முன் செய்திருந்த எல்லாப் பாவங்களிலும் வீழ்ந்தான். அவனது இதயம் தன் தந்தையாகிய தாவீதின் இதயத்தைப்போல் தன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிறைவுள்ளதாய் இருக்கவில்லை. 4 ஆயினும், தாவீதின் பொருட்டு அவனுடைய கடவுளாகிய ஆண்டவர் யெருசலேமில் அவனுக்கு ஒரு விளக்கை அளித்தார்; இவ்வாறு யெருசலேமை நிலைநாட்ட அவனுக்குப் பிறகு ஒரு மகன் உதிக்கச் செய்தார். 5 தாவீது ஏத்தையனான உரியாசின் மட்டில் நடந்து கொண்டதைத் தவிர, தம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் கட்டளைகளினின்று வழுவாது அவர் திருமுன் நேர்மையாக நடந்து வந்திருந்தார். 6 எனினும் ரொபோவாம் தன் வாழ்நாள் முழுவதும் எரோபோவாமோடு போரிட்டு வந்தான். 7 அபியாமின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. அபியாமுக்கும் எரோபோவாமுக்கும் இடையே போர் நடந்தது. 8 அதன் பிறகு அபியாம் தன் முன்னோரோடு துயில் கொண்டான். அவனைத் தாவீதின் நகரில் அடக்கம் செய்தார்கள். அவன் மகன் ஆசா அவனுக்குப் பிறகு அரியணை ஏறினான். 9 இஸ்ராயேலின் அரசன் எரோபோவாம் ஆட்சியின் இருபதாம் ஆண்டில் ஆசா யூதாவின் அரசன் ஆனான். 10 அவன் நாற்பத்தோர் ஆண்டுகள் யெருசலேமில் அரசாண்டான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய். 11 ஆசா தன் தந்தை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான். 12 அவன் பெண் தண்மையுள்ள ஆடவரைத் தன் நாட்டிலிருந்து துரத்தி விட்டுத் தன் முன்னோர் செய்து வைத்திருந்த அருவருப்பான சிலைகளை எல்லாம் தகர்த்தெறிந்தான். 13 அன்றியும் ஆசாவின் தாய் மாக்கா, பிரியாப் என்ற சிலைக்கு ஒரு தோப்பை நேர்ந்துவிட்டு, அங்கே அதற்குச் செலுத்தப்பட்ட பலிகளை நடத்தி வந்தாள். அது நடவாதவாறு ஆசா அவளை நீக்கிவிட்டு கோயிலை இடித்து அதனுள் இருந்த அந்த அருவருப்பான சிலையைத் தவிடுபொடியாக்கிக் கெதிரோன் நதிக்கரையில் அதைச் சுட்டெரித்தான். 14 ஆனால் மேட்டுக் கோயில்களை ஆசா அழிக்கவில்லை. எனினும் ஆசா தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவர் திருமுன் உத்தமனாய் நடந்து வந்தான். 15 அவன் தந்தை புனிதப்படுத்தி ஆண்டவருக்கு நேர்ந்து கொண்ட பொன்னையும் வெள்ளியையும் தட்டு முட்டுகளையும் ஆசா ஆண்டவரின் ஆலயத்துக்குக் கொண்டுவந்தான். 16 ஆசாவுக்கும் இஸ்ராயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து கொண்டிருந்தது. 17 இஸ்ராயேலின் அரசன் பாசா யூதாவுக்கு வந்து மன்னன் ஆசாவின் நாட்டில் ஒருவரும் காலெடுத்து வைக்க முடியாதபடி ராமா நகரைக் கட்டி எழுப்பினான். 18 அப்பொழுது ஆசா ஆலயத்தின் கருவூலங்களிலும், அரண்மனையின் கருவூலங்களிலும் எஞ்சியிருந்த பொன் வெள்ளி முழுவதையும் எடுத்து அவற்றைத் தன் ஊழியர் கையில் கொடுத்து அவர்களைத் தமாஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகன் தப்ரேமோனுக்குப் பிறந்த பெனாதாத் என்ற சீரியாவின் மன்னனுக்கு அனுப்பி வைத்தான். 19 எனக்கும் உமக்கும், என் தந்தைக்கும் உம் தந்தைக்கும் உடன்படிக்கை இருந்ததே. அதை முன்னிட்டுப் பொன், வெள்ளி முதலியவற்றை உமக்கு அனுப்புகிறேன். மேலும், இஸ்ராயேலின் அரசன் பாசா என் எல்லையை விட்டு விலகிப் போகும்படி நீர் தயவு செய்து வந்து அவனோடு நீர் செய்துகொண்ட உடன்படிக்கையை முறித்து விடும் என்று சொல்லச் சொன்னான். 20 பெனாதாத் அரசன் ஆசாவுக்கு இணங்கித் தன் படைத்தலைவர்களை இஸ்ராயேலின் நகர்கள்மேல் படையெடுக்குமாறு அனுப்பினான். அவர்கள் ஐயோனையும் தானையும், மாக்கா என்ற அபேல்தோமையும், கென்னரோத் முழுவதையும், அதாவது நெப்தலி நாடு முழுவதையும் தாக்கி முறியடித்தார்கள். 21 பாசா அதைக் கேள்வியுற்ற போது ராமா நகரைக் கட்டுவதை விட்டுவிட்டுத் தேர்சாவுக்குத் திரும்பி வந்தான். 22 அப்பொழுது அரசன் ஆசா யூதாவெங்கும் ஆள் அனுப்பி, எல்லாரும் போய் ராமாவைக் கட்டி எழுப்பப் பாசா பயன்படுத்தி வந்த கற்களையும் மரங்களையும் எடுத்துவரச் சொன்னான். பிறகு அவற்றைக் கொண்டு அரசன் ஆசா பெஞ்சமின் நாட்டில் காபாவையும் மாஸ்பாவையும் கட்டி எழுப்பினான். 23 ஆசாவின் மற்ற எல்லாச் செயல்களும், அவனுடைய எல்லாச் சாதனைகளும் அவன் செய்தவை யாவும், அவன் கட்டின நகர்களின் வரலாறும் யூதாவின் அரசர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய இறுதி நாட்களில் அவன் கால்களில் நோய் கண்டது. 24 ஆசா தன் முன்னோரோடு துயில் கொண்ட பின் தன் தந்தை தாவீதின் நகரில் தன் முன்னோருக்கருகில் புதைக்கப்பட்டான். அவன் மகன் யோசபாத் அவனுக்குப்பின் ஆட்சி பீடம் ஏறினான். 25 யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறின இரண்டாம் ஆண்டில் எரோபோவாமின் மகன் நாதாப் இஸ்ராயேலுக்கு அரசனாகி ஈராண்டுகள் அதை ஆண்டு வந்தான். 26 அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து தன் தந்தையின் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவனுடைய தீய வழியிலும் நடந்து வந்தான். 27 இசாக்கார் குடும்பத்தைச் சேர்ந்த ஆகியாசின் மகன் பாசா நாதாபுக்கு எதிராகச் சதி செய்து கெபெதோனில் அவனைக் கொலை செய்தான். கெபெதோன் என்பது நாதாபும் இஸ்ராயேலர் அனைவரும் முற்றுகை இட்டிருந்த ஒரு நகர். 28 இப்படி யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபைச் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து வந்தான். 29 பாசா அரசனானவுடன், ஆண்டவர் சிலோனித்தராகிய ஆகியாசு என்ற தம் ஊழியர் மூலம் சொல்லியிருந்த வார்த்தையின் படியே, எரோபோவாமின் வீட்டார் அனைவரையும் கொன்று குவித்தான். அதோடு அவன் பிள்ளைகளில் ஒன்றையும் விட்டு வைக்காது, அவனது குலத்தையே அடியோடு அழித்தான். 30 ஏனெனில் எரோபோவாம் செய்த பாவங்களை முன்னிட்டும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவன் பாவங்களை முன்னிட்டும், அவர்கள் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குக் கோபம் வருவித்த பாவத்தின் பொருட்டும் இது நிறைவேறிற்று. 31 நாதாபின் மற்றச் செயல்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ராயேல் மன்னர்களின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. 32 ஆசாவுக்கும் இஸ்ராயேலின் அரசன் பாசாவுக்கும் இடையே அவர்கள் வாழ்நாள் முழுவதும் போர் நடந்து வந்தது. 33 யூதாவின் அரசன் ஆசா அரசனான மூன்றாம் ஆண்டில் ஆகியாசின் மகன் பாசா இஸ்ராயேல் அனைத்துக்கும் தேர்சாவில் அரசனாகி இருபத்து நான்கு ஆண்டுகள் அரசோச்சி வந்தான். 34 ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து எரோபோவாமின் வழியிலும், இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கிய அவனுடைய தீய வழியிலும் நடந்து வந்தான்.
மொத்தம் 22 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 22
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References