தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 யோவான்
1. ஆதிமுதல் இருந்ததை, நாங்கள் கேட்டதை, கண்ணால் பார்த்ததை உங்களுக்கு அறிவிக்கிறோம். அதை நாங்கள் நோக்கினோம். கையால் தொட்டுணர்ந்தோம். நாங்கள் அறிவிப்பது உயிரின் வார்த்தையைப் பற்றியது.
2. அந்த உயிர் வெளிப்படுத்தப்பட்டது; அதனை நாங்கள் கண்டோம், அதற்குச் சான்று பகர்கின்றோம். தந்தையோடு இருந்து, நமக்கு வெளிப்படுத்தப்பட்ட முடிவில்லா வாழ்வுபற்றிய செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
3. நீங்களும் எங்களோடு நட்புறவு கொள்ளும் படி, நாங்கள் பார்த்ததை, நாங்கள் கேட்டதை உங்களுக்கும் தெரிவிக்கிறோம். எங்களுக்குள்ள நட்புறவோ பரம தந்தையோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் உள்ளதாகும்.
4. நம் மகிழ்ச்சி நிறைவுபெற இதனை எழுதுகிறோம்.
5. நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவருள் இருள் என்பதே இல்லை.
6. இருளிலே வாழ்ந்துகொண்டு அவரோடு நமக்கு நட்புறவு உண்டு என்போமானால் நாம் பொய்யர்கள், உண்மைக்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல.
7. மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.
8. நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை.
9. மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
10. நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 5
1 2 3 4 5
1 ஆதிமுதல் இருந்ததை, நாங்கள் கேட்டதை, கண்ணால் பார்த்ததை உங்களுக்கு அறிவிக்கிறோம். அதை நாங்கள் நோக்கினோம். கையால் தொட்டுணர்ந்தோம். நாங்கள் அறிவிப்பது உயிரின் வார்த்தையைப் பற்றியது. 2 அந்த உயிர் வெளிப்படுத்தப்பட்டது; அதனை நாங்கள் கண்டோம், அதற்குச் சான்று பகர்கின்றோம். தந்தையோடு இருந்து, நமக்கு வெளிப்படுத்தப்பட்ட முடிவில்லா வாழ்வுபற்றிய செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறோம். 3 நீங்களும் எங்களோடு நட்புறவு கொள்ளும் படி, நாங்கள் பார்த்ததை, நாங்கள் கேட்டதை உங்களுக்கும் தெரிவிக்கிறோம். எங்களுக்குள்ள நட்புறவோ பரம தந்தையோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் உள்ளதாகும். 4 நம் மகிழ்ச்சி நிறைவுபெற இதனை எழுதுகிறோம். 5 நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவருள் இருள் என்பதே இல்லை. 6 இருளிலே வாழ்ந்துகொண்டு அவரோடு நமக்கு நட்புறவு உண்டு என்போமானால் நாம் பொய்யர்கள், உண்மைக்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல. 7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது. 8 நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை. 9 மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். 10 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை.
மொத்தம் 5 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 5
1 2 3 4 5
×

Alert

×

Tamil Letters Keypad References