தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 கொரிந்தியர்
1. நீங்கள் ஒருவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும்போது, தீர்ப்புப் பெற இறை மக்களிடம் போகாமல், அவிசுவாசிகளிடம் போகத் துணிவானேன்?
2. இறை மக்கள் இவ்வுலகத்துக்குத் தீர்ப்பிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகமே உங்கள் முன் தீர்ப்புக்காக நிற்க வேண்டியிருக்க, சின்னஞ்சிறிய வழக்குகளைத் தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லாமல் போய்விட்டதா?
3. வானதூதர்களுக்கும் நாம் தீர்ப்பிடுவோம் என்பதை அறியீர்களோ? அப்படியிருக்க அன்றாட வாழ்க்கைக்குரியவற்றைத் தீர்க்கமுடியாதா?
4. அத்தகைய வழக்குகள் இருந்தால் திருச்சபையின் மதிப்பைப் பெறாதவர்களை நடுவர்களாக ஏற்படுத்துவதெப்படி?
5. உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்லுகிறேன். சகோதரர்களுடைய வழக்கில் நடுவனாயிருக்கத்தக்க சான்றோன் உங்களிடையே ஒருவன் கூட இல்லையா?
6. சகோதரன் சகோதரனுக்கு எதிராக வழக்காடுவதா? அதுவும் அவிசுவாசிகள் முன்னிலையிலா?
7. ஒருவன் மீது ஒருவன் வழக்குத் தொடர்வதே உங்களுக்கு ஒரு தோல்வி. அநியாயத்தை நீங்கள் ஏன் தாங்கிக்கொள்ளக் கூடாது? பிறர் உங்கள் பொருளை வஞ்சித்துக் கவர ஏன் விட்டுவிடக் கூடாது? மாறாக நீங்களே அநியாயம் செய்கிறீர்கள்.
8. பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்கிறீர்கள். அதுவும் சகோதரர்களுக்கே இப்படிச் செய்கிறீர்கள்.
9. அநியாயம் செய்பவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்துபோக வேண்டாம். காமுகர், சிலைவழிபாட்டினர், விபசாரர்,
10. இயற்கைக்கு மாறான பாவம் செய்வோர், அதற்கு உடன்படுவோர், திருடர், பொருளாசை பிடித்தவர், குடிகாரர், பழி பேசுவோர், கொள்ளைக்காரர் இவர்களுக்குக் கடவுளின் அரசு உரிமையாகாது.
11. இத்தகையோர் உங்களிடையிலும் சிலர் இருந்தனர். ஆயினும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும், நம் கடவுளின் ஆவியாலும் உங்கள் பாவக் கறைகளைக் கழுவிப் போக்கிக் கொண்டீர்கள், பரிசுத்தரானீர்கள், இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டீர்கள்.
12. ' எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு' என்கிறார்கள். - ஆனால் எல்லாமே பயன்தராது. எதையும் செய்ய எனக்கு உரிமையுண்டு என்பது உண்மைதான். ஆனால் எதற்கும் நான் அடிமையாக மாட்டேன்.
13. " உணவு வயிற்றுக்கென்றே உள்ளது; வயிறு உணவுக்கென்று உள்ளது" என்கிறீர்கள். ஆம், கடவுள் இரண்டையும் அழித்துவிடுவார். ஆனால், உடல் காமத்திற்கென்று இல்லை. ஆண்டவருக்கென்று இருக்கிறது. ஆண்டவரும் உடலுக்கே.
14. ஆண்டவரை உயிர்ப்பித்த கடவுள் நம்மையும் தம் வல்லமையால் உயிர்ப்பிப்பார்.
15. உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க நான் ஆண்டவரின் உறுப்புகளை எடுத்து வேசியின் உறுப்புகளாகச் செய்யலாமா?
16. ஒருகாலும் செய்யலாகாது. வேசியோடு சேருகிறவன் அவளோடு ஓருடலாகிறான் என நீங்கள் அறியீர்களோ? ஏனெனில், ' இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள் '. என்றுள்ளது.
17. ஆனால் ஆண்டவரோடு சேர்ந்திருப்பவன் அவரோடு ஒரே ஆவி ஆகிறான்.
18. கெட்ட நடத்தையை விட்டு விலகுங்கள். மனிதன் செய்யும் பாவமெல்லாம் உடலுக்குப் புறம்பானாது; ஆனால் கெட்ட நடத்தை சொந்த உடலுக்கே எதிரான பாவம்.
19. உங்களுடைய உடல் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அந்த ஆவியைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். ஆகவே, நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல,
20. ஏனெனில், நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பெற்றீர்கள். ஆகவே, உங்கள் உடலில் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 6 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16
1 கொரிந்தியர் 6:20

×

Alert

×

tamil Letters Keypad References