தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 கொரிந்தியர்
1. சகோதரர்களே, ஆவிக்குரிய வரங்களைப் பற்றி நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்.
2. நீங்கள் புறச் சமயத்தினராய் இருந்தபோது உங்களுக்கு உண்டான ஏவுதல் எல்லாம் ஊமைச் சிலைகள்பால் தான் உங்களை ஈர்த்தது. இது உங்களுக்குத் தெரிந்ததே அன்றோ?
3. ஆதலால் உங்களுக்கு நான் அறிவிப்பது: கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் பேசும் போது, ' இயேசுவுக்குச் சாபம்' என்று யாரும் சொல்லுவதில்லை. அப்படியே பரிசுத்த ஆவியின் ஏவுதலாலன்றி ' இயேசு ஆண்டவர் ' என்று யாரும் சொல்லமுடியாது.
4. வரங்கள் பலவகை; ஆவியானவரோ ஒருவர்தான்.
5. திருப்பணிகள் பலவகை; ஆண்டவரோ ஒருவர் தான்.
6. ஆற்றல் மிக்க செயல்கள் பல வகை; கடவுளோ ஒருவர் தான். அவரே அனைத்தையும் அனைவரிலும் செயலாற்றுகிறார்.
7. ஆவியானவரின் செயல் வெளிப்படும் ஆற்றல் அவனவனுக்கு அருளப்படுவது பொது நன்மைக்காகவே.
8. ஒருவனுக்கு ஆவியின் வழியாக ஞானம் நிறைந்த பேச்சு அருளப்படுகிறது. மற்றவனுக்கு அறிவு செறிந்த பேச்சு அளிக்கப்படுவது அதே ஆவியின் ஆற்றலால்தான்.
9. வேறொருவனுக்கு விசுவாசம் அருளப்படுவது அதே ஆவியால்தான். பிறிதொருவனுக்கு நோய்களைக் குணமாக்கும் வரம் கிடைப்பது அவ்வொரே ஆவியால் தான்.
10. ஒருவனுக்குப் புதுமை செய்யும் ஆற்றலும், இன்னொருவனுக்கு இறைவாக்கு வரமும், வேறொருவனுக்கு ஆவிகளைத் தேர்ந்து தெளியும் திறனும் வேறொருவனுக்குப் பல்வகைப் பரவசப் பேச்சும், பிறிதொருவனுக்கு அதை விளக்கும் திறனும் கிடைக்கின்றன.
11. இவற்றையெல்லாம தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்துச் செயலாற்றுகிறவர் அந்த ஒரே ஆவிதான்.
12. உடல் ஒன்று, உறுப்புகள் பல; உடலின் உறுப்புகள் பலவகையாயினும், ஒரே உடலாய் உள்ளன; கிறிஸ்துவும் அவ்வாறே என்க.
13. ஏனெனில், யூதர் அல்லது கிரேக்கர், அடிமைகள் அல்லது உரிமைக்குடிகள் யாராயினும் நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோம்; ஒரே ஆவியால் தாகந்தணியப் பெற்றோம்.
14. உடல் ஒரே உறுப்பன்று; பல உறுப்புகளால் ஆனது.
15. நான் கையல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று கால் சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா?
16. 'நான் கண்ணல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று காது சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா?
17. முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?
18. ஆனால், கடவுள் ஒவ்வொரு உறுப்பையும் தாம் விரும்பியவாறு உடலில் அமைத்தார்.
19. அவையெல்லாம் ஒரே உறுப்பாய் இருப்பின், உடல் என்பது ஒன்று இருக்குமா?
20. உண்மையில் உறுப்புகள் பல உள்ளன; உடலோ ஒன்றுதான்.
21. கண் கையைப் பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை" என்றோ, தலை கால்களைப் பார்த்து, "நீங்கள் எனக்குத் தேவையில்லை" என்றோ சொல்ல இயலாது.
22. அதுமட்டுமன்று; வலுவற்றவையாய்த் தோன்றும் உறுப்புகளே மிகத் தேவையானவை;
23. மதிப்புக் குறைவானவை என நாம் கருதும் உடலுறுப்புகளுக்கே மிகுதியான மதிப்பளித்துக் காக்கிறோம்; இழிவான உறுப்புகளே மிகுந்த மரியாதை பெறுகின்றன.
24. மாண்புள்ளவற்றுக்கு அது தேவையில்லை; உடலை உருவாக்கியபோது கடவுள் மதிப்பில்லாதவற்றுக்குச் சிறப்பான மதிப்புத் தந்தார்.
25. உடலில் பிளவு ஏற்படாமல் ஒவ்வொன்றும் மற்ற உறுப்புகள்மேல் அக்கறை காட்டவேண்டும் என்றே இப்படிச் செய்தார்.
26. உறுப்பு ஒன்று துன்புற்றால், எல்லா உறுப்புகளும் அதனுடன் சேர்ந்து துன்புறும்; உறுப்பு ஒன்று மாண்புற்றால், எல்லா உறுப்புகளும் சேர்ந்து இன்புறும்.
27. நீங்களோ கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு.
28. அவ்வாறே, திருச்சபையிலும் கடவுள், முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது இறைவாக்கினரையும், மூன்றாவது போதகரையும் எற்படுத்தினார்; பின்னர் புதுமை செய்யும் ஆற்றல், பின்பு நோய்களைக் குணமாக்கும் வரம், பிறர் சேவை, ஆளும் வரம், பல்வகைப் பரவசப் பேச்சு இவையுள்ளன.
29. அனைவருமா அப்போஸ்தலர்? எல்லாருமா இறைவாக்கினர்?
30. யாவரும் போதகரோ? எல்லாரும் நோய்களைக் குணமாக்கும் வரமுடையவரோ? எல்லாருமா பரவசப் பேச்சு பேசுகிறார்கள்? எல்லாருமா விளக்கம் சொல்லுகிறார்கள்?
31. ஆனால், நீங்கள் ஆர்வமாய்த் தேடவேண்டியது மேலான வரங்களையே. அனைத்திலும் சிறந்த நெறியை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 12 of Total Chapters 16
1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
1 கொரிந்தியர் 12:26

×

Alert

×

tamil Letters Keypad References