தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 கொரிந்தியர்
1. நான் கிறிஸ்துவைப்போல் நடக்கிறவாறே நீங்களும் என்னைப்போல் நடந்துகொள்ளுங்கள்.
2. எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களிடம் கையளித்ததையெல்லாம் கையளித்தவாறே நீங்கள் கடைபிடித்து வருவதற்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
3. ஆனால் நீங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். ஆணுக்குக் தலையாய் இருப்பவர் கிறிஸ்து பெண்ணுக்குத் தலையாய் இருப்பவன் ஆண், கிறிஸ்துவுக்குத் தலையாய் இருப்பவர் கடவுள்.
4. செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தன் தலையை மூடிக்கொள்ளும் ஆண் எவனும் தன் தலையை இழிவுபடுத்துகிறான்.
5. ஆனால் செபிக்கும்போது அல்லது இறைவாக்குக் கூறும்போது தலைக்கு முக்காடிடாத பெண் எவளும் தன் தலையை இழிவுபடுத்துகிறாள். அது அவள் தலையை மழித்துவிட்டதுபோலாகும்.
6. பெண்கள் முக்காடிடவில்லையானால், கூந்தலை வெட்டிவிடட்டும். கூந்தலை வெட்டிவிடுவதோ, மழித்துவிடுவதோ பெண்ணுக்கு இழிவு என்றால் தலைக்கு முக்காடிட்டுக்கொள்ளட்டும்.
7. ஆண்மகன் தலையை மூடிக்கொள்ளலாகாது. ஏனெனில், அவன் கடவுளின் சாயலும், அவரது மாட்சியின் எதிரொளியும் ஆவான்.
8. பெண்ணோ ஆணின் மாட்சிக்கு எதிரொளி. ஏனெனில், பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை; ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்.
9. மேலும் பெண்ணுக்காக ஆண் உண்டாக்கப்படவில்லை; ஆணுக்காகத்தான் பெண் உண்டாக்கப்பட்டவள்.
10. ஆகையால் வானதூதர்களை முன்னிட்டு, பெண் தன் தலையின் மேல் பெண்மைக்குரிய பெருமையின் அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும்,.
11. ஆயினும் கிறிஸ்துவ ஒழுங்கு முறையில் பெண் இனம் இன்றி, ஆண் இனம் இல்லை. ஆண் இனம் இன்றிப் பெண் இனம் இல்லை.
12. ஏனெனில், ஆணிடமிருந்து பெண் தோன்றியவாறே பெண்ணின் வழியாய் ஆணும் தோன்றுகிறான்; ஆனால் யாவும் கடவுளிடமிருந்து தான் வருகின்றன.
13. முக்காடின்றிக் கடவுளை நோக்கிச் செபித்தல் பெண்ணுக்கு அழகா? நீங்களே சொல்லுங்கள்.
14. ஆண் நீண்ட முடி வளர்ப்பது அவனுக்கு இழிவு என்றும், பெண் கூந்தலை வளர்ப்பது அவளுக்குப் பெருமை என்றும் இயற்கையே உங்களுக்குக் கற்பிக்க வில்லையா?
15. ஏனெனில் கூந்தல் அவளுக்குப் போர்வைப்போல் அமைந்துள்ளது.
16. இதைப்பற்றி வாக்குவாதம் செய்ய நினைப்பவனுக்கு நான் சொல்வது: அத்தகைய வழக்கம் எங்கள் நடுவிலும் இல்லை; கடவுளின் எந்தச் சபையிலும் இல்லை.
17. இந்த அறிவுரைகளை நான் கூறும்போது வேறொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்; அது உங்களுக்குப் பெருமை தராது. நீங்கள் ஒன்று கூடும்போது உங்களுக்கு நன்மையை விடத் தீமையே விளைகிறது.
18. முதலாவதாக, நீங்கள் சபையில் கூடும்போது உங்கள் நடுவில் பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஓரளவு அந்தச் செய்தியை நம்புகிறேன்.
19. உங்கள் நடுவில் பிரிவினைகள் உண்டாகத் தான் செய்யும். அதனால் உங்களுள் தகுதியுடையோர் யாரனெத் தெரியவரும்-.
20. இனி, நீங்கள் ஒன்றாகக் கூடி உண்பது ஆண்டவரின் விருந்தன்று, உங்கள் சொந்த விருந்தே.
21. ஏனெனில், நீங்கள் உண்ணும்போது, ஒவ்வொருவனும் உண்பதற்கு முந்திக்கொள்வதால் ஒருவன் பசியாய் இருக்கிறான். வேறொருவன் குடிவெறி கொள்கிறான்.
22. உண்டு குடிக்க உங்களுக்கு வீடு இல்லையா? அல்லது இல்லாதவர்களை நாணச்செய்து கடவுளின் சபையை இழிவுபடுத்துகிறீர்களா? என்ன சொல்வது உங்களைப் புகழ்வதா? இதில் உங்களை எப்படிப் புகழ்வது?
23. ஏனெனில், நான் ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டது இதுவே - அதையே நான் உங்களுக்குக் கையளித்தேன் அதாவது, ஆண்டவராகிய இயேசு, தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து, நன்றி கூறி அதைப் பிட்டு:
24. ' இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் ' என்றார்.
25. அவ்வாறே உணவு அருந்திய பின் கிண்ணத்தையும் எடுத்து ' இக்கிண்ணம் எனது இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை. இதைப் பருகும் போதெல்லாம் என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார்.
26. எனவே, நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவர் வரும் வரையில் அவரது மரணத்தை அறிக்கையிடுகிறீர்கள்.
27. ஆதலால், எவனாவது இந்த அப்பத்தைத் தகுதியின்றி உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால் ஆண்டவருடைய உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறாள்.
28. ஆகவே, ஒவ்வொருவனும் தன்னுளத்தை ஆய்ந்தறிந்து, அதன் பின்னரே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகட்டும்.
29. ஏனெனில், அது அவர் உடலென்று உணராமல் உண்டு பருகுபவன் தனக்குத் தீர்ப்பையே உண்டு பருகுகிறான்.
30. ஆதலால்தான் உங்களிடையே நலிந்தவரும் நோயுற்றவரும் பலர் உள்ளனர்; மற்றும் பலர் இறந்து போகின்றனர்.
31. நம்மை நாமே தீர்ப்புக்குட்படுத்திக் கொண்டால், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக மாட்டோம்.
32. அப்படியே ஆண்டவரின் தீர்ப்புக்குள்ளானாலும், அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார் என்பதே கருத்து. இவ்வுலகத்தோடு நாமும் அழிவுத்தீர்ப்பை அடையாதிருக்கவே அவ்வாறு செய்கிறார்.
33. எனவே, என் சகோதரர்களே, உண்பதற்கு நீங்கள் ஒன்று கூடும்போது, ஒருவர் ஒருவருக்காகத் காத்திருங்கள்.
34. பசிக்கு உண்பதானால் வீட்டிலேயே உண்ணுங்கள்; அப்போது, நீங்கள் கூடிவருவது தண்டனைத் தீர்ப்புக்கு உரியதாய் இராது. மற்றதெல்லாம் நான் வரும்போது ஒழுங்குபடுத்துகிறேன்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 11 of Total Chapters 16
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
1 கொரிந்தியர் 11:13

×

Alert

×

tamil Letters Keypad References