1. தாவீது எபிரோனில் இருந்தபோது அவருக்குப் பல மக்கள் பிறந்தனர். அவருடைய மூத்த மகன் பெயர் அம்னோன். இவர் எஸ்ராயேல் ஊராளான அக்கினோவாமிடம் பிறந்தவர். தானியேல் என்பவர் அவருடைய இரண்டாவது மகன். இவர் கார்மேல் ஊராளாகிய அபிகாயிலிடம் பிறந்தவர்.
2. கெசூர் அரசரான தொல்மாயியின் மகன் மாக்காளின் மகன் அப்சலோம் மூன்றாவது மகன். அதோனியாசு நான்காவது மகன்.
3. இவரைப் பெற்றவள் ஆகீது. அபித்தாளிடம் பிறந்த சபாத்தியாசு ஐந்தாவது மகன். ஆறாவது மகன் பெயர் யெத்திராம். அவர் தாவீதின் மனைவி எகிலா மூலம் பிறந்தார்.
4. இந்த ஆறு புதல்வரும் அவர் எபிரோனில் இருந்த போது பிறந்தனர். அவர் அங்கே ஏழு ஆண்டுகளும் ஆறு மாதமும் ஆட்சி புரிந்தார். யெருசலேமிலோ முப்பத்திமூன்று ஆண்டுகள் அரசோச்சினார்.
5. அவர் யெருசலேமில் இருந்தபோது, சிம்மா, சோபாப், நாத்தான், சாலமோன் ஆகிய புதல்வர்கள் அவருக்குப் பிறந்தனர். இந்த நால்வரும் அம்மியேலின் மகள் பெத்சாபே மூலம் பிறந்தவர்கள்.
6. ஏபார், எலிசமா, எலிப்பலேத்,
7. நோகே, நேபேக், யபியா,
8. எலிசமா, எலியதா, எலிப்பேலேத் ஆகிய ஒன்பது பேரும்,
9. அவர்களின் சகோதரி தாமார் என்பவளும் தாவீதின் மக்களாவர். இவர்களைத் தவிர அவருக்கு வைப்பாட்டிகள் மூலம் மக்கள் இருந்தனர்.
10. சாலமோனின் மகன் பெயர் ரொபோவாம். ரொபோவமின் மகன் அபியா ஆசாவைப் பெற்றார். ஆசா யோசபாத்தைப் பெற்றார். யோசபாத்தின் மகன் பெயர் யோராம்;
11. யோராமின் மகன் பெயர் ஒக்கோசியாசு. ஒக்கோசியாசின் மகன் பெயர் யோவாசு.
12. யோவாசின் மகன் பெயர் அமாசியாசு. அமாசியாசு அசாரியாசைப் பெற்றார். அசாரியாசு யோவாத்தானைப் பெற்றார். யோவாத்தானின் மகன் பெயர் ஆக்காசு.
13. இந்த ஆக்காசு எசேக்கியாசைப் பெற்றார். எசேக்கியாசு மனாசேயைப் பெற்றார்.
14. மனாசே ஆமோனைப் பெற்றார். ஆமோன் யோசியாசைப் பெற்றார்.
15. யோசியாசின் மூத்த மகன் பெயர் யோகனான்; இரண்டாவது மகன் பெயர் யோவாக்கீம்; மூன்றாவது மகன் பெயர் செதேசியாசு; நான்காவது மகன் பெயர் செல்லும்.
16. யோவாக்கீமின் புதல்வர் எக்கோனியாசும், செதேசியாசுமாம். எக்கோனியாசின் புதல்வர்கள்:
17. அசீர், சலாத்தியேல்,
18. மெல்கீராம், பதாயியா, சென்னேசேர், எகேமியா, சாமா, நதாபியா ஆகியோராவர்.
19. பதாயியா என்பவருக்கு செரோபாபேல், செமேயி ஆகியோர் பிறந்தனர். செரோபாபேல் மொசொல்லாமையும், அனனியாசையும், அவர்களின் சகோதரி சலோமித்தையும்,
20. அசபான், ஒகோல், பராக்கியான், கசாதியாசு, யோசபெசேத் என்ற வேறு ஐவரையும் பெற்றார்.
21. அனனியாசின் மகனது பெயர் பல்தியாஸ். இவர் எசெயாசுவின் தந்தை. இந்த எசெயாசுவின் மகனது பெயர் ரப்பாயியா; ரப்பாயியாவின் மகனது பெயர் அர்னான்; அர்னானின் மகனது பெயர் ஒப்தியா; ஒப்தியாவின் மகனது பெயர் சேக்கேனியாசு.
22. சேக்கேனியாசின் மகனது பெயர் செமெயியா; செமெயியாவிற்கு அத்தூஸ், எகால், பாரியா, நாரியா, சாப்பாத் என்ற ஆறு புதல்வர்கள் இருந்தனர்.
23. நாரியாவிற்கு எலியோவெனாயி, எசேக்கியாசு, எசுரிகம் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர்.
24. எலியோவெனாயியிக்கு ஒதுயியா, எலியாசூப், பெலெயியா, ஆக்கூப், யொகனான், தலாயியா, அனானி என்ற ஏழு புதல்வர்கள் இருந்தனர்.