1. அப்போது தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாப், ஏமான், இதித்தூன் ஆகியோரின் மக்களுள் சிலரைத் திருப்பணிக்கென்று பிரித்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் கைத்தாளங்களையும் ஒலித்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணி ஆற்றியோருடையவும் அவர் புரிந்த பணியினுடையவும் விபரம் வருமாறு:
2. ஆசாப்பின் மக்களில் சக்கூர், யோசேப், நத்தானியா, அசரேலா ஆகியோர். இவர்கள் ஆசாப்பின் அதிகாரத்திற்குட்பட்டு, அரசர் கட்டளைப்படி நின்று கொண்டு இறைவாக்குரைப்பார்.
3. இதித்தூன் குடும்பத்திலிருந்து அவன் மக்களான கொதோலியாஸ், சோரி, ஏசேயியாஸ், அசாபியாஸ், மத்தாத்தியாஸ் ஆகிய அறுவர்; தங்கள் தந்தை இதித்தூனின் அதிகாரத்திற்குட்பட்டு சுரமண்டலம் இசைத்து இறைவாக்குரைத்து ஆண்டவர் மகிமையை ஓதி வந்தனர்.
4. ஏமான் குடும்பத்திலிருந்து அவன் மக்களான பொக்சியாவு, மத்தானியாவு, ஓசியேல், சுபுவேல், எரிமோத், அனானியாஸ், அனானி, ஏலியத்தா, கெதெல்தி, ரொமேம்தியேசார், எஸ்பகாசா, மெல்லோத்தி, ஒதீர், மகசியோத் ஆகியோர்.
5. இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் மக்களாவர். ஏமானை உயர்த்துவதாகக் கடவுள் கொடுத்திருந்த வாக்கின்படியே அவர் அவனுக்குப் பதினான்கு புதல்வர்களையும் மூன்று புதல்வியரையுங் கொடுத்திருந்தார்.
6. ஆசாப், இதித்தூன், ஏமான் ஆகியோரின் புதல்வர்களான இவர்கள் எல்லாரும் அரசரின் கட்டளைப்படி தத்தம் தந்தையின் அதிகாரத்திற்குட்பட்டு ஆண்டவரின் ஆலயத்திலே தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கவும், ஆலயத்திலே திருப்பணி செய்யவும் நியமிக்கப்பட்டார்கள்.
7. ஆண்டவரின் பாடல்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களான அவர்களும் அவர்களின் சகோதரர்களும் மொத்தம் இருநூற்றெண்பத்தெட்டுப் பேர்.
8. பெரியவனும் சிறியவனும், ஆசானும் மாணாக்கனும் சரிசமானமாய், தங்கள் முறைவரிசைக்காகச் சீட்டுப் போட்டனர்.
9. முதல் சீட்டு ஆசாபின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப் என்பவனுக்கு விழுந்தது. இரண்டாவது சீட்டு கொதோலியாசும் அவனுடைய மக்களும் சகோதரர்களுமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
10. மூன்றாவது சீட்டு சக்கூரும் அவனுடைய மக்களும் சகோதரர்களுமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
11. நான்காவது சீட்டு இசாரியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
12. ஐந்தாவது சீட்டு நத்தானியாசும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
13. ஆறாவது சீட்டு பொக்சியாவும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
14. ஏழாவது சீட்டு இஸ்ரேலாவும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
15. எட்டாவது சீட்டு எசாயியாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
16. ஒன்பதாவது சீட்டு மத்தானியாசும், அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
17. பத்தாவது சீட்டு செமேயியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
18. பதினோராவது சீட்டு அசரேலும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
19. பன்னிரண்டாவது சீட்டு அசாபியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
20. பதின்மூன்றாவது சீட்டு சுபுவேலும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
21. பதினான்காவது சீட்டு மத்தாத்தியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
22. பதினைந்தாவது சீட்டு எரிமோத்தும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
23. பதினாறாவது சீட்டு அனானியாசும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
24. பதினேழாவது சீட்டு எஸ்பக்காசாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
25. பதினெட்டாவது சீட்டு அனானியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
26. பத்தொன்பதாவது சீட்டு மெல்லோத்தியும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
27. இருபதாவது சீட்டு எலியாதாவும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
28. இருபத்தோராவது சீட்டு ஒத்தீரும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
29. இருபத்திரண்டாவது சீட்டு கெதெல்தியும் அவன் மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
30. இருபத்து மூன்றாவது சீட்டு மகசியோத்தும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.
31. இருபத்து நான்காவது சீட்டு ரொமேந்தியேசேரும் அவனுடைய மக்களும் சகோதரருமாகிய பன்னிருவருக்கும் விழுந்தது.