தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 நாளாகமம்
1. ஆரோன் புதல்வரின் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர், நதாப், அபியு, எலியெசார், ஈத்தமார், ஆகியோர்.
2. நாதாபும் அபியுவும் தங்கள் தந்தைக்கு முன்னரே பிள்ளைப் பேறின்றி இறந்து போயினர். எலியெசார், ஈத்தமார் ஆகியோர் குருக்களாகப் பணி புரிந்தனர்.
3. தாவீது, எலியெசாரின் மக்களில் ஒருவனான சாதோக்கினுடையவும், ஈத்தமாரின் மக்களில் ஒருவனான அக்கிமெலேக்கினுடையவும் உதவியால், அவர்களைப் பிரிந்து அவர்கள் செய்ய வேண்டிய பணிக்குத்தக அவர்களை வரிசைப்படி அமைத்தார்.
4. ஆனால் ஈத்தமாரின் மக்களை விட எலியெசாரின் மக்களுக்குள் பலர் தலைவர்களாய் இருந்தனர். எலியெசாரின் புதல்வரில் பதினாறு பேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், ஈத்தமாரின் புதல்வரில் எட்டுப் பேர் குடும்பத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
5. எலியெசார், ஈத்தமார் ஆகிய இருவரின் குடும்பங்களிலும் திருத்தலத்தைச் சார்ந்த தலைவர்களும் கடவுளின் திருப்பணியைச் சார்ந்த தலைவர்களும் இருந்தனர். எனவே இரு குடும்பங்களையும் சீட்டுப் போட்டே பிரித்தார்கள்.
6. நத்தானியேலின் மகனும் லேவியர்களின் எழுத்தனுமான செமேயியாஸ் என்பவன் அரசர், தலைவர்கள், சாதோக் என்னும் குரு, அபியதாரின் மகன் அக்கிமெலேக், குருக்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்களைப் பதிவு செய்து கொண்டான். எலியெசாரின் குடும்பத்திற்கும் ஈத்தமாரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.
7. முதலாவது சீட்டு யோய்யரீப் என்பவனுக்கும், இரண்டாவது ஏதா என்பவனுக்கும், முன்றாவது ஆரீமுக்கும்,
8. நான்காவது சேயோரிமுக்கும்,
9. ஐந்தாவது மெல்கியாவுக்கும், ஆறாவது மைமானுக்கும்,
10. ஏழாவது அக்கோசுக்கும், எட்டாவது அபியாவுக்கும்,
11. ஒன்பதாவது ஏசுவாவுக்கும், பத்தாவது சேக்கேனியாவுக்கும்
12. பதினொராவது எலியாசிப்புக்கும், பன்னிரண்டாவது யாசிமுக்கும்,
13. பதின்மூன்றாவது ஒப்பாவுக்கும், பதினான்காவது இஸ்பாப்புக்கும்,
14. பதினைந்தாவது பெல்காவுக்கும், பதினாறாவது எம்மேருக்கும்,
15. பதினேழாவது ஏசீருக்கும், பதினெட்டாவது அப்சேசுக்கும், பத்தொன்பதாவது பெதேயியாவுக்கும்,
16. இருபதாவது எசேக்கியேலுக்கும்,
17. இருபத்தோராவது யாக்கீனுக்கும், இருபத்திரண்டாவது காமூலுக்கும்,
18. இருபத்து மூன்றாவது தலையோவுக்கும், இருபத்து நான்காவது மாசியோவுக்கும் விழுந்தது.
19. இஸ்ராயேலில் கடவுளாகிய ஆண்டவரால் அவர்கள் தந்தை ஆரோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைப்படியே, ஆரோன் அவர்களுக்கென செயல்முறைகளை அமைத்தார். தங்கள் முறைப்படி அவர்கள் திருப்பணி செய்யும் பொருட்டு வகுக்கப்பட்ட பிரிவுகள் இவையே.
20. எஞ்சிய லேவியின் மக்களுக்குள், அம்ராமின் புதல்வர்களில் சுபாயேலும், சுபாயேலின் புதல்வர்களில் எசெதேயியாவும்,
21. ரொகோபியாவின் புதல்வர்களில் எசியாஸ் என்ற தலைவனும் இருந்தனர்.
22. இசாரியின் மகன் பெயர் சாலமோத். சாலமோத்தின் மகன் பெயர் யாகாத்.
23. இவனுடைய மூத்த மகன் பெயர் எரீயாப்; இரண்டாவது மகன் பெயர் அமாரியாஸ்; மூன்றாவது மகன் பெயர் யகாசியேஸ்; நான்காவது மகன் பெயர் ஏக்மான்.
24. ஓசியேலின் மகன் பெயர் மிக்கா; மிக்காவின் மகன் பெயர் சாமீர்.
25. மிக்காவின் சகோதரன் பெயர் ஏசியா; ஏசியாவின் மகன் பெயர் சக்கரிளாஸ்.
26. மெராரியின் புதல்வர் மொகோலி, மூசி ஆகியோர். ஒசியாவின் மகன் பெயர் பென்னோ.
27. மற்றும் ஒசியாவு, சோவாம், சக்கூர், எபீரி ஆகியோரும் மெராரியின் மக்களே.
28. மொகோலியின் மகன் பெயர் எலியெசார். இவனுக்கு மகப்பேறில்லை.
29. சீசுடைய மகன் பெயர் எராமேயல்.
30. மூசியுடைய புதல்வர்: மொகோலி, எதேர், எரிமோத் ஆகியோர். தங்கள் வம்ச வரிசைப்படி லேவியரின் புதல்வர்கள் இவர்களே.
31. இவர்களும் தங்கள் சகோதரராகிய ஆரோனின் புதல்வர் செய்தது போல, தாவீது அரசர், சாதோக், அக்கிமெலேக், குருக்கள், லேவியரின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், பெரியோரும் சிறியோரும் சீட்டுப் போட்டுக் கொண்டனர். எல்லா வேலைகளும் சரிசமமாகப் பிரித்தளிக்கப்பட்டன.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 29
1 நாளாகமம் 24:45
1 ஆரோன் புதல்வரின் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர், நதாப், அபியு, எலியெசார், ஈத்தமார், ஆகியோர். 2 நாதாபும் அபியுவும் தங்கள் தந்தைக்கு முன்னரே பிள்ளைப் பேறின்றி இறந்து போயினர். எலியெசார், ஈத்தமார் ஆகியோர் குருக்களாகப் பணி புரிந்தனர். 3 தாவீது, எலியெசாரின் மக்களில் ஒருவனான சாதோக்கினுடையவும், ஈத்தமாரின் மக்களில் ஒருவனான அக்கிமெலேக்கினுடையவும் உதவியால், அவர்களைப் பிரிந்து அவர்கள் செய்ய வேண்டிய பணிக்குத்தக அவர்களை வரிசைப்படி அமைத்தார். 4 ஆனால் ஈத்தமாரின் மக்களை விட எலியெசாரின் மக்களுக்குள் பலர் தலைவர்களாய் இருந்தனர். எலியெசாரின் புதல்வரில் பதினாறு பேர் தங்கள் குடும்பத் தலைவர்களாகவும், ஈத்தமாரின் புதல்வரில் எட்டுப் பேர் குடும்பத் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். 5 எலியெசார், ஈத்தமார் ஆகிய இருவரின் குடும்பங்களிலும் திருத்தலத்தைச் சார்ந்த தலைவர்களும் கடவுளின் திருப்பணியைச் சார்ந்த தலைவர்களும் இருந்தனர். எனவே இரு குடும்பங்களையும் சீட்டுப் போட்டே பிரித்தார்கள். 6 நத்தானியேலின் மகனும் லேவியர்களின் எழுத்தனுமான செமேயியாஸ் என்பவன் அரசர், தலைவர்கள், சாதோக் என்னும் குரு, அபியதாரின் மகன் அக்கிமெலேக், குருக்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு முன்பாக, அவர்களைப் பதிவு செய்து கொண்டான். எலியெசாரின் குடும்பத்திற்கும் ஈத்தமாரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது. 7 முதலாவது சீட்டு யோய்யரீப் என்பவனுக்கும், இரண்டாவது ஏதா என்பவனுக்கும், முன்றாவது ஆரீமுக்கும், 8 நான்காவது சேயோரிமுக்கும், 9 ஐந்தாவது மெல்கியாவுக்கும், ஆறாவது மைமானுக்கும், 10 ஏழாவது அக்கோசுக்கும், எட்டாவது அபியாவுக்கும், 11 ஒன்பதாவது ஏசுவாவுக்கும், பத்தாவது சேக்கேனியாவுக்கும் 12 பதினொராவது எலியாசிப்புக்கும், பன்னிரண்டாவது யாசிமுக்கும், 13 பதின்மூன்றாவது ஒப்பாவுக்கும், பதினான்காவது இஸ்பாப்புக்கும், 14 பதினைந்தாவது பெல்காவுக்கும், பதினாறாவது எம்மேருக்கும், 15 பதினேழாவது ஏசீருக்கும், பதினெட்டாவது அப்சேசுக்கும், பத்தொன்பதாவது பெதேயியாவுக்கும், 16 இருபதாவது எசேக்கியேலுக்கும், 17 இருபத்தோராவது யாக்கீனுக்கும், இருபத்திரண்டாவது காமூலுக்கும், 18 இருபத்து மூன்றாவது தலையோவுக்கும், இருபத்து நான்காவது மாசியோவுக்கும் விழுந்தது. 19 இஸ்ராயேலில் கடவுளாகிய ஆண்டவரால் அவர்கள் தந்தை ஆரோனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்டளைப்படியே, ஆரோன் அவர்களுக்கென செயல்முறைகளை அமைத்தார். தங்கள் முறைப்படி அவர்கள் திருப்பணி செய்யும் பொருட்டு வகுக்கப்பட்ட பிரிவுகள் இவையே. 20 எஞ்சிய லேவியின் மக்களுக்குள், அம்ராமின் புதல்வர்களில் சுபாயேலும், சுபாயேலின் புதல்வர்களில் எசெதேயியாவும், 21 ரொகோபியாவின் புதல்வர்களில் எசியாஸ் என்ற தலைவனும் இருந்தனர். 22 இசாரியின் மகன் பெயர் சாலமோத். சாலமோத்தின் மகன் பெயர் யாகாத். 23 இவனுடைய மூத்த மகன் பெயர் எரீயாப்; இரண்டாவது மகன் பெயர் அமாரியாஸ்; மூன்றாவது மகன் பெயர் யகாசியேஸ்; நான்காவது மகன் பெயர் ஏக்மான். 24 ஓசியேலின் மகன் பெயர் மிக்கா; மிக்காவின் மகன் பெயர் சாமீர். 25 மிக்காவின் சகோதரன் பெயர் ஏசியா; ஏசியாவின் மகன் பெயர் சக்கரிளாஸ். 26 மெராரியின் புதல்வர் மொகோலி, மூசி ஆகியோர். ஒசியாவின் மகன் பெயர் பென்னோ. 27 மற்றும் ஒசியாவு, சோவாம், சக்கூர், எபீரி ஆகியோரும் மெராரியின் மக்களே. 28 மொகோலியின் மகன் பெயர் எலியெசார். இவனுக்கு மகப்பேறில்லை. 29 சீசுடைய மகன் பெயர் எராமேயல். 30 மூசியுடைய புதல்வர்: மொகோலி, எதேர், எரிமோத் ஆகியோர். தங்கள் வம்ச வரிசைப்படி லேவியரின் புதல்வர்கள் இவர்களே. 31 இவர்களும் தங்கள் சகோதரராகிய ஆரோனின் புதல்வர் செய்தது போல, தாவீது அரசர், சாதோக், அக்கிமெலேக், குருக்கள், லேவியரின் குடும்பத் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், பெரியோரும் சிறியோரும் சீட்டுப் போட்டுக் கொண்டனர். எல்லா வேலைகளும் சரிசமமாகப் பிரித்தளிக்கப்பட்டன.
மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 29
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References