தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 நாளாகமம்
1. அப்பொழுது தாவீது, "கடவுளாகிய ஆண்டவருடைய ஆலயம் இதுவே; இஸ்ராயேல் மக்கள் பலியிட வேண்டிய தகனப் பலிபீடமும் இதுவே" என்றார்.
2. பின்பு தாவீது இஸ்ராயேல் நாட்டிலே வாழ்ந்து வந்த அந்நியரைக் கூடி வரச் செய்தார். கடவுளின் ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பொளியுமாறு கல்வெட்டுவோரை அவர்களுள் தேர்ந்து கொண்டார்.
3. வாயில்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணி, கீல், முளை முதலியன தயாரிப்பதற்கு ஏராளமான இரும்பையும், அளவிட முடியாத வெண்கலத்தையும், எண்ணற்ற கேதுரு மரங்களையும் தயார் செய்தார் தாவீது.
4. சீதோனியரும் தீரியரும் தாவீதிடம் கொண்டுவந்த கேதுரு மரங்கள் எண்ணிலடங்கா.
5. என் மகன் சாலமோன் சிறுவன்; அனுபவம் இல்லாதவன். நான் ஆண்டவருக்குக் கட்ட விரும்புகின்ற ஆலயமோ எல்லா நாடுகளிலும் பேரும் புகழும் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். ஆகையால் அதற்கு வேண்டியவற்றை எல்லாம் நானே தயாரித்து வைப்பேன்" என்று கூறி, தாவீது சாகுமுன் ஆலயத்திற்குத் தேவையான அனைத்தையும் சேகரித்து வைத்தார்.
6. மேலும் தம் மகன் சாலமோனை அழைத்து, இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுமாறு அவனைப் பணிந்தார்.
7. தாவீது சாலமோனை நோக்கி, "என் மகனே, நான் என் கடவுளாகிய ஆண்டவரின் திருப் பெயருக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட எண்ணியிருந்தேன்.
8. ஆனால் ஆண்டவர் என்னுடன் பேசி, 'நீ அதிகமான குருதியைச் சிந்தியுள்ளாய். பற்பல போர்களைத் தொடுத்துள்ளாய். என் திருமுன் மிகுதியான இரத்தத்தைச் சிந்தியுள்ள நீ நமது திருப்பெயருக்கு ஆலயத்தைக் கட்டக்கூடாது.
9. இதோ உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் அமைதியின் அன்பனாய் இருப்பான். சுற்றிலுமுள்ள அவனுடைய பகைவரின் தொல்லைகளினின்று நாம் அவனை விடுவித்து, அவன் அமைதியாய் இருக்குமாறு செய்வோம். இதன் காரணமாக அவன் அமைதியின் அண்ணல் என அழைக்கப்படுவான். அவனது காலம் முழுவதும் இஸ்ராயேலுக்குச் சமாதானமும் அமைதியும் அருளுவோம்.
10. அவனே நமது திருப் பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் நமக்கு மகனாய் இருப்பான்; நாம் அவனுக்குத் தந்தையாயிருப்போம். இஸ்ராயேல் மீது அவனது ஆட்சியை என்றென்றும் நிலை நிறுத்துவோம்' என்றார்.
11. இப்போது, என் மகனே, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக! அதனால் ஆண்டவர் உன்னைப் பற்றிக் கூறியது போல நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு ஓர் ஆலயத்தைக் கட்டுவதில் வெற்றி காண்பாய்.
12. நீ இஸ்ராயேலை ஆண்டு உன் கடவுளாகிய ஆண்டவரின் திருச்சட்டத்தின்படி ஒழுகுமாறு ஆண்டவர் உனக்கு ஞானத்தையும் விவேகத்தையும் கொடுத்தருளுவாராக.
13. ஏனெனில், ஆண்டவர் மோயீசன் மூலம் இஸ்ராயேலுக்குக் கொடுத்த கட்டளைகளையும் சட்டங்களையும் நீ கடைப்பிடித்து ஒழுகினால் உனக்கு வெற்றி கிட்டும். நெஞ்சுத் துணிவுடன் திடமாயிரு; அஞ்சாமலும் கலங்காமலும் இரு.
14. இதோ நான் என் ஏழ்மை நிலையில் ஆண்டவரின் ஆலயச் செலவுக்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியும், எராளமான வெண்கலமும் இரும்பும் சேகரித்து வைத்துள்ளேன். நீ இன்னும் அதிகம் சேகரிக்க வேண்டும்.
15. வேலை செய்ய ஆட்களும், கல்வெட்டுவோர், கொத்தர், தச்சர் ஆகியோரும் மற்றும் எல்லாவிதத் தொழிலிலும் திறமை வாய்ந்தவர்களும் உனக்கும் ஏராளமாய் இருக்கின்றனர்.
16. பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றிற்கும் அளவே கிடையாது. எனவே தாமதியாமல் வேலையைத் தொடங்கு. ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்று கூறினார்.
17. தம் மகன் சாலமோனுக்கு உதவி செய்யும்படி இஸ்ராயேலின் தலைவர்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டார்.
18. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருக்கிறார்; உங்களைச் சுற்றிலும் அமைதியைத் தந்திருக்கிறார்; உங்கள் எதிரிகள் அனைவரையும் உங்கள் கையில் ஒப்புவித்துள்ளார்; ஆண்டவர் முன்பாகவும் அவருடைய மக்களின் முன்பாகவும் நாடு அமைதியாய் இருந்து வருகிறது. இது கண்கூடு.
19. ஆகையால் உங்கள் கடவுளாகிய ஆண்டவரையே நாடும்படி உங்கள் இதயங்களையும் உங்கள் ஆன்மாக்களையும் தயாரியுங்கள். எனவே நீங்கள் எழுந்து, கடவுளாகிய ஆண்டவருக்குப் புனித இல்லத்தைக் கட்டுங்கள். ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியையும், ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தட்டுமுட்டுகளையும், ஆண்டவரது திருப்பெயருக்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுவந்து வையுங்கள்" என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 29 Chapters, Current Chapter 22 of Total Chapters 29
1 நாளாகமம் 22:31

×

Alert

×

tamil Letters Keypad References