தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 நாளாகமம்
1. தாவீது சீசின் மகன் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிசெலேக் என்னுமிடத்தில் இருந்தபோது சிலர் அவரிடம் வந்தனர். அவர்கள் ஆற்றல் மிகக் கொண்டவரும் திறமை மிக்கவருமான படைவீரராவர்.
2. மேலும் அவர்கள் வில் வீரராயும், இரு கையாலும் கவணையும் அம்பையும் கையாள்வதில் திறமை படைத்தவராயும் இருந்தனர். அவர்கள் பென்யமீன் குலத்தினரான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
3. அவர்கள் வருமாறு: கபாத்தியனான சமாவின் புதல்வராகிய தலைவன் அகியேசர், யோவாசு; அஸ்மோத்தின் புதல்வரான யசியேல், பலத்து; அநத்தோத்தியரான பராக்கா, ஏகு;
4. முப்பது பேருக்குள் திறமை மிக்கவனும் அம் முப்பதின்மருக்குத் தலைவனுமான கபாவோனைச் சேர்ந்த சமையாசு; எரேமியாசு, எகேசியேல், எகனான்;
5. கெதேரோத்தியனான எசபாத்து, எலுசாயி, எரிமுத், பாலியா, சமாரியா; அருபியனான சப்பாத்தியா;
6. எல்கானா, யெசீயா, அசரேல் யோவெசேர்;
7. கரெகிமயனான எஸ்பா; கெதோசைச் சேர்ந்த யெரொகாமின் புதல்வர் யொவேலா, சாதியா ஆகியோருமாம்.
8. மேலும், காதி என்ற இடத்திலிருந்து ஆற்றல் மிக்கவரும் திறமைமிக்க போர்வீரர்களும், ஈட்டியும் கேடயமும் தாங்குவோரும், சிங்கம் போன்ற முகத்தை உடையவர்களும், மலைவாழ் மான்கள் போல வேகமாய் ஓடக்கூடியவர்களுமான சிலரும் பாலைவனத்தில் தலைமறைவாய் இருந்த தாவீதிடம் வந்தனர்.
9. அவர்கள் யாரெனில்: தலைவனான எசேர், இரண்டாவது ஒப்தியாஸ், மூன்றாவது எலியாப்,
10. நான்காவது மஸ்மானா, ஐந்தாவது எரேமியாசு,
11. ஆறாவது எத்தி, ஏழாவது எலியேல்,
12. எட்டாவது யொகனான், ஒன்பதாவது எல்சேபாத்,
13. பத்தாவது எரேமியாசு, பதினோராவது மக்பனாயி ஆகியோராம்.
14. இவர்கள் காத்தின் புதல்வர்களும் படைத்தலைவர்களுமாவர். அவர்களில் சிறியவன் நூறு பேருக்கும், பெரியவன் ஆயிரம் பேருக்கும் சமமாய் இருந்தனர்.
15. யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக்கடந்து, மேற்கிலும் கிழக்கிலும் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்த யாவரையும் துரத்தியடித்தவர்கள் இவர்களே.
16. அவ்வாறே பென்யமீன் குலத்தவரிலும் யூதா குலத்தவரிலும் பலர் காவல் சூழ்ந்த இடத்தில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்தனர்.
17. தாவீது வெளிப்போந்து, அவர்களை எதிர்கொண்டு சென்று, "நீங்கள் எனக்கு உதவி செய்யும் பொருட்டு நண்பர்கள் என்ற முறையில் என்னிடம் வந்தீர்களேயாகில், நான் உங்களோடு சேர்ந்துகொள்ளத் தயார். மாறாக, குற்றம் புரிந்திராத என்னை என் எதிரிகள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு வந்திருப்பீர்களேயாகில், நம் முன்னோரின் கடவுள் அதைப்பார்த்துத் தீர்ப்புச் சொல்லட்டும்" என்றார்.
18. அப்போது முப்பதின்மருக்குத் தலைவனான அமசாயியை ஆவி ஆட்கொள்ள, அவன், "ஓ! தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள். இசாயியின் மகனே! நாங்கள் உம்மோடு இருப்போம். உமக்குச் சமாதானம், சமாதானம்! உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்! ஏனெனில் உம் கடவுள் உமக்குத் துணை நிற்கிறார்" என்றான். தாவீதும் அவர்களை வரவேற்றுத் தம் படைக்குத் தலைவர்களாக்கினார்.
19. தாவீது பிலிஸ்தியருடன் சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயைச் சேர்ந்த சிலரும் அவரிடம் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர் அவர்களோடு சேர்ந்து போரிடவில்லை. ஏனெனில் பிலிஸ்தியத் தலைவர்கள் சிந்தனை செய்து, "இவன் தன் தலைவன் சவுலிடம் திரும்பச் சேர்ந்து கொள்வானாகில் நமது உயிருக்குத்தான் ஆபத்து" என்று சொல்லி அவரை அனுப்பி விட்டனர்.
20. ஆகையால் தாவீது சிசெலேகுக்குத் திரும்பிச் சென்றார். அப்பொழுது மனாசேயில் ஆயிரவர்க்குத் தலைவர்களான எத்னாஸ், யோசபாத், எதியேல், மிக்காயேல், எத்னாஸ், யோசபாத், எலியு, சாலாத்தி ஆகியோர் மனாசேயினின்றும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டனர்.
21. இவர்கள் கள்வரை எதிர்த்து நின்று தாவீதுக்கு உதவி புரிந்தனர். ஏனெனில் எல்லாரும் ஆற்றல் மிக்க ஆடவராயும் படைத்தலைவர்களாயும் இருந்தனர்.
22. இங்ஙனம் தாவீதுக்கு உதவிபுரியப் பலர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்த வண்ணம் இருந்தனர். எனவே அவருடைய ஆதரவாளர்கள் மாபெரும் படையாகப் பெருகினர்.
23. ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் கொடுக்கும் பொருட்டு எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைத்தலைவரின் எண்ணிக்கையாவது:
24. கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போரிடத் தயாராக வந்த யூதா புதல்வர்கள் ஆறாயிரத்து எண்ணுறு பேர்;
25. சிமெயோன் புதல்வரில் போரிடவந்த ஆற்றல் மிக்க மனிதர் ஏழாயிரத்து நூறு பேர்;
26. லேவி புதல்வரில் நாலாயிரத்து அறுநூறுபேர்;
27. ஆரோன் வழிவந்தவருக்குத் தலைவரான யோயியாதாவும் அவனோடு மூவாயிரத்து எழுநூறு பேரும்;
28. ஆற்றல் மிக்க இளைஞனான சாதோக்கும், அவன் குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு தலைவர்களும்;
29. பென்யமீன் புதல்வரில், சவுலின் உறவினர்கள் மூவாயிரம் பேர்; அவர்களில் பலர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்து வந்தவர்கள்;
30. எப்பராயீம் புதல்வரில் தங்கள் குடும்பங்களில் புகழ்பெற்றவர்களும் ஆற்றல்மிக்க மனிதர்களும் இருபதினாயிரத்து எண்ணுறு பேர்.
31. மனாசேயின் பாதிக் கோத்திரத்தினின்று பதினெட்டாயிரம் பேர்: அவர்களில் ஒவ்வொருவரும் தத்தம் பெயர் வரிசைப்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர்.
32. இசாக்கார் புதல்வர்களில், இஸ்ராயேலர் செய்ய வேண்டியதுபற்றிக் குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த ஆழ்ந்தறிவுள்ள இருநூறு குடும்பத்தலைவர்கள்: இவர்களது குலத்தின் மக்கள் அனைவரும் இவர்களது அறிவுரைக்குச் செவிமடுத்தனர்.
33. சபுலோனிலிருந்து போருக்குச் செல்பவர்களும், போர்க்கலங்களை அணிந்து அணிவகுத்து நின்றவர்களுமான ஐம்பதினாயிரம் பேர் இரட்டை மனமின்றி உதவிக்கு வந்தனர்.
34. நெப்தலி குலத்தைச் சேர்ந்த ஆயிரம் தலைவர்களும், அவர்களோடு கேடயமும் ஈட்டியும் தாங்கியவர்கள் முப்பத்தேழாயிரம் பேரும் வந்தனர்.
35. தாண் குலத்தினின்று போருக்குத் தயாராயிருந்த இருபத்தெட்டாயிரத்து அறுநூறு பேர்;
36. ஆசேரினின்று போருக்குச் செல்பவர்களும், மற்றவரைப் போருக்கு அழைக்கத் தக்கவர்களுமான நாற்பதினாயிரம் பேர்;
37. யோர்தானுக்கு அக்கரையிலுள்ள ரூபன், காத் என்பவர்களின் புதல்வரிலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலுமாக போர்கலங்களை அணிந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேர்.
38. போர் புரிய நன்கு தகைமை பெற்ற அந்த வீரர் அனைவரும் தாவீதை இஸ்ராயேல் அனைத்திற்கும் அரசராக ஏற்படுத்தக் கருதி முழு உள்ளத்தோடு எபிரோனுக்கு வந்தனர். மேலும் இஸ்ராயேலில் எஞ்சியிருந்த மக்கள் யாவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர்.
39. அவர்கள் அங்கே தாவீதோடு உணவருந்தி மூன்று நாள் தங்கினார்கள். அவர்களின் உறவினரோ அவர்களுக்காக எல்லாவற்றையும் தயாரித்திருந்தனர்.
40. மேலும், இசாக்கார், சபுலோன், நெப்தலி எல்லைகள் வரை அவர்களுக்கு அருகே இருந்தவர்கள் கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், அவர்கள் உண்ணத்தக்க அப்பங்களையும் மாவையும், அத்திப்பழ அடைகளையும், வற்றலான திராட்சைப் பழங்களையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும், ஆடு மாடுகளையும் ஏராளமாகக் கொண்டு வந்திருந்தனர். இஸ்ராயேலில் மகிழ்ச்சி நிலவி வந்தது.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 29
1 நாளாகமம் 12:44
1 தாவீது சீசின் மகன் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிசெலேக் என்னுமிடத்தில் இருந்தபோது சிலர் அவரிடம் வந்தனர். அவர்கள் ஆற்றல் மிகக் கொண்டவரும் திறமை மிக்கவருமான படைவீரராவர். 2 மேலும் அவர்கள் வில் வீரராயும், இரு கையாலும் கவணையும் அம்பையும் கையாள்வதில் திறமை படைத்தவராயும் இருந்தனர். அவர்கள் பென்யமீன் குலத்தினரான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 3 அவர்கள் வருமாறு: கபாத்தியனான சமாவின் புதல்வராகிய தலைவன் அகியேசர், யோவாசு; அஸ்மோத்தின் புதல்வரான யசியேல், பலத்து; அநத்தோத்தியரான பராக்கா, ஏகு; 4 முப்பது பேருக்குள் திறமை மிக்கவனும் அம் முப்பதின்மருக்குத் தலைவனுமான கபாவோனைச் சேர்ந்த சமையாசு; எரேமியாசு, எகேசியேல், எகனான்; 5 கெதேரோத்தியனான எசபாத்து, எலுசாயி, எரிமுத், பாலியா, சமாரியா; அருபியனான சப்பாத்தியா; 6 எல்கானா, யெசீயா, அசரேல் யோவெசேர்; 7 கரெகிமயனான எஸ்பா; கெதோசைச் சேர்ந்த யெரொகாமின் புதல்வர் யொவேலா, சாதியா ஆகியோருமாம். 8 மேலும், காதி என்ற இடத்திலிருந்து ஆற்றல் மிக்கவரும் திறமைமிக்க போர்வீரர்களும், ஈட்டியும் கேடயமும் தாங்குவோரும், சிங்கம் போன்ற முகத்தை உடையவர்களும், மலைவாழ் மான்கள் போல வேகமாய் ஓடக்கூடியவர்களுமான சிலரும் பாலைவனத்தில் தலைமறைவாய் இருந்த தாவீதிடம் வந்தனர். 9 அவர்கள் யாரெனில்: தலைவனான எசேர், இரண்டாவது ஒப்தியாஸ், மூன்றாவது எலியாப், 10 நான்காவது மஸ்மானா, ஐந்தாவது எரேமியாசு, 11 ஆறாவது எத்தி, ஏழாவது எலியேல், 12 எட்டாவது யொகனான், ஒன்பதாவது எல்சேபாத், 13 பத்தாவது எரேமியாசு, பதினோராவது மக்பனாயி ஆகியோராம். 14 இவர்கள் காத்தின் புதல்வர்களும் படைத்தலைவர்களுமாவர். அவர்களில் சிறியவன் நூறு பேருக்கும், பெரியவன் ஆயிரம் பேருக்கும் சமமாய் இருந்தனர். 15 யோர்தான் நதி கரைபுரண்டு ஓடும் முதல் மாதத்தில் அதைக்கடந்து, மேற்கிலும் கிழக்கிலும் பள்ளத்தாக்குகளில் வாழ்ந்து வந்த யாவரையும் துரத்தியடித்தவர்கள் இவர்களே. 16 அவ்வாறே பென்யமீன் குலத்தவரிலும் யூதா குலத்தவரிலும் பலர் காவல் சூழ்ந்த இடத்தில் இருந்த தாவீதிடம் வந்து சேர்ந்தனர். 17 தாவீது வெளிப்போந்து, அவர்களை எதிர்கொண்டு சென்று, "நீங்கள் எனக்கு உதவி செய்யும் பொருட்டு நண்பர்கள் என்ற முறையில் என்னிடம் வந்தீர்களேயாகில், நான் உங்களோடு சேர்ந்துகொள்ளத் தயார். மாறாக, குற்றம் புரிந்திராத என்னை என் எதிரிகள் கையில் ஒப்படைக்கும் பொருட்டு வந்திருப்பீர்களேயாகில், நம் முன்னோரின் கடவுள் அதைப்பார்த்துத் தீர்ப்புச் சொல்லட்டும்" என்றார். 18 அப்போது முப்பதின்மருக்குத் தலைவனான அமசாயியை ஆவி ஆட்கொள்ள, அவன், "ஓ! தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள். இசாயியின் மகனே! நாங்கள் உம்மோடு இருப்போம். உமக்குச் சமாதானம், சமாதானம்! உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்! ஏனெனில் உம் கடவுள் உமக்குத் துணை நிற்கிறார்" என்றான். தாவீதும் அவர்களை வரவேற்றுத் தம் படைக்குத் தலைவர்களாக்கினார். 19 தாவீது பிலிஸ்தியருடன் சேர்ந்துகொண்டு சவுலுக்கு எதிராகப் போரிடச் செல்கையில், மனாசேயைச் சேர்ந்த சிலரும் அவரிடம் வந்து சேர்ந்தனர். ஆனால் அவர் அவர்களோடு சேர்ந்து போரிடவில்லை. ஏனெனில் பிலிஸ்தியத் தலைவர்கள் சிந்தனை செய்து, "இவன் தன் தலைவன் சவுலிடம் திரும்பச் சேர்ந்து கொள்வானாகில் நமது உயிருக்குத்தான் ஆபத்து" என்று சொல்லி அவரை அனுப்பி விட்டனர். 20 ஆகையால் தாவீது சிசெலேகுக்குத் திரும்பிச் சென்றார். அப்பொழுது மனாசேயில் ஆயிரவர்க்குத் தலைவர்களான எத்னாஸ், யோசபாத், எதியேல், மிக்காயேல், எத்னாஸ், யோசபாத், எலியு, சாலாத்தி ஆகியோர் மனாசேயினின்றும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டனர். 21 இவர்கள் கள்வரை எதிர்த்து நின்று தாவீதுக்கு உதவி புரிந்தனர். ஏனெனில் எல்லாரும் ஆற்றல் மிக்க ஆடவராயும் படைத்தலைவர்களாயும் இருந்தனர். 22 இங்ஙனம் தாவீதுக்கு உதவிபுரியப் பலர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்த வண்ணம் இருந்தனர். எனவே அவருடைய ஆதரவாளர்கள் மாபெரும் படையாகப் பெருகினர். 23 ஆண்டவரின் வாக்குறுதிப்படி சவுலின் அரசைத் தாவீதிடம் கொடுக்கும் பொருட்டு எபிரோனில் இருந்த தாவீதிடம் வந்த படைத்தலைவரின் எண்ணிக்கையாவது: 24 கேடயமும் ஈட்டியும் தாங்கிப் போரிடத் தயாராக வந்த யூதா புதல்வர்கள் ஆறாயிரத்து எண்ணுறு பேர்; 25 சிமெயோன் புதல்வரில் போரிடவந்த ஆற்றல் மிக்க மனிதர் ஏழாயிரத்து நூறு பேர்; 26 லேவி புதல்வரில் நாலாயிரத்து அறுநூறுபேர்; 27 ஆரோன் வழிவந்தவருக்குத் தலைவரான யோயியாதாவும் அவனோடு மூவாயிரத்து எழுநூறு பேரும்; 28 ஆற்றல் மிக்க இளைஞனான சாதோக்கும், அவன் குடும்பத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு தலைவர்களும்; 29 பென்யமீன் புதல்வரில், சவுலின் உறவினர்கள் மூவாயிரம் பேர்; அவர்களில் பலர் அதுவரை சவுலின் குடும்பத்திற்குச் சார்பாய் இருந்து வந்தவர்கள்; 30 எப்பராயீம் புதல்வரில் தங்கள் குடும்பங்களில் புகழ்பெற்றவர்களும் ஆற்றல்மிக்க மனிதர்களும் இருபதினாயிரத்து எண்ணுறு பேர். 31 மனாசேயின் பாதிக் கோத்திரத்தினின்று பதினெட்டாயிரம் பேர்: அவர்களில் ஒவ்வொருவரும் தத்தம் பெயர் வரிசைப்படி தாவீதை அரசராக்குவதற்கு வந்தனர். 32 இசாக்கார் புதல்வர்களில், இஸ்ராயேலர் செய்ய வேண்டியதுபற்றிக் குறித்த காலத்தில் அறிவுரை வழங்கி வந்த ஆழ்ந்தறிவுள்ள இருநூறு குடும்பத்தலைவர்கள்: இவர்களது குலத்தின் மக்கள் அனைவரும் இவர்களது அறிவுரைக்குச் செவிமடுத்தனர். 33 சபுலோனிலிருந்து போருக்குச் செல்பவர்களும், போர்க்கலங்களை அணிந்து அணிவகுத்து நின்றவர்களுமான ஐம்பதினாயிரம் பேர் இரட்டை மனமின்றி உதவிக்கு வந்தனர். 34 நெப்தலி குலத்தைச் சேர்ந்த ஆயிரம் தலைவர்களும், அவர்களோடு கேடயமும் ஈட்டியும் தாங்கியவர்கள் முப்பத்தேழாயிரம் பேரும் வந்தனர். 35 தாண் குலத்தினின்று போருக்குத் தயாராயிருந்த இருபத்தெட்டாயிரத்து அறுநூறு பேர்; 36 ஆசேரினின்று போருக்குச் செல்பவர்களும், மற்றவரைப் போருக்கு அழைக்கத் தக்கவர்களுமான நாற்பதினாயிரம் பேர்; 37 யோர்தானுக்கு அக்கரையிலுள்ள ரூபன், காத் என்பவர்களின் புதல்வரிலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலுமாக போர்கலங்களை அணிந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேர். 38 போர் புரிய நன்கு தகைமை பெற்ற அந்த வீரர் அனைவரும் தாவீதை இஸ்ராயேல் அனைத்திற்கும் அரசராக ஏற்படுத்தக் கருதி முழு உள்ளத்தோடு எபிரோனுக்கு வந்தனர். மேலும் இஸ்ராயேலில் எஞ்சியிருந்த மக்கள் யாவரும் ஒரே மனதாய் தாவீதையே அரசராக்க விரும்பினர். 39 அவர்கள் அங்கே தாவீதோடு உணவருந்தி மூன்று நாள் தங்கினார்கள். அவர்களின் உறவினரோ அவர்களுக்காக எல்லாவற்றையும் தயாரித்திருந்தனர். 40 மேலும், இசாக்கார், சபுலோன், நெப்தலி எல்லைகள் வரை அவர்களுக்கு அருகே இருந்தவர்கள் கழுதைகள் மேலும், ஒட்டகங்கள் மேலும், கோவேறு கழுதைகள் மேலும், மாடுகள் மேலும், அவர்கள் உண்ணத்தக்க அப்பங்களையும் மாவையும், அத்திப்பழ அடைகளையும், வற்றலான திராட்சைப் பழங்களையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும், ஆடு மாடுகளையும் ஏராளமாகக் கொண்டு வந்திருந்தனர். இஸ்ராயேலில் மகிழ்ச்சி நிலவி வந்தது.
மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 29
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References