தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 நாளாகமம்
1. எனவே, எபிரோனில் தங்கியிருந்த தாவீதிடம் இஸ்ராயேலர் எல்லாரும் கூடிவந்து, "இதோ நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாய் இருக்கிறோம்.
2. கடந்த காலத்தில் சவுல் அரசராய் இருந்த போதும் எல்லாக் காரியங்களிலும் இஸ்ராயேலை முன்னின்று நடத்தி வந்தவர் நீரே. ஏனெனில், உம் கடவுளாகிய ஆண்டவர் உம்மை நோக்கியே, 'என் மக்களாகிய இஸ்ராயேலை நீ மேய்ப்பாய்; இஸ்ராயேலுக்கு நீ தலைவனாய் இருப்பாய்' என்று சொல்லியிருக்கிறார்" என்றனர்.
3. அவ்வாறே இஸ்ராயேலின் மூப்பர் எல்லாரும் எபிரோனில் தங்கியிருந்த தாவீது அரசரிடம் வந்த போது, அவர் ஆண்டவர் திருமுன் அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆண்டவர் சாமுவேலின் மூலம் உரைத்ததன்படி இஸ்ராயேலின் அரசராக அவர் அபிஷுகம் பெற்றார்.
4. பின்பு தாவீதும் இஸ்ராயேலர் அனைவரும் யெருசலேம் நகருக்கு சென்றனர். அது அப்பொழுது எபூஸ் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் எபுசேயர் அங்கே வாழ்ந்து வந்தனர்.
5. அந்த எபூஸ் நகரின் குடிகள் தாவீதை நோக்கி, "நீர் இதனுள் நுழையமாட்டீர்" என்றனர். எனினும் தாவீது சீயோனின் கோட்டையைப் பிடித்தார். அது தாவீதின் நகராயிற்று.
6. தாவீது, "எபுசேயரை முதலில் முறியடிப்பவன் எவனோ அவன் தலைவனும் தளபதியுமாய் இருப்பான்" என்று சொல்லியிருந்தார். எனவே சார்வியாவின் மகன் யோவாப் முதலில் சென்று போரிட்டுப் படைத்தலைவனானான்.
7. தாவீது அக்கோட்டையில் வாழ்ந்ததன் காரணமாக அது தாவீதின் நகர் என்று அழைக்கப்பட்டது.
8. அவர் மெல்லோ தொடங்கி நகர மதிலை எழுப்பினார். யோவாப் நகரின் ஏனைய இடங்களைப் பழுது பார்த்தார்.
9. தாவீதின் பேரும் புகழும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. சேனைகளின் ஆண்டவர் அவரோடு இருந்தார்.
10. ஆண்டவர் இஸ்ராயேலுக்கு மொழிந்திருந்த வாக்கின்படி இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் அசராகும்படி தாவீதுக்கு ஆற்றல் மிக்க வீரர்களின் தலைவர்கள் உதவியாயிருந்தனர்.
11. தாவீதின் வீரர்களின் விபரம் வருமாறு: அக்கமோனியின் மகன் எஸ்பாம்- இவன் முப்பது பேருக்குத் தலைவன்; தன் ஈட்டியால் முந்நூறு பேரை ஒரே நேரத்தில் குத்திக் கொன்றவன்.
12. அவனை அடுத்து அவன் தந்தையின் சகோதரனுக்குப் பிறந்த அகோகித்தனாகிய எலியேசார். ஆற்றல் மிக்கவர் மூவருள் அவனும் ஒருவன்.
13. பிலிஸ்தியர் படை திரட்டி, பேஸ்தோமீம் என்ற இடத்தில் போரிட வந்த போது எலியெசார் தாவீதுடன் இருந்தான். அங்குள்ள ஒரு வயல் வாற்கோதுமையால் நிறைந்திருக்க, மக்களோ பிலிஸ்தியருக்குப் பயந்து தப்பியோடிவிட்டனர்.
14. அப்பொழுது இவர்கள் அவ்வயலின் நடுவே நின்றுகொண்டு, அதைக் காத்து, பிலிஸ்தியரை முறியடித்தனர். இங்ஙனம் ஆண்டவர் தம் மக்களுக்குப் பெரும் வெற்றியைத் தந்தருளினார்.
15. மீண்டும் பிலிஸ்தியர் ரப்பாயிம் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கியிருந்த போது முப்பது தலைவர்களில் மூன்றுபேர் தாவீது இருந்த அதொல்லாம் என்ற கற்குகைக்குச் சென்றனர்.
16. தாவீது அரணான இடத்தில் இருந்தார். பிலிஸ்தியரின் பாளையம் பெத்லெகேமில் இருந்தது.
17. ஒருநாள் தாவீது, "பெத்லெகேம் ஊர் வாயிலில் உள்ள கிணற்று நீரை யாராவது கொண்டு வந்து தரவேண்டும் என்று ஆசிக்கின்றேன்" என்று ஆவலுடன் கூறினார்.
18. அப்பொழுது அந்த மூவரும் பிலிஸ்தியரின் பாளையத்தின் நடுவே துணிந்து சென்று பெத்லெகேம் ஊர் வாயிலில் இருந்த கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் குடிக்கக் கொண்டு வந்தனர். அவரோ குடிக்க மனமின்றி அதை ஆண்டவருக்கென்று கீழே கொட்டி விட்டார்.
19. நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! தங்கள் உயிரைத் துரும்பாக எண்ணிய இம்மனிதரின் இரத்தத்தை நான் குடியேன்; இவர்கள் தங்கள் உயிருக்கு வரவிருந்த ஆபத்தையும் பாராது, இத்தண்ணீரைக் கொண்டு வந்தனரே!" என்று கூறி அதைக் குடிக்க மறுத்து விட்டார். ஆற்றல் மிக்கவராயிருந்த அம் மூவரும் இத்தகு காரியங்களைச் செய்தனர்.
20. யோவாபின் சகோதரன் அபிசாயி முப்பது பேருக்குத் தலைவனாய் இருந்தான். இவனே தம் ஈட்டியால் முந்நூறு பேரைக் கொன்றவன். எனவே அம் முப்பது பேருள் இவன் அதிகப் பேரும் புகழும் பெற்று விளங்கினான்.
21. அவர்களுள் தலைசிறந்தவனாகவும் திகழ்ந்தான். அதன் பொருட்டே அவன் அவர்களுக்குத் தலைவனானான். ஆயினும் அம் மூவருக்கு அவன் இணையாகான்.
22. மிகத் திடமுள்ளவனான யோயியாதாவின் மகனும் கப்சேல் ஊரானுமாகிய பனாயாஸ் தீரச் செயல்கள் பல புரிந்தவன். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றவன். உறைபனி பெய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் ஒரு கிடங்கினுள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றவனும் அவனே.
23. மேலும் அவன் ஐந்து முழ உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றான். அந்த எகிப்தியன் நெசவாளரின் படைமரத்தைப் போன்ற ஈட்டியைக் கையில் ஏந்தி வந்தான். எனினும் இவன் ஒரு தடியைக் கையிலேந்தி அவன் மீது பாய்ந்து, அவன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, தனது சொந்த ஈட்டியால் அவனைக் குத்திக் கொன்றான்.
24. இவ்விதத் தீரச் செயல்களை எல்லாம் யோயியாதாவின் மகன் பனாயாஸ் செய்ததால் முப்பது பேருள் அவன் பெரும் புகழ் பெற்றான்.
25. அம் முப்பது பேருக்குள் அவன் முதல்வனாயிருந்தாலும் முந்தின மூவருக்கு அவன் இணையானவன் அல்லன். அவனையே தாவீது தம் மெய்க்காவலர்க்குத் தலைவனாக நியமித்தார்.
26. மற்றப் படைவீரர்கள் வருமாறு: யோவாபின் சகோதரன் அசாயேல்; பெத்லெகேம் ஊரானாகிய அவன் தந்தையின் சகோதரனின் மகன் எல்கானான்;
27. அரோரியனான சம்மோத்; பலோனியனான எல்லேஸ்;
28. தேக்குவியனான ஆக்கேசின் மகன் ஈரா; அநத்தோத்தினயனான அபியெசேர்; உசாத்தியனான சொபோக்கை;
29. அகோகியனான இலாய்;
30. நெத்தோப்பாத்தியனான மகராயி; நெத்தோப்பாத்தியனாகிய பானாவின் மகன் எலேத்;
31. பென்யமீன் குலத்தவரில், கபாத்தியனான ரிபாயின் மகன் ஏத்தாயி; பரத்தோனியனான பனாயியா;
32. காஸ் ஆற்றுப்பகுதியைச் சேர்ந்த ஊராயி; அர்பாத்தியனான அபியேல்; பவுறமியனான அஸ்மோத்; சலபோனியனான எலியபா;
33. கெரோனியனான ஆசேமின் புதல்வரில் அராரியனான சகேயின் மகன் யோனத்தான்;
34. அராரியனான சக்காரின் மகன் அகியாம்;
35. ஊரின் மகன் எலீப்பால்;
36. மெக்ராத்தியனான ஏப்பேர்; பெலோனியனான ஆகியா;
37. கர்மேலியனான எர்சோ; அஸ்பையின் மகன் நாராயி;
38. நாத்தானின் சகோதரன் யோவேல்; அகராயின் மகன் மிபகார்.
39. அம்மோனியனான செலேக்; சார்வியாவின் மகனும் யோவாபின் பரிசையனும் பெரோத்தியனுமான நகராயி
40. எத்தேயனான ஈரா; எத்திரேயனான காரேப்;
41. எத்தேயனான உரியாஸ்; ஒகோலியின் மகன் சாபாத்;
42. ரூபன் குலத்தவனும் ரூபனியரின் தலைவனுமான சீசாவின் மகன் அதீனாவும், இவனோடு இருந்த முப்பதுபேரும்;
43. மாக்காவின் மகன் கானான்; மத்தானியனான யோசப்பாத்;
44. அஸ்தரோத்தியனான ஒசீயா; அரோரியனான ஒத்தாமின்
45. புதல்வர் சம்மா, எகியேல் என்பவர்கள்; சம்ரியின் மகன் எகியேல், அவனுடைய சகோதரனும்
46. தொசாயியனுமான யோகர்; மகூமியனான எலியேல்; எல்னயேமின் புதல்வர் யெரிபாயி, யோசாயியா ஆகியோர்; மோவாபியனான எத்மா,
47. (46b) எலியேல், ஒபேத், மசோபியனான யசியேல் ஆகியோராம்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 29
1 நாளாகமம் 11:17
1 எனவே, எபிரோனில் தங்கியிருந்த தாவீதிடம் இஸ்ராயேலர் எல்லாரும் கூடிவந்து, "இதோ நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாய் இருக்கிறோம். 2 கடந்த காலத்தில் சவுல் அரசராய் இருந்த போதும் எல்லாக் காரியங்களிலும் இஸ்ராயேலை முன்னின்று நடத்தி வந்தவர் நீரே. ஏனெனில், உம் கடவுளாகிய ஆண்டவர் உம்மை நோக்கியே, 'என் மக்களாகிய இஸ்ராயேலை நீ மேய்ப்பாய்; இஸ்ராயேலுக்கு நீ தலைவனாய் இருப்பாய்' என்று சொல்லியிருக்கிறார்" என்றனர். 3 அவ்வாறே இஸ்ராயேலின் மூப்பர் எல்லாரும் எபிரோனில் தங்கியிருந்த தாவீது அரசரிடம் வந்த போது, அவர் ஆண்டவர் திருமுன் அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆண்டவர் சாமுவேலின் மூலம் உரைத்ததன்படி இஸ்ராயேலின் அரசராக அவர் அபிஷுகம் பெற்றார். 4 பின்பு தாவீதும் இஸ்ராயேலர் அனைவரும் யெருசலேம் நகருக்கு சென்றனர். அது அப்பொழுது எபூஸ் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் எபுசேயர் அங்கே வாழ்ந்து வந்தனர். 5 அந்த எபூஸ் நகரின் குடிகள் தாவீதை நோக்கி, "நீர் இதனுள் நுழையமாட்டீர்" என்றனர். எனினும் தாவீது சீயோனின் கோட்டையைப் பிடித்தார். அது தாவீதின் நகராயிற்று. 6 தாவீது, "எபுசேயரை முதலில் முறியடிப்பவன் எவனோ அவன் தலைவனும் தளபதியுமாய் இருப்பான்" என்று சொல்லியிருந்தார். எனவே சார்வியாவின் மகன் யோவாப் முதலில் சென்று போரிட்டுப் படைத்தலைவனானான். 7 தாவீது அக்கோட்டையில் வாழ்ந்ததன் காரணமாக அது தாவீதின் நகர் என்று அழைக்கப்பட்டது. 8 அவர் மெல்லோ தொடங்கி நகர மதிலை எழுப்பினார். யோவாப் நகரின் ஏனைய இடங்களைப் பழுது பார்த்தார். 9 தாவீதின் பேரும் புகழும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. சேனைகளின் ஆண்டவர் அவரோடு இருந்தார். 10 ஆண்டவர் இஸ்ராயேலுக்கு மொழிந்திருந்த வாக்கின்படி இஸ்ராயேல் மக்கள் அனைவர்க்கும் அசராகும்படி தாவீதுக்கு ஆற்றல் மிக்க வீரர்களின் தலைவர்கள் உதவியாயிருந்தனர். 11 தாவீதின் வீரர்களின் விபரம் வருமாறு: அக்கமோனியின் மகன் எஸ்பாம்- இவன் முப்பது பேருக்குத் தலைவன்; தன் ஈட்டியால் முந்நூறு பேரை ஒரே நேரத்தில் குத்திக் கொன்றவன். 12 அவனை அடுத்து அவன் தந்தையின் சகோதரனுக்குப் பிறந்த அகோகித்தனாகிய எலியேசார். ஆற்றல் மிக்கவர் மூவருள் அவனும் ஒருவன். 13 பிலிஸ்தியர் படை திரட்டி, பேஸ்தோமீம் என்ற இடத்தில் போரிட வந்த போது எலியெசார் தாவீதுடன் இருந்தான். அங்குள்ள ஒரு வயல் வாற்கோதுமையால் நிறைந்திருக்க, மக்களோ பிலிஸ்தியருக்குப் பயந்து தப்பியோடிவிட்டனர். 14 அப்பொழுது இவர்கள் அவ்வயலின் நடுவே நின்றுகொண்டு, அதைக் காத்து, பிலிஸ்தியரை முறியடித்தனர். இங்ஙனம் ஆண்டவர் தம் மக்களுக்குப் பெரும் வெற்றியைத் தந்தருளினார். 15 மீண்டும் பிலிஸ்தியர் ரப்பாயிம் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கியிருந்த போது முப்பது தலைவர்களில் மூன்றுபேர் தாவீது இருந்த அதொல்லாம் என்ற கற்குகைக்குச் சென்றனர். 16 தாவீது அரணான இடத்தில் இருந்தார். பிலிஸ்தியரின் பாளையம் பெத்லெகேமில் இருந்தது. 17 ஒருநாள் தாவீது, "பெத்லெகேம் ஊர் வாயிலில் உள்ள கிணற்று நீரை யாராவது கொண்டு வந்து தரவேண்டும் என்று ஆசிக்கின்றேன்" என்று ஆவலுடன் கூறினார். 18 அப்பொழுது அந்த மூவரும் பிலிஸ்தியரின் பாளையத்தின் நடுவே துணிந்து சென்று பெத்லெகேம் ஊர் வாயிலில் இருந்த கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் குடிக்கக் கொண்டு வந்தனர். அவரோ குடிக்க மனமின்றி அதை ஆண்டவருக்கென்று கீழே கொட்டி விட்டார். 19 நான் இதைச் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! தங்கள் உயிரைத் துரும்பாக எண்ணிய இம்மனிதரின் இரத்தத்தை நான் குடியேன்; இவர்கள் தங்கள் உயிருக்கு வரவிருந்த ஆபத்தையும் பாராது, இத்தண்ணீரைக் கொண்டு வந்தனரே!" என்று கூறி அதைக் குடிக்க மறுத்து விட்டார். ஆற்றல் மிக்கவராயிருந்த அம் மூவரும் இத்தகு காரியங்களைச் செய்தனர். 20 யோவாபின் சகோதரன் அபிசாயி முப்பது பேருக்குத் தலைவனாய் இருந்தான். இவனே தம் ஈட்டியால் முந்நூறு பேரைக் கொன்றவன். எனவே அம் முப்பது பேருள் இவன் அதிகப் பேரும் புகழும் பெற்று விளங்கினான். 21 அவர்களுள் தலைசிறந்தவனாகவும் திகழ்ந்தான். அதன் பொருட்டே அவன் அவர்களுக்குத் தலைவனானான். ஆயினும் அம் மூவருக்கு அவன் இணையாகான். 22 மிகத் திடமுள்ளவனான யோயியாதாவின் மகனும் கப்சேல் ஊரானுமாகிய பனாயாஸ் தீரச் செயல்கள் பல புரிந்தவன். மோவாபிய வீரர் இருவரைக் கொன்றவன். உறைபனி பெய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் ஒரு கிடங்கினுள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றவனும் அவனே. 23 மேலும் அவன் ஐந்து முழ உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றான். அந்த எகிப்தியன் நெசவாளரின் படைமரத்தைப் போன்ற ஈட்டியைக் கையில் ஏந்தி வந்தான். எனினும் இவன் ஒரு தடியைக் கையிலேந்தி அவன் மீது பாய்ந்து, அவன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, தனது சொந்த ஈட்டியால் அவனைக் குத்திக் கொன்றான். 24 இவ்விதத் தீரச் செயல்களை எல்லாம் யோயியாதாவின் மகன் பனாயாஸ் செய்ததால் முப்பது பேருள் அவன் பெரும் புகழ் பெற்றான். 25 அம் முப்பது பேருக்குள் அவன் முதல்வனாயிருந்தாலும் முந்தின மூவருக்கு அவன் இணையானவன் அல்லன். அவனையே தாவீது தம் மெய்க்காவலர்க்குத் தலைவனாக நியமித்தார். 26 மற்றப் படைவீரர்கள் வருமாறு: யோவாபின் சகோதரன் அசாயேல்; பெத்லெகேம் ஊரானாகிய அவன் தந்தையின் சகோதரனின் மகன் எல்கானான்; 27 அரோரியனான சம்மோத்; பலோனியனான எல்லேஸ்; 28 தேக்குவியனான ஆக்கேசின் மகன் ஈரா; அநத்தோத்தினயனான அபியெசேர்; உசாத்தியனான சொபோக்கை; 29 அகோகியனான இலாய்; 30 நெத்தோப்பாத்தியனான மகராயி; நெத்தோப்பாத்தியனாகிய பானாவின் மகன் எலேத்; 31 பென்யமீன் குலத்தவரில், கபாத்தியனான ரிபாயின் மகன் ஏத்தாயி; பரத்தோனியனான பனாயியா; 32 காஸ் ஆற்றுப்பகுதியைச் சேர்ந்த ஊராயி; அர்பாத்தியனான அபியேல்; பவுறமியனான அஸ்மோத்; சலபோனியனான எலியபா; 33 கெரோனியனான ஆசேமின் புதல்வரில் அராரியனான சகேயின் மகன் யோனத்தான்; 34 அராரியனான சக்காரின் மகன் அகியாம்; 35 ஊரின் மகன் எலீப்பால்; 36 மெக்ராத்தியனான ஏப்பேர்; பெலோனியனான ஆகியா; 37 கர்மேலியனான எர்சோ; அஸ்பையின் மகன் நாராயி; 38 நாத்தானின் சகோதரன் யோவேல்; அகராயின் மகன் மிபகார். 39 அம்மோனியனான செலேக்; சார்வியாவின் மகனும் யோவாபின் பரிசையனும் பெரோத்தியனுமான நகராயி 40 எத்தேயனான ஈரா; எத்திரேயனான காரேப்; 41 எத்தேயனான உரியாஸ்; ஒகோலியின் மகன் சாபாத்; 42 ரூபன் குலத்தவனும் ரூபனியரின் தலைவனுமான சீசாவின் மகன் அதீனாவும், இவனோடு இருந்த முப்பதுபேரும்; 43 மாக்காவின் மகன் கானான்; மத்தானியனான யோசப்பாத்; 44 அஸ்தரோத்தியனான ஒசீயா; அரோரியனான ஒத்தாமின் 45 புதல்வர் சம்மா, எகியேல் என்பவர்கள்; சம்ரியின் மகன் எகியேல், அவனுடைய சகோதரனும் 46 தொசாயியனுமான யோகர்; மகூமியனான எலியேல்; எல்னயேமின் புதல்வர் யெரிபாயி, யோசாயியா ஆகியோர்; மோவாபியனான எத்மா, 47 (46b) எலியேல், ஒபேத், மசோபியனான யசியேல் ஆகியோராம்.
மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 29
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References