தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 நாளாகமம்
1. பிலிஸ்தியர் இஸ்ராயேலுக்கு எதிராய்ப் போர் செய்து கொண்டிருந்தனர். இஸ்ராயேல் மக்கள் பிலிஸ்தியருக்கு முன்பாகப் புறமுதுகு காட்டி ஓடினர்; கெல்போயே மலையில் காயம் பட்டு வீழ்ந்தனர்.
2. பிலிஸ்தியர் சவுலையும் அவருடைய புதல்வர்களையும் துரத்திச் சென்று நெருங்கி வந்து சவுலின் புதல்வர்களான யோனத்தாசு, அவினதாப், மெல்கிசுவா என்பவர்களை வெட்டி வீழ்த்தினர்.
3. சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில் வீரர் நெருங்கி வந்து அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர்.
4. அப்போது சவுல் தம் பரிசையனை நோக்கி, "உனது வாளை உருவி என்னைக் கொன்றுவிடு; இல்லாவிட்டால் விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் வந்து என்னை ஏளனம் செய்வார்கள்" என்றார். அவருடைய பரிசையனோ அச்சமுற்று, "அவ்வாறு செய்யமாட்டேன்" என்றான். அப்பொழுது சவுல் தம் வாளை தரையில் நாட்டிவைத்து அதன் மேல் வீழ்ந்தார்.
5. சவுல் இறந்ததை அவருடைய பரிசையன் கண்டு தானும் தனது வாளின் மேல் விழுந்து மடிந்தான்.
6. இவ்வாறு சவுலும் அவருடைய மூன்று புதல்வரும் மடிந்தனர். அவரோடு அவரது குடும்பம் முழுவதும் அழிந்து போயிற்று.
7. பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் அதைக்கண்டு தப்பியோடினர். சவுலும் அவருடைய புதல்வர்களும் மாண்டபின்பு, தங்கள் நகர்களை விட்டு இங்குமங்கும் சிதறிப் போயினர். எனவே பிலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர்.
8. பிலிஸ்தியர் மடிந்தவர்களின் ஆடைகளை உரிந்து கொள்ள வந்த போது, சவுலும் அவருடைய மகனும் கெல்போயே மலையில் கிடப்பதைக் கண்டனர்.
9. அவருடைய ஆடைகளை உரிந்து கொண்டு, ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். பின் அவரது தலையை வெட்டி, தமது கோவில் சிலைகளுக்குப் படைக்கவும் மக்களுக்குக் காட்டவும், அதைத் தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
10. அவருடைய ஆயுதங்களை தங்கள் தெய்வத்தின் கோவில் காணிக்கையாக்கினர். அவரது தலையைக் தாகோன் கோவிலில் கட்டிக் தொங்கவிட்டனர்.
11. பிலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லால் காலாத் நாட்டு யாபேஸ் நகர மக்கள் கேள்வியுற்றனர்.
12. அப்போது அவர்களுள் ஆற்றல்மிக்கவர் அனைவரும் புறப்பட்டு வந்து சவுலின் பிணத்தையும், அவர் புதல்வரின் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்களின் எலும்புகளை அடக்கம் செய்து ஏழு நாள் நோன்பிருந்தனர்.
13. இவ்வாறு சவுல் ஆண்டவரது கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்கு பிரமாணிக்கமற்ற விதமாய் நடந்துகொண்டார். மேலும் அவர் மாய வித்தைக்காரரை நம்பி அவர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இதன் பொருட்டே அவர் மாண்டார்.
14. ஆண்டவரில் நம்பிக்கை வைக்காததால் ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவரது அரசை இசாயி மகன் தாவீதுக்குக் கொடுத்தார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 29
1 நாளாகமம் 10:65
1 பிலிஸ்தியர் இஸ்ராயேலுக்கு எதிராய்ப் போர் செய்து கொண்டிருந்தனர். இஸ்ராயேல் மக்கள் பிலிஸ்தியருக்கு முன்பாகப் புறமுதுகு காட்டி ஓடினர்; கெல்போயே மலையில் காயம் பட்டு வீழ்ந்தனர். 2 பிலிஸ்தியர் சவுலையும் அவருடைய புதல்வர்களையும் துரத்திச் சென்று நெருங்கி வந்து சவுலின் புதல்வர்களான யோனத்தாசு, அவினதாப், மெல்கிசுவா என்பவர்களை வெட்டி வீழ்த்தினர். 3 சவுலுக்கு எதிராய் அவர்கள் கடும்போர் புரிந்தனர். வில் வீரர் நெருங்கி வந்து அம்புகளால் அவரைக் காயப்படுத்தினர். 4 அப்போது சவுல் தம் பரிசையனை நோக்கி, "உனது வாளை உருவி என்னைக் கொன்றுவிடு; இல்லாவிட்டால் விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் வந்து என்னை ஏளனம் செய்வார்கள்" என்றார். அவருடைய பரிசையனோ அச்சமுற்று, "அவ்வாறு செய்யமாட்டேன்" என்றான். அப்பொழுது சவுல் தம் வாளை தரையில் நாட்டிவைத்து அதன் மேல் வீழ்ந்தார். 5 சவுல் இறந்ததை அவருடைய பரிசையன் கண்டு தானும் தனது வாளின் மேல் விழுந்து மடிந்தான். 6 இவ்வாறு சவுலும் அவருடைய மூன்று புதல்வரும் மடிந்தனர். அவரோடு அவரது குடும்பம் முழுவதும் அழிந்து போயிற்று. 7 பள்ளத்தாக்கிலே குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் அதைக்கண்டு தப்பியோடினர். சவுலும் அவருடைய புதல்வர்களும் மாண்டபின்பு, தங்கள் நகர்களை விட்டு இங்குமங்கும் சிதறிப் போயினர். எனவே பிலிஸ்தியர் வந்து அவற்றில் குடியேறினர். 8 பிலிஸ்தியர் மடிந்தவர்களின் ஆடைகளை உரிந்து கொள்ள வந்த போது, சவுலும் அவருடைய மகனும் கெல்போயே மலையில் கிடப்பதைக் கண்டனர். 9 அவருடைய ஆடைகளை உரிந்து கொண்டு, ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். பின் அவரது தலையை வெட்டி, தமது கோவில் சிலைகளுக்குப் படைக்கவும் மக்களுக்குக் காட்டவும், அதைத் தங்கள் நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். 10 அவருடைய ஆயுதங்களை தங்கள் தெய்வத்தின் கோவில் காணிக்கையாக்கினர். அவரது தலையைக் தாகோன் கோவிலில் கட்டிக் தொங்கவிட்டனர். 11 பிலிஸ்தியர் சவுலுக்குச் செய்ததையெல்லால் காலாத் நாட்டு யாபேஸ் நகர மக்கள் கேள்வியுற்றனர். 12 அப்போது அவர்களுள் ஆற்றல்மிக்கவர் அனைவரும் புறப்பட்டு வந்து சவுலின் பிணத்தையும், அவர் புதல்வரின் பிணங்களையும் எடுத்து அவற்றை யாபேசுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கருவாலி மரத்தடியில் அவர்களின் எலும்புகளை அடக்கம் செய்து ஏழு நாள் நோன்பிருந்தனர். 13 இவ்வாறு சவுல் ஆண்டவரது கட்டளையைக் கடைப்பிடிக்காமல் அவருக்கு பிரமாணிக்கமற்ற விதமாய் நடந்துகொண்டார். மேலும் அவர் மாய வித்தைக்காரரை நம்பி அவர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இதன் பொருட்டே அவர் மாண்டார். 14 ஆண்டவரில் நம்பிக்கை வைக்காததால் ஆண்டவர் அவரைச் சாகடித்து, அவரது அரசை இசாயி மகன் தாவீதுக்குக் கொடுத்தார்.
மொத்தம் 29 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 29
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References