1. {#2எருசலேமின் எதிர்காலம் } [QS]கலகம் செய்கிறவர்களும், கறைப்பட்டவர்களும், [QE][QS2]அடக்கி ஒடுக்குகிறவர்களும் வாழும் நகரமே! உனக்கு ஐயோ கேடு. [QE]
2. [QS]அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள், [QE][QS2]அவள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். [QE][QS]அவள் யெகோவாவை நம்புவதில்லை, [QE][QS2]அவள் தனது இறைவனிடத்தில் நெருங்குவதுமில்லை. [QE]
3. [QS]அவளுடைய அதிகாரிகள் [QE][QS2]கெர்ச்சிக்கும் சிங்கங்கள். [QE][QS]அவளுடைய ஆளுநர்கள் மாலை நேரத்து ஓநாய்கள். [QE][QS2]காலைப்பொழுதிற்காக ஒன்றையும் விட்டுவைக்காத ஓநாய்கள். [QE]
4. [QS]அவளுடைய இறைவாக்கினர் அகந்தை உடையவர்கள்; [QE][QS2]அவர்கள் துரோகிகள். [QE][QS]அவளுடைய ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தை கறைப்படுத்தி, [QE][QS2]சட்டத்தை மீறுகிறார்கள். [QE]
5. [QS]இன்னும் அவள் நடுவில் இருக்கும் யெகோவா நீதியுள்ளவர்; [QE][QS2]அவர் அநியாயம் செய்வதில்லை; [QE][QS]அவர் காலைதோறும் தமது நீதியை வெளிப்படுத்துகிறார். [QE][QS2]அவர் ஒவ்வொரு புதிய நாளிலும் தவறாமல் அதை வெளிப்படுத்துகிறார், [QE][QS]ஆயினும் நீதியற்றவர்கள் தங்கள் தீமையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்; [QE][QS2]அவர்கள் வெட்கத்தை அறியமாட்டார்கள். [QE]
6. {#2எருசலேம் மனந்திரும்பாமல் உள்ளது } [QS]நான் நாடுகள் பலவற்றை முழுவதும் தண்டித்துப்போட்டேன்; [QE][QS2]அவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டுவிட்டன. [QE][QS]நான் அவர்களின் வீதிகளில் யாரும் கடந்துபோகாதபடி, [QE][QS2]அவற்றை வெறிச்சோடப் பண்ணினேன். [QE][QS]அவர்களுடைய பட்டணங்கள் அழிக்கப்பட்டன; [QE][QS2]ஒருவரும் மீந்திருக்கவில்லை. நடந்ததைச் சொல்வதற்குக்கூட ஒருவருமே இல்லை. [QE]
7. [QS]எனவே நான் எருசலேம் பட்டணத்தைப் பார்த்து, [QE][QS2]“நிச்சயமாக நீ என்னில் பயமுள்ளவளாயிரு, [QE][QS2]என் சீர்திருத்தலை ஏற்றுக்கொள்!” என்று சொன்னேன். [QE][QS]அப்போது அவளுடைய குடியிருப்பு அகற்றப்படுவதில்லை. [QE][QS2]என் தண்டனைகள் எல்லாம் அவள்மேல் வருவதில்லை என நான் எண்ணினேன். [QE][QS]ஆனால் அவர்களோ தாங்கள் செய்த எல்லாத் தீமையான செயல்கள்மீதும், [QE][QS2]இன்னும் வாஞ்சையாயிருந்தார்கள். [QE]
8. [QS]ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும் [QE][QS2]நீ எனக்காகக் காத்திரு” என்று யெகோவா அறிவிக்கிறார். [QE][QS]நான் எல்லா நாடுகளையும் [QE][QS2]அரசுகளையும் ஒன்றுகூட்டி, [QE][QS]என் கடுங்கோபத்தை [QE][QS2]அவர்கள்மேல் ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன். [QE][QS]அப்பொழுது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால் [QE][QS2]முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். [QE]
9. {#1இஸ்ரயேலின் சிதறியதாக மறுசீரமைப்பு } [QS]நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன். [QE][QS2]அவர்கள் யாவரும், யெகோவாவின் பெயரை வழிபட்டு, [QE][QS2]தோளுக்குத் தோள்கொடுத்து பணிசெய்வார்கள். [QE]
10. [QS]எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால் இருக்கிற என்னை ஆராதிக்கிறவர்களான, [QE][QS2]சிதறுண்ட என் மக்கள், [QE][QS2]எனக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். [QE]
11. [QS]அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற [QE][QS2]அனைவரையும் இந்த பட்டணத்திலிருந்து அகற்றிப்போடுவேன். [QE][QS]அதனால் நீங்கள் எனக்குச் செய்த எல்லா அநியாயங்களுக்காகவும் [QE][QS2]நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள். [QE][QS]இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில் நீங்கள் [QE][QS2]அகந்தையுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்கள். [QE]
12. [QS]எனினும் யெகோவாவின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கிற, [QE][QS2]சாந்தகுணமுள்ளோரையும், [QE][QS]தாழ்மையுள்ளோரையும் [QE][QS2]உன் பட்டணத்தின் நடுவில் மீதியாக விட்டுவைப்பேன். [QE]
13. [QS]இஸ்ரயேலில் மீந்திருப்போர் [QE][QS2]அநியாயம் செய்யமாட்டார்கள்; [QE][QS]அவர்கள் பொய் பேசமாட்டார்கள்; [QE][QS2]அவர்களின் வாயில் வஞ்சகம் காணப்படுவதுமில்லை. [QE][QS]அவர்கள் சாப்பிட்டு படுத்திருப்பார்கள். [QE][QS2]ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள். [QE][PBR]
14. [QS]சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே, [QE][QS2]பலமாய்ச் சத்தமிடு; [QE][QS]எருசலேம் மகளே, [QE][QS2]உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூரு. [QE]
15. [QS]யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார், [QE][QS2]அவர் உன் பகைவரைத் துரத்திவிட்டார். [QE][QS]இஸ்ரயேலின் அரசனாகிய யெகோவாவே உன்னுடன் இருக்கிறார்; [QE][QS2]நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்படமாட்டாய். [QE]
16. [QS]அந்த நாளில் [QE][QS2]அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது, [QE][QS]“சீயோனே, பயப்படாதே; [QE][QS2]உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே. [QE]
17. [QS]உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார். [QE][QS2]அவர் உன்னை இரட்சிக்க வல்லவர். [QE][QS]உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார். [QE][QS2]அவர் தம்முடைய அன்பினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார். [QE][QS2]அவர் உன்னைக்குறித்துப் பாடல்களுடன் மகிழ்வார்.” [QE][PBR]
18. [QS]“நியமிக்கப்பட்ட உங்கள் பண்டிகைகளை இழந்ததால் நீங்கள் அடைந்த துக்கத்தை, [QE][QS2]நான் உங்களைவிட்டு நீக்குவேன். [QE][QS2]அவை உங்களுக்குப் பாரமாயும் நிந்தையாயும் இருக்கின்றன. [QE]
19. [QS]அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய அனைவரையும் நான் தண்டிப்பேன். [QE][QS2]முடமானவர்களைத் தப்புவித்துச் [QE][QS]சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன். [QE][QS2]அவர்கள் வெட்கத்திற்குள்ளான [QE][QS]நாடுகளில் எல்லாம் அவர்களுக்குப் புகழ்ச்சியையும், [QE][QS2]மேன்மையையும் கொடுப்பேன். [QE]
20. [QS]அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; [QE][QS2]அக்காலத்தில் நான் உங்களை உங்கள் வீட்டிற்குக் கொண்டுவருவேன். [QE][QS]உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் இழந்த செல்வங்களையும் [QE][QS2]நாடுகடத்தப்பட்டு வந்த மக்களையும் நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். [QE][QS]அப்போது பூமியின் மக்கள் அனைவருக்குள்ளும் உங்களுக்குப் புகழ்ச்சியையும், [QE][QS2]மேன்மையையும் கொடுப்பேன் [QE][QS2]என யெகோவா சொல்கிறார்.” [QE]