1. {எருசலேமின் எதிர்காலம்} [PS] கலகம் செய்கிறவர்களும், கறைப்பட்டவர்களும், [QBR2] அடக்கி ஒடுக்குகிறவர்களும் வாழும் நகரமே! உனக்கு ஐயோ கேடு. [QBR]
2. அவள் ஒருவருக்கும் கீழ்ப்படிய மாட்டாள், [QBR2] அவள் எந்த சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். [QBR] அவள் யெகோவாவை நம்புவதில்லை, [QBR2] அவள் தனது இறைவனிடத்தில் நெருங்குவதுமில்லை. [QBR]
3. அவளுடைய அதிகாரிகள் [QBR2] கெர்ச்சிக்கும் சிங்கங்கள். [QBR] அவளுடைய ஆளுநர்கள் மாலை நேரத்து ஓநாய்கள். [QBR2] காலைப்பொழுதிற்காக ஒன்றையும் விட்டுவைக்காத ஓநாய்கள். [QBR]
4. அவளுடைய இறைவாக்கினர் அகந்தை உடையவர்கள்; [QBR2] அவர்கள் துரோகிகள். [QBR] அவளுடைய ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தை கறைப்படுத்தி, [QBR2] சட்டத்தை மீறுகிறார்கள். [QBR]
5. இன்னும் அவள் நடுவில் இருக்கும் யெகோவா நீதியுள்ளவர்; [QBR2] அவர் அநியாயம் செய்வதில்லை; [QBR] அவர் காலைதோறும் தமது நீதியை வெளிப்படுத்துகிறார். [QBR2] அவர் ஒவ்வொரு புதிய நாளிலும் தவறாமல் அதை வெளிப்படுத்துகிறார், [QBR] ஆயினும் நீதியற்றவர்கள் தங்கள் தீமையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்; [QBR2] அவர்கள் வெட்கத்தை அறியமாட்டார்கள்.
6. {எருசலேம் மனந்திரும்பாமல் உள்ளது} [PS] நான் நாடுகள் பலவற்றை முழுவதும் தண்டித்துப்போட்டேன்; [QBR2] அவர்களின் கோட்டைகள் அழிக்கப்பட்டுவிட்டன. [QBR] நான் அவர்களின் வீதிகளில் யாரும் கடந்துபோகாதபடி, [QBR2] அவற்றை வெறிச்சோடப் பண்ணினேன். [QBR] அவர்களுடைய பட்டணங்கள் அழிக்கப்பட்டன; [QBR2] ஒருவரும் மீந்திருக்கவில்லை. நடந்ததைச் சொல்வதற்குக்கூட ஒருவருமே இல்லை. [QBR]
7. எனவே நான் எருசலேம் பட்டணத்தைப் பார்த்து, [QBR2] “நிச்சயமாக நீ என்னில் பயமுள்ளவளாயிரு, [QBR2] என் சீர்திருத்தலை ஏற்றுக்கொள்!” என்று சொன்னேன். [QBR] அப்போது அவளுடைய குடியிருப்பு அகற்றப்படுவதில்லை. [QBR2] என் தண்டனைகள் எல்லாம் அவள்மேல் வருவதில்லை என நான் எண்ணினேன். [QBR] ஆனால் அவர்களோ தாங்கள் செய்த எல்லாத் தீமையான செயல்கள்மீதும், [QBR2] இன்னும் வாஞ்சையாயிருந்தார்கள். [QBR]
8. ஆகவே, “நான் எழுந்து குற்றஞ்சுமத்தும் நாள் வருமளவும் [QBR2] நீ எனக்காகக் காத்திரு” என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR] நான் எல்லா நாடுகளையும் [QBR2] அரசுகளையும் ஒன்றுகூட்டி, [QBR] என் கடுங்கோபத்தை [QBR2] அவர்கள்மேல் ஊற்றுவதற்குத் தீர்மானித்துள்ளேன். [QBR] அப்பொழுது என் வைராக்கியமான கோபத்தின் நெருப்பினால் [QBR2] முழு உலகமும் சுட்டெரிக்கப்படும்.
9. {இஸ்ரயேலின் சிதறியதாக மறுசீரமைப்பு} [PS] நான் அவ்வேளையில் மக்கள் கூட்டங்களின் உதடுகளைத் தூய்மைப்படுத்துவேன். [QBR2] அவர்கள் யாவரும், யெகோவாவின் பெயரை வழிபட்டு, [QBR2] தோளுக்குத் தோள்கொடுத்து பணிசெய்வார்கள். [QBR]
10. எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால் இருக்கிற என்னை ஆராதிக்கிறவர்களான, [QBR2] சிதறுண்ட என் மக்கள், [QBR2] எனக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். [QBR]
11. அந்த நாளில் தங்கள் பெருமையில் களிகூருகிற [QBR2] அனைவரையும் இந்த பட்டணத்திலிருந்து அகற்றிப்போடுவேன். [QBR] அதனால் நீங்கள் எனக்குச் செய்த எல்லா அநியாயங்களுக்காகவும் [QBR2] நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள். [QBR] இனி ஒருபோதும் என் பரிசுத்த மலையில் நீங்கள் [QBR2] அகந்தையுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்கள். [QBR]
12. எனினும் யெகோவாவின் பெயரில் நம்பிக்கை கொண்டிருக்கிற, [QBR2] சாந்தகுணமுள்ளோரையும், [QBR] தாழ்மையுள்ளோரையும் [QBR2] உன் பட்டணத்தின் நடுவில் மீதியாக விட்டுவைப்பேன். [QBR]
13. இஸ்ரயேலில் மீந்திருப்போர் [QBR2] அநியாயம் செய்யமாட்டார்கள்; [QBR] அவர்கள் பொய் பேசமாட்டார்கள்; [QBR2] அவர்களின் வாயில் வஞ்சகம் காணப்படுவதுமில்லை. [QBR] அவர்கள் சாப்பிட்டு படுத்திருப்பார்கள். [QBR2] ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள்.
14. சீயோன் மகளே, பாடு; இஸ்ரயேலே, [QBR2] பலமாய்ச் சத்தமிடு; [QBR] எருசலேம் மகளே, [QBR2] உன் முழு உள்ளத்தோடும் மகிழ்ந்து களிகூரு. [QBR]
15. யெகோவா உன் தண்டனையை நீக்கிப்போட்டார், [QBR2] அவர் உன் பகைவரைத் துரத்திவிட்டார். [QBR] இஸ்ரயேலின் அரசனாகிய யெகோவாவே உன்னுடன் இருக்கிறார்; [QBR2] நீ இனி ஒருபோதும் எவ்வித தீங்கைக் குறித்தும் பயப்படமாட்டாய். [QBR]
16. அந்த நாளில் [QBR2] அவர்கள் எருசலேமைப் பார்த்துச் சொல்வதாவது, [QBR] “சீயோனே, பயப்படாதே; [QBR2] உன் கைகளைச் சோர்ந்துபோக விடாதே. [QBR]
17. உன் இறைவனாகிய யெகோவா உன்னுடன் இருக்கிறார். [QBR2] அவர் உன்னை இரட்சிக்க வல்லவர். [QBR] உன்னில் அவர் மகிழ்ந்து களிகூருவார். [QBR2] அவர் தம்முடைய அன்பினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார். [QBR2] அவர் உன்னைக்குறித்துப் பாடல்களுடன் மகிழ்வார்.”
18. “நியமிக்கப்பட்ட உங்கள் பண்டிகைகளை இழந்ததால் நீங்கள் அடைந்த துக்கத்தை, [QBR2] நான் உங்களைவிட்டு நீக்குவேன். [QBR2] அவை உங்களுக்குப் பாரமாயும் நிந்தையாயும் இருக்கின்றன. [QBR]
19. அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய அனைவரையும் நான் தண்டிப்பேன். [QBR2] முடமானவர்களைத் தப்புவித்துச் [QBR] சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன். [QBR2] அவர்கள் வெட்கத்திற்குள்ளான [QBR] நாடுகளில் எல்லாம் அவர்களுக்குப் புகழ்ச்சியையும், [QBR2] மேன்மையையும் கொடுப்பேன். [QBR]
20. அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; [QBR2] அக்காலத்தில் நான் உங்களை உங்கள் வீட்டிற்குக் கொண்டுவருவேன். [QBR] உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் இழந்த செல்வங்களையும் [QBR2] நாடுகடத்தப்பட்டு வந்த மக்களையும் நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். [QBR] அப்போது பூமியின் மக்கள் அனைவருக்குள்ளும் உங்களுக்குப் புகழ்ச்சியையும், [QBR2] மேன்மையையும் கொடுப்பேன் [QBR2] என யெகோவா சொல்கிறார்.” [PE]