1. [PS]யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன். [PE][PBR]
2. {#1வரப்போகும் அழிவைப்பற்றிய எச்சரிக்கை } [QS]“பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும், [QE][QS2]நான் வாரிக்கொண்டு போவேன்” [QE][QS2]என யெகோவா அறிவிக்கிறார். [QE]
3. [QS]“நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்; [QE][QS2]நான் ஆகாயத்துப் பறவைகளையும், [QE][QS2]கடலின் மீன்களையும் [QE][QS2]வாரிக்கொண்டு போவேன்.” [QE][PBR] [QS]“நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது, [QE][QS2]கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
4. [QS]நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும் [QE][QS2]அனைவருக்கு எதிராகவும் என் கையை நீட்டுவேன்; [QE][QS]நான் இந்த இடத்திலிருந்து பாகால் வணக்கத்தின் [QE][QS2]மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன். [QE][QS]விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும் [QE][QS2]அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன். [QE]
5. [QS]நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக, [QE][QS2]வீட்டின் மேல்மாடங்களில் விழுந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன். [QE][QS]யெகோவாவை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு, [QE][QS2]மோளேக்கு தெய்வத்தின் பெயரிலும் ஆணையிடுகிறவர்களை அகற்றுவேன். [QE]
6. [QS]யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும், [QE][QS2]யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும், [QE][QS2]அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன். [QE][PBR]
7. [QS]ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள். [QE][QS2]ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது. [QE][QS]யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார். [QE][QS2]அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். [QE][PBR]
8. [QS]யெகோவாவினுடைய பலியின் நாளில், [QE][QS2]நான் பிரபுக்களையும், [QE][QS2]இளவரசர்களையும், [QE][QS]பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப் [QE][QS2]பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன். [QE]
9. [QS]அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி, [QE][QS2]அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன். [QE][QS]அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை [QE][QS2]வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள். [QE][PBR]
10. [QS]யெகோவா அறிவிக்கிறதாவது: [QE][QS2]அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள [QE][QS]மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும். [QE][QS2]அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும், [QE][QS2]குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும். [QE]
11. [QS]எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே; [QE][QS2]அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள். [QE][QS2]வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள். [QE]
12. [QS]அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன். [QE][QS2]யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி, [QE][QS2]ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன். [QE][QS]அவர்கள் திராட்சை மதுவின் [QE][QS2]மண்டியைப்போல் இருக்கிறார்கள். [QE]
13. [QS]அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும், [QE][QS2]வீடுகள் உடைத்து அழிக்கப்படும். [QE][QS]அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள், [QE][QS2]அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள், [QE][QS]திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள். [QE][QS2]அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள். [QE][PBR]
14. [QS]யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது; [QE][QS2]அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது. [QE][QS]கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும். [QE][QS2]இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள். [QE]
15. [QS]அந்த நாள் கடுங்கோபத்தின் நாள், [QE][QS2]துன்பமும் வேதனையும் நிறைந்த நாள், [QE][QS3]தொல்லையும் அழிவுமான நாள், [QE][QS2]அது இருளும் அந்தகாரமுமான நாள். [QE][QS3]மப்பும் மந்தாரமுமான நாள். [QE]
[QS2]16. அரணான நகரங்களுக்கு எதிராகவும், [QE][QS]மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும் [QE][QS2]எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள். [QE][PBR]
17. [QS]மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால், [QE][QS2]நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்; [QE][QS2]அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள். [QE][QS]அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும். [QE][QS2]அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும். [QE]
18. [QS]யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே, [QE][QS2]அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ [QE][QS2]அவர்களைக் காப்பாற்றமாட்டாது. [QE][PBR] [QS]அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால், [QE][QS2]முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். [QE][QS]ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும் [QE][QS2]திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார். [QE]