1. [QS]இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்; [QE][QS2]என் உயிர்க் காதலரை நான் தேடினேன். [QE][QS2]நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை. [QE]
2. [QS]நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும் [QE][QS2]பொது இடங்களிலும் போய்ப்பார்ப்பேன். [QE][QS]அங்கே நான் என் உயிர்க் காதலரைத் தேடுவேன். [QE][QS2]அப்படியே நான் அவரைத் தேடினேன், ஆனாலும் அவரைக் காணவில்லை. [QE]
3. [QS]காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில் [QE][QS2]என்னைக் கண்டார்கள். [QE][QS2]“என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன். [QE]
4. [QS]அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன். [QE][QS2]நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்; [QE][QS]என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும் [QE][QS2]கூட்டிக்கொண்டு போகும்வரை [QE][QS2]நான் அவரைப் போகவிடவேயில்லை. [QE]
5. [QS]எருசலேமின் மங்கையரே, [QE][QS2]கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! [QE][QS]காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், [QE][QS2]அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம். [QE][PBR]
6. [QS]பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போல [QE][QS2]வருகின்ற இவர் யார்? [QE][QS]வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, [QE][QS2]வர்த்தகர்களின் வாசனைத் திரவியங்கள் யாவும் மணங்கமழ வருகின்ற இவர் யார்? [QE]
7. [QS]இதோ, சாலொமோனின் படுக்கை! [QE][QS2]இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில் [QE][QS2]அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். [QE]
8. [QS]அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள், [QE][QS2]அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள், [QE][QS]இரவின் பயங்கரத்தை எதிர்க்க [QE][QS2]தம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள். [QE]
9. [QS]சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால் [QE][QS2]ஒரு பல்லக்கை செய்தார். [QE]
10. [QS]அதின் தூண்களை வெள்ளியினாலும், [QE][QS2]அதின் சாய்மனையைத் தங்கத்தினாலும், [QE][QS]உட்காருமிடத்தை இரத்தாம்பர நிற மெத்தையினாலும் செய்ய வைத்தார்; [QE][QS2]அதின் உட்புறத்தை எருசலேமின் மங்கையர் [QE][QS]தங்கள் அன்பால் அலங்கரித்திருந்தார்கள்.
11. சீயோனின் மகள்களே, [QE][QS2]வெளியே வாருங்கள். [QE][QS]சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள், [QE][QS2]அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளான [QE][QS]அவருடைய திருமண நாளிலேயே [QE][QS2]அந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள். [QE]