1. இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்; [QBR2] என் உயிர்க் காதலரை நான் தேடினேன். [QBR2] நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை. [QBR]
2. நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும் [QBR2] பொது இடங்களிலும் போய்ப்பார்ப்பேன். [QBR] அங்கே நான் என் உயிர்க் காதலரைத் தேடுவேன். [QBR2] அப்படியே நான் அவரைத் தேடினேன், ஆனாலும் அவரைக் காணவில்லை. [QBR]
3. காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில் [QBR2] என்னைக் கண்டார்கள். [QBR2] “என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன். [QBR]
4. அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன். [QBR2] நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்; [QBR] என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும் [QBR2] கூட்டிக்கொண்டு போகும்வரை [QBR2] நான் அவரைப் போகவிடவேயில்லை. [QBR]
5. எருசலேமின் மங்கையரே, [QBR2] கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை! [QBR] காதலைத் தட்டி எழுப்பவேண்டாம், [QBR2] அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.
6. பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போல [QBR2] வருகின்ற இவர் யார்? [QBR] வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய, [QBR2] வர்த்தகர்களின் வாசனைத் திரவியங்கள் யாவும் மணங்கமழ வருகின்ற இவர் யார்? [QBR]
7. இதோ, சாலொமோனின் படுக்கை! [QBR2] இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில் [QBR2] அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். [QBR]
8. அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள், [QBR2] அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள், [QBR] இரவின் பயங்கரத்தை எதிர்க்க [QBR2] தம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள். [QBR]
9. சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால் [QBR2] ஒரு பல்லக்கை செய்தார். [QBR]
10. அதின் தூண்களை வெள்ளியினாலும், [QBR2] அதின் சாய்மனையைத் தங்கத்தினாலும், [QBR] உட்காருமிடத்தை இரத்தாம்பர நிற மெத்தையினாலும் செய்ய வைத்தார்; [QBR2] அதின் உட்புறத்தை எருசலேமின் மங்கையர் [QBR] தங்கள் அன்பால் அலங்கரித்திருந்தார்கள்.
11. சீயோனின் மகள்களே, [QBR2] வெளியே வாருங்கள். [QBR] சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள், [QBR2] அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளான [QBR] அவருடைய திருமண நாளிலேயே [QBR2] அந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள். [PE]