1. [QS]யெகோவா ஆட்சி செய்கிறார், [QE][QS2]நாடுகள் நடுங்கட்டும்; [QE][QS]அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்; [QE][QS2]பூமி அதிரட்டும். [QE]
2. [QS]சீயோனிலே யெகோவா பெரியவர்; [QE][QS2]அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார். [QE]
3. [QS]பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்; [QE][QS2]அவர் பரிசுத்தமானவர். [QE][PBR]
4. [QS]அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்; [QE][QS2]நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்; [QE][QS]நீர் யாக்கோபில் [QE][QS2]நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர். [QE]
5. [QS]நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி, [QE][QS2]அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்; [QE][QS2]அவர் பரிசுத்தமானவர். [QE][PBR]
6. [QS]அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்; [QE][QS2]அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்; [QE][QS]அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; [QE][QS2]அவர் அவர்களுக்குப் பதிலளித்தார். [QE]
7. [QS]அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்; [QE][QS2]அவர் அவர்களுக்குக் கொடுத்த [QE][QS2]அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள். [QE][PBR]
8. [QS]எங்கள் இறைவனாகிய யெகோவாவே, [QE][QS2]நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்; [QE][QS]இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும், [QE][QS2]நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர். [QE]
9. [QS]நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி [QE][QS2]அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்; [QE][QS2]ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர். [QE]