1. [QS]யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QE][QS2]ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்; [QE][QS]அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே [QE][QS2]இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது. [QE]
2. [QS]யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி, [QE][QS2]தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார். [QE]
3. [QS]அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த [QE][QS2]தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்; [QE][QS]பூமியின் எல்லைகள் எல்லாம் [QE][QS2]நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன. [QE][PBR]
4. [QS]பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் [QE][QS2]யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்; [QE][QS2]முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள். [QE]
5. [QS]யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்; [QE][QS2]யாழோடும், கீதசத்தத்தோடும், [QE]
6. [QS]எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும் [QE][QS2]யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள். [QE][PBR]
7. [QS]கடலும் அதிலுள்ள அனைத்தும், [QE][QS2]உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக. [QE]
8. [QS]ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்; [QE][QS2]மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும். [QE]
9. [QS]அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்; [QE][QS2]ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; [QE][QS]அவர் உலகத்தை நீதியுடனும், [QE][QS2]நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார். [QE]