1. [QS]யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; [QE][QS2]தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும். [QE]
2. [QS]மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; [QE][QS2]நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார். [QE]
3. [QS]நெருப்பு அவருக்கு முன்சென்று, [QE][QS2]சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது. [QE]
4. [QS]அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; [QE][QS2]பூமி அதைக்கண்டு நடுங்குகிறது. [QE]
5. [QS]யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே [QE][QS2]மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன. [QE]
6. [QS]வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; [QE][QS2]எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். [QE][PBR]
7. [QS]உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், [QE][QS2]விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; [QE][QS2]தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள். [QE][PBR]
8. [QS]யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் [QE][QS2]சீயோன் கேட்டுக் களிகூருகிறது; [QE][QS2]யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன. [QE]
9. [QS]யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; [QE][QS2]எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர். [QE]
10. [QS]யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; [QE][QS2]ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, [QE][QS2]கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். [QE]
11. [QS]நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, [QE][QS2]இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது. [QE]
12. [QS]நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், [QE][QS2]அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள். [QE]