1. யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்; [QBR2] தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும். [QBR]
2. மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன; [QBR2] நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார். [QBR]
3. நெருப்பு அவருக்கு முன்சென்று, [QBR2] சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது. [QBR]
4. அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது; [QBR2] பூமி அதைக்கண்டு நடுங்குகிறது. [QBR]
5. யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே [QBR2] மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன. [QBR]
6. வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது; [QBR2] எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7. உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும், [QBR2] விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்; [QBR2] தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.
8. யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால் [QBR2] சீயோன் கேட்டுக் களிகூருகிறது; [QBR2] யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன. [QBR]
9. யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்; [QBR2] எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர். [QBR]
10. யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்; [QBR2] ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி, [QBR2] கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். [QBR]
11. நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது, [QBR2] இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது. [QBR]
12. நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள், [QBR2] அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள். [PE]