1. யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QBR2] பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். [QBR]
2. யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், [QBR2] நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள். [QBR]
3. நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், [QBR2] மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
4. ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; [QBR2] எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. [QBR]
5. நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; [QBR2] ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். [QBR]
6. மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; [QBR2] வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன.
7. நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் [QBR2] யெகோவாவுக்கு செலுத்துங்கள்; [QBR2] யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். [QBR]
8. யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; [QBR2] காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள். [QBR]
9. அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; [QBR2] பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள். [QBR]
10. “யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; [QBR2] உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; [QBR2] அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
11. வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; [QBR2] கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும். [QBR]
12. வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; [QBR2] அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும். [QBR]
13. யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக [QBR2] அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; [QBR2] ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; [QBR] அவர் உலகத்தை நீதியுடனும் [QBR2] மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார். [PE]