தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QE][QS2]பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். [QE]
2. [QS]யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், [QE][QS2]நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள். [QE]
3. [QS]நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், [QE][QS2]மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். [QE][PBR]
4. [QS]ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; [QE][QS2]எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. [QE]
5. [QS]நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; [QE][QS2]ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். [QE]
6. [QS]மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; [QE][QS2]வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன. [QE][PBR]
7. [QS]நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் [QE][QS2]யெகோவாவுக்கு செலுத்துங்கள்; [QE][QS2]யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். [QE]
8. [QS]யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; [QE][QS2]காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள். [QE]
9. [QS]அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; [QE][QS2]பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள். [QE]
10. [QS]“யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; [QE][QS2]உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; [QE][QS2]அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார். [QE][PBR]
11. [QS]வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; [QE][QS2]கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும். [QE]
12. [QS]வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; [QE][QS2]அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும். [QE]
13. [QS]யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக [QE][QS2]அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; [QE][QS2]ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; [QE][QS]அவர் உலகத்தை நீதியுடனும் [QE][QS2]மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 96 / 150
1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள். 2 யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள். 3 நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள். 4 ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே. 5 நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார். 6 மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன. 7 நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் யெகோவாவுக்கு செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள். 8 யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள். 9 அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள். 10 “யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார். 11 வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும். 12 வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும். 13 யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும் மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 96 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References