1. [QS]வாருங்கள், யெகோவாவை மகிழ்ச்சியோடு பாடுவோம்; [QE][QS2]நம்முடைய இரட்சிப்பின் கன்மலையை சத்தமிட்டுத் துதிப்போம். [QE]
2. [QS]நன்றியுடன் அவர்முன் வருவோம்; [QE][QS2]இசையினாலும் பாட்டினாலும் அவரைப் புகழ்ந்து உயர்த்துவோம். [QE][PBR]
3. [QS]யெகோவாவே மகா இறைவனாய் இருக்கிறார்; [QE][QS2]எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான மகா அரசருமாய் இருக்கிறார். [QE]
4. [QS]பூமியின் ஆழங்கள் அவருடைய கரத்தில் இருக்கின்றன; [QE][QS2]மலை உச்சிகளும் அவருக்கே உரியவை. [QE]
5. [QS]கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; [QE][QS2]வறண்ட நிலத்தையும் அவருடைய கரங்களே உருவாக்கின. [QE][PBR]
6. [QS]வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக [QE][QS2]நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்; [QE][QS2]நாம் முழங்காலிடுவோம். [QE]
7. [QS]அவரே நம் இறைவன்; [QE][QS2]நாம் அவருடைய மேய்ச்சலின் மக்களும் [QE][QS2]அவருடைய பராமரிப்புக்குள்ளான மந்தையுமாய் இருக்கிறோம். [QE][PBR] [QS]இன்று நீங்கள் அவருடைய குரலைக் கேட்பீர்களானால், [QE]
8. [QS]“அன்று மேரிபாவில் விவாதம் செய்தது போலவும், [QE][QS2]பாலைவனத்திலே மாசாவில் சோதனை செய்தது போலவும், [QE][QS2]உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். [QE]
9. [QS]அங்கே உங்கள் முன்னோர்கள் என்னைச் சோதித்தார்கள்; [QE][QS2]நான் செய்தவைகளைக் கண்டிருந்தும் என்னைப் பரீட்சை பார்த்தார்கள். [QE]
10. [QS]நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; [QE][QS2]‘அவர்கள் என்னைவிட்டு விலகிப்போகும் இருதயமுள்ள மக்கள் என்றும், [QE][QS2]என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’ என்றும் நான் சொன்னேன். [QE]
11. [QS]எனவே கோபங்கொண்டு, [QE][QS2]‘அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதில்லை’ என்று, [QE][QS2]ஆணையிட்டு அறிவித்தேன்.” [QE]