1. [QS]அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே, [QE][QS2]அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனே, பிரகாசியும். [QE]
2. [QS]பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்; [QE][QS2]பெருமை உள்ளவர்களுக்குத் தக்கபடி பதிலளியும். [QE]
3. [QS]எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள், [QE][QS2]எவ்வளவு காலத்திற்கு கொடியவர்கள் களிகூர்ந்திருப்பார்கள்? [QE][PBR]
4. [QS]அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்; [QE][QS2]தீமை செய்வோர் யாவரும் பெருமை நிறைந்து பேசுகிறார்கள். [QE]
5. [QS]யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்; [QE][QS2]உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள். [QE]
6. [QS]விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் தந்தையற்றவர்களைக் கொலைசெய்கிறார்கள். [QE]
7. [QS]“யெகோவா இவற்றைக் காண்பதில்லை, [QE][QS2]யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். [QE][PBR]
8. [QS]மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்; [QE][QS2]மூடரே, நீங்கள் எப்பொழுது அறிவு பெறுவீர்கள்? [QE]
9. [QS]காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரோ? [QE][QS2]கண்ணை உருவாக்கியவர் பார்க்கமாட்டாரோ? [QE]
10. [QS]மக்களைத் தண்டிக்கிறவர் உங்களையும் தண்டிக்கமாட்டாரோ? [QE][QS2]மனிதருக்குப் போதிக்கிறவர் அறிவில் குறைந்தவரோ? [QE]
11. [QS]மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்; [QE][QS2]அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார். [QE][PBR]
12. [QS]யெகோவாவே, நீர் தண்டித்து, [QE][QS2]உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர். [QE]
13. [QS]கொடியவர்களுக்கோ குழிவெட்டப்படும் வரை [QE][QS2]கஷ்ட நாட்களிலிருந்து அவர்களுக்கு நீர் விடுதலை வழங்குகிறீர். [QE]
14. [QS]ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்; [QE][QS2]தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார். [QE]
15. [QS]நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்; [QE][QS2]அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள். [QE][PBR]
16. [QS]எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்? [QE][QS2]தீமை செய்வோருக்கு எதிராய் எனக்குத் துணைநிற்பவன் யார்? [QE]
17. [QS]யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால், [QE][QS2]நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன். [QE]
18. [QS]“என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, [QE][QS2]யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது. [QE]
19. [QS]கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில், [QE][QS2]உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது. [QE][PBR]
20. [QS]தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும், [QE][QS2]ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் உமக்கு கூட்டாளிகளாயிருக்க முடியுமோ? [QE]
21. [QS]அந்தக் கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, [QE][QS2]குற்றமற்றவர்களுக்கு மரணத்தீர்ப்பு அளிக்கிறார்கள். [QE]
22. [QS]ஆனால் யெகோவாவோ என் கோட்டையும், [QE][QS2]நான் தஞ்சமடையும் கன்மலையான என் இறைவனுமானார். [QE]
23. [QS]அவர் அவர்களுடைய பாவங்களுக்காகப் பதில்செய்து, [QE][QS2]அவர்கள் கொடுமைகளினிமித்தம் அவர்களை தண்டிப்பார்; [QE][QS2]எங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை தண்டிப்பார். [QE]