1. [QS]யெகோவா ஆட்சி செய்கிறார், அவர் மாட்சிமையை அணிந்திருக்கிறார்; [QE][QS2]யெகோவா மாட்சிமையை அணிந்து பெலத்தைத் தரித்துக்கொண்டிருக்கிறார்; [QE][QS2]உண்மையில், உலகம் நிலைபெற்று உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. [QE]
2. [QS]உமது சிங்காசனம் பூர்வகாலத்திலே ஏற்படுத்தப்பட்டது; [QE][QS2]நீர் நித்தியத்தில் இருந்தே இருக்கிறீர். [QE][PBR]
3. [QS]யெகோவாவே, கடல்கள் எழும்பின; [QE][QS2]கடல்கள் தங்கள் குரலை எழுப்பின; [QE][QS2]கடல்கள் மோதியடிக்கும் தங்கள் அலைகளை எழுப்பின. [QE]
4. [QS]பெருவெள்ளத்தின் முழக்கத்தைப் பார்க்கிலும், [QE][QS2]கடல்களின் அலைகளைப் பார்க்கிலும் [QE][QS2]உன்னதத்தில் இருக்கும் யெகோவா வல்லமையுள்ளவர். [QE][PBR]
5. [QS]யெகோவாவே, உமது நியமங்கள் உறுதியாய் நிற்கின்றன; [QE][QS2]பரிசுத்தம் உமது ஆலயத்தை [QE][QS2]என்றென்றும் அலங்கரிக்கிறது. [QE]