தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, [QE][QS2]உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது. [QE]
2. [QS]காலையிலே உமது அன்பையும் [QE][QS2]இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது. [QE]
3. [QS]பத்து நரம்பு வீணையின் இசையினாலும், [QE][QS2]யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது. [QE][PBR]
4. [QS]யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; [QE][QS2]உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன். [QE]
5. [QS]யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, [QE][QS2]உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை! [QE]
6. [QS]உணர்வற்ற மனிதன் அறியாததும், [QE][QS2]மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே, [QE]
7. [QS]கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், [QE][QS2]தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், [QE][QS2]என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள். [QE][PBR]
8. [QS]ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர். [QE][PBR]
9. [QS]யெகோவாவே, உமது பகைவர், [QE][QS2]நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; [QE][QS2]தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள். [QE]
10. [QS]காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; [QE][QS2]சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன. [QE]
11. [QS]என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; [QE][QS2]என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன். [QE][PBR]
12. [QS]நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், [QE][QS2]அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்; [QE]
13. [QS]அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, [QE][QS2]நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள். [QE]
14. [QS]அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, [QE][QS2]தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள். [QE]
15. [QS]“யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; [QE][QS2]அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 92 / 150
1 யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது. 2 காலையிலே உமது அன்பையும் இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது. 3 பத்து நரம்பு வீணையின் இசையினாலும், யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது. 4 யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்; உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன். 5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை, உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை! 6 உணர்வற்ற மனிதன் அறியாததும், மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே, 7 கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும், தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும், என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள். 8 ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர். 9 யெகோவாவே, உமது பகைவர், நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்; தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள். 10 காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்; சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன. 11 என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்; என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன். 12 நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்; 13 அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு, நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள். 14 அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள். 15 “யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை; அவரிடத்தில் அநீதி இல்லை” என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 92 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References