1. யெகோவாவே, தலைமுறைதோறும் [QBR2] நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர். [QBR]
2. மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் [QBR2] உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், [QBR2] நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
3. நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, [QBR2] “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர். [QBR]
4. உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் [QBR2] கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், [QBR2] இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன. [QBR]
5. ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; [QBR2] அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்: [QBR]
6. அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், [QBR2] மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும்.
7. நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம், [QBR2] உமது கடுங்கோபத்தால் திகிலடைகிறோம். [QBR]
8. நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும், [QBR2] எங்கள் இரகசிய பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். [QBR]
9. எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது; [QBR2] நாங்கள் எங்களுடைய வருடங்களைப் புலம்பலோடே முடிக்கின்றோம். [QBR]
10. எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே; [QBR2] நாங்கள் பெலனுள்ளவர்களாய் இருந்தால், அது எண்பது வருடங்களாகவும் இருக்கலாம், [QBR] ஆனாலும் அவை கஷ்டமும் துன்பமும் நிறைந்தவையாகவே இருக்கின்றன; [QBR2] எங்கள் வாழ்நாட்கள் விரைவாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். [QBR]
11. உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்? [QBR2] உமக்குப் பயப்படத்தக்கதாய் உமது கோபத்தை யார் அறிவார்? [QBR]
12. எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும், [QBR2] அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.
13. யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? [QBR2] உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும். [QBR]
14. காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்; [QBR2] அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி, [QBR2] எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம். [QBR]
15. நீர் எங்களைத் துன்புறுத்திய நாட்களுக்கும், [QBR2] நாங்கள் துன்பங்களைக் கண்ட வருடங்களுக்கும் ஈடாக எங்களை மகிழச் செய்யும். [QBR]
16. உமது செயல்கள் உம்முடைய பணியாளர்களுக்கும், [QBR2] உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் காண்பிக்கப்படுவதாக.
17. எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவு எங்கள்மேல் இருப்பதாக; [QBR2] எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்; [QBR2] ஆம், எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும். [PE]