1. [QS]யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; [QE][QS2]எல்லாத் தலைமுறைகளுக்கும் [QE][QS2]உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன். [QE]
2. [QS]உமது உடன்படிக்கையின் அன்பு [QE][QS2]என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்; [QE][QS2]நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன். [QE]
3. [QS]“நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; [QE][QS2]என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன். [QE]
4. [QS]‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, [QE][QS2]எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ” [QE][QS2]என்று நீர் சொன்னீர். [QE][PBR]
5. [QS]யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; [QE][QS2]அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன. [QE]
6. [QS]மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? [QE][QS2]பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்? [QE]
7. [QS]பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்; [QE][QS2]தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர். [QE]
8. [QS]சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? [QE][QS2]யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது. [QE][PBR]
9. [QS]பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்; [QE][QS2]அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர். [QE]
10. [QS]நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்; [QE][QS2]உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர். [QE]
11. [QS]வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; [QE][QS2]உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர். [QE]
12. [QS]வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; [QE][QS2]தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன. [QE]
13. [QS]உமது புயம் வலிமைமிக்கது; [QE][QS2]உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது. [QE][PBR]
14. [QS]நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; [QE][QS2]அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன. [QE]
15. [QS]யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QE][QS2]அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள். [QE]
16. [QS]அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்; [QE][QS2]அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள். [QE]
17. [QS]நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; [QE][QS2]நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர். [QE]
18. [QS]உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; [QE][QS2]எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர். [QE][PBR]
19. [QS]நீர் ஒருமுறை தரிசனத்தில், [QE][QS2]உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது: [QE][QS]“நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான் [QE][QS2]ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன். [QE]
20. [QS]நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; [QE][QS2]என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன். [QE]
21. [QS]என் கரம் அவனைத் தாங்கும்; [QE][QS2]நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும். [QE]
22. [QS]பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; [QE][QS2]கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான். [QE]
23. [QS]நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், [QE][QS2]அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன். [QE]
24. [QS]என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; [QE][QS2]என் பெயரால் அவன் பலம் உயரும். [QE]
25. [QS]நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், [QE][QS2]அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன். [QE]
26. [QS]அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், [QE][QS2]என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான். [QE]
27. [QS]நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், [QE][QS2]பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன். [QE]
28. [QS]நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; [QE][QS2]நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது. [QE]
29. [QS]நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; [QE][QS2]அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன். [QE][PBR]
30. [QS]“அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, [QE][QS2]என் நியமங்களைப் பின்பற்றாது போனால், [QE]
31. [QS]என் விதிமுறைகளை மீறி, [QE][QS2]எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால், [QE]
32. [QS]நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், [QE][QS2]அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்; [QE]
33. [QS]ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; [QE][QS2]என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன். [QE]
34. [QS]நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; [QE][QS2]என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன். [QE]
35. [QS]ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; [QE][QS2]தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்: [QE]
36. [QS]அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், [QE][QS2]அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்; [QE]
37. [QS]அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக [QE][QS2]சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.” [QE][PBR]
38. [QS]ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி, [QE][QS2]அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்; [QE][QS2]நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர். [QE]
39. [QS]உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, [QE][QS2]அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர். [QE]
40. [QS]நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து, [QE][QS2]அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர். [QE]
41. [QS]கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்; [QE][QS2]அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான். [QE]
42. [QS]நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்; [QE][QS2]அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர். [QE]
43. [QS]நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி, [QE][QS2]யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர். [QE]
44. [QS]நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி, [QE][QS2]அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர். [QE]
45. [QS]நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி, [QE][QS2]அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர். [QE][PBR]
46. [QS]யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்? [QE][QS2]நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ? [QE][QS2]எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்? [QE]
47. [QS]என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்; [QE][QS2]பயனற்ற நோக்கத்திற்காகவா நீர் எல்லா மக்களையும் படைத்தீர்! [QE]
48. [QS]மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? [QE][QS2]அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? [QE]
49. [QS]யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட [QE][QS2]உமது முந்தைய உடன்படிக்கையின் அன்பு எங்கே? [QE]
50. [QS]யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் [QE][QS2]எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில் [QE][QS2]எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும். [QE]
51. [QS]யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும், [QE][QS2]நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும் [QE][QS2]அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும். [QE][PBR] [PBR]
52. [QS]யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக! [QE][QCS]ஆமென், ஆமென். [QCE]