1. யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; [QBR2] எல்லாத் தலைமுறைகளுக்கும் [QBR2] உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன். [QBR]
2. உமது உடன்படிக்கையின் அன்பு [QBR2] என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்; [QBR2] நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன். [QBR]
3. “நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; [QBR2] என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன். [QBR]
4. ‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, [QBR2] எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ” [QBR2] என்று நீர் சொன்னீர்.
5. யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; [QBR2] அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன. [QBR]
6. மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? [QBR2] பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்? [QBR]
7. பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்; [QBR2] தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர். [QBR]
8. சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? [QBR2] யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9. பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்; [QBR2] அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர். [QBR]
10. நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்; [QBR2] உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர். [QBR]
11. வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; [QBR2] உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர். [QBR]
12. வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; [QBR2] தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன. [QBR]
13. உமது புயம் வலிமைமிக்கது; [QBR2] உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது.
14. நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; [QBR2] அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன. [QBR]
15. யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QBR2] அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள். [QBR]
16. அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்; [QBR2] அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள். [QBR]
17. நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; [QBR2] நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர். [QBR]
18. உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; [QBR2] எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர்.
19. நீர் ஒருமுறை தரிசனத்தில், [QBR2] உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது: [QBR] “நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான் [QBR2] ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன். [QBR]
20. நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; [QBR2] என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன். [QBR]
21. என் கரம் அவனைத் தாங்கும்; [QBR2] நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும். [QBR]
22. பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; [QBR2] கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான். [QBR]
23. நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், [QBR2] அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன். [QBR]
24. என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; [QBR2] என் பெயரால் அவன் பலம் உயரும். [QBR]
25. நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், [QBR2] அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன். [QBR]
26. அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், [QBR2] என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான். [QBR]
27. நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், [QBR2] பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன். [QBR]
28. நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; [QBR2] நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது. [QBR]
29. நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; [QBR2] அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன்.
30. “அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, [QBR2] என் நியமங்களைப் பின்பற்றாது போனால், [QBR]
31. என் விதிமுறைகளை மீறி, [QBR2] எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால், [QBR]
32. நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், [QBR2] அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்; [QBR]
33. ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; [QBR2] என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன். [QBR]
34. நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; [QBR2] என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன். [QBR]
35. ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; [QBR2] தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்: [QBR]
36. அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், [QBR2] அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்; [QBR]
37. அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக [QBR2] சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.”
38. ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி, [QBR2] அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்; [QBR2] நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர். [QBR]
39. உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, [QBR2] அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர். [QBR]
40. நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து, [QBR2] அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர். [QBR]
41. கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்; [QBR2] அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான். [QBR]
42. நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்; [QBR2] அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர். [QBR]
43. நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி, [QBR2] யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர். [QBR]
44. நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி, [QBR2] அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர். [QBR]
45. நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி, [QBR2] அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர்.
46. யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்? [QBR2] நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ? [QBR2] எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்? [QBR]
47. என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்; [QBR2] பயனற்ற நோக்கத்திற்காகவா நீர் எல்லா மக்களையும் படைத்தீர்! [QBR]
48. மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? [QBR2] அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? [QBR]
49. யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட [QBR2] உமது முந்தைய உடன்படிக்கையின் அன்பு எங்கே? [QBR]
50. யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் [QBR2] எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில் [QBR2] எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும். [QBR]
51. யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும், [QBR2] நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும் [QBR2] அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும்.
52. யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக! ஆமென், ஆமென். [PE]