1. [QS]யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார். [QE]
2. [QS]யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், [QE][QS2]சீயோனின் வாசல்களை நேசிக்கிறார். [QE][PBR]
3. [QS]இறைவனின் நகரமே, [QE][QS2]உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன: [QE]
4. [QS]“என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு [QE][QS2]நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, [QE][QS]‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; [QE][QS2]பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.” [QE]
5. [QS]உண்மையாகவே சீயோனைக் குறித்து, [QE][QS2]“இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், [QE][QS2]மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும். [QE]
6. [QS]“இன்னார் சீயோனிலே பிறந்தார்” [QE][QS2]என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார். [QE][PBR]
7. [QS]அவர்கள் இசை மீட்டும்பொழுது, [QE][QS2]“எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள். [QE]