1. யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார். [QBR]
2. யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும், [QBR2] சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.
3. இறைவனின் நகரமே, [QBR2] உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன: [QBR]
4. “என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு [QBR2] நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து, [QBR] ‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்; [QBR2] பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்.” [QBR]
5. உண்மையாகவே சீயோனைக் குறித்து, [QBR2] “இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும், [QBR2] மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்” என்றும் சொல்லப்படும். [QBR]
6. “இன்னார் சீயோனிலே பிறந்தார்” [QBR2] என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.
7. அவர்கள் இசை மீட்டும்பொழுது, [QBR2] “எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது” என்று பாடுவார்கள். [PE]