1. யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும், [QBR2] ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன். [QBR]
2. நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; [QBR2] உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும். [QBR] நீரே என் இறைவன்;
3. என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே, [QBR2] நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். [QBR]
4. யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்; [QBR2] ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன்.
5. யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்; [QBR2] உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர். [QBR]
6. யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்; [QBR2] இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும். [QBR]
7. என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; [QBR2] ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.
8. யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை; [QBR2] உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது. [QBR]
9. யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும் [QBR2] உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்; [QBR2] அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள். [QBR]
10. நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்; [QBR2] நீர் ஒருவரே இறைவன்.
11. யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; [QBR2] அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்; [QBR] நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி [QBR2] ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். [QBR]
12. என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; [QBR2] உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன். [QBR]
13. நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது; [QBR2] நீர் என்னை ஆழங்களிலிருந்தும் [QBR2] பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர்.
14. இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்; [QBR2] கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர், [QBR2] அவர்கள் உம்மை மதிக்காதவர்கள். [QBR]
15. ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்; [QBR2] கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர். [QBR]
16. என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்; [QBR2] உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்; [QBR] என்னைக் காப்பாற்றும், [QBR2] ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன். [QBR]
17. என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக, [QBR2] உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்; [QBR2] ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர். [PE]