தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்; [QBR2] யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர். [QBR]
2. நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து, [QBR2] அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர். [QBR]
3. நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, [QBR2] உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர்.
4. எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; [QBR2] எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும். [QBR]
5. நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? [QBR2] உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ? [QBR]
6. உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி [QBR2] நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ? [QBR]
7. யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, [QBR2] உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்.
8. யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்; [QBR2] அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்; [QBR2] ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும். [QBR]
9. அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு, [QBR2] அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால், [QBR2] அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும்.
10. அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன; [QBR2] நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்கின்றன. [QBR]
11. உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, [QBR2] நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது. [QBR]
12. யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்; [QBR2] நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும். [QBR]
13. நீதி அவருக்கு முன்சென்று, [QBR2] அவருடைய காலடிகளுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 85 / 150
சங்கீதம் 85:35
1 யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்; யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர். 2 நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து, அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர். 3 நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு, உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர். 4 எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்; எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும். 5 நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ? உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ? 6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ? 7 யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும். 8 யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்; அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்; ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும். 9 அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு, அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால், அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும். 10 அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன; நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்கின்றன. 11 உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது, நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது. 12 யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்; நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும். 13 நீதி அவருக்கு முன்சென்று, அவருடைய காலடிகளுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 85 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References