தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, [QBR2] உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது! [QBR]
2. என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக [QBR2] ஏங்கித் தவிக்கிறது; [QBR] என் உடலும் உள்ளமும் [QBR2] உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது. [QBR]
3. என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, [QBR2] உம்முடைய பீடத்தினருகே [QBR2] அடைக்கலான் குருவிக்கு வீடும், [QBR] இரட்டைவால் குருவிக்குத் [QBR2] தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே. [QBR]
4. உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QBR2] அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள்.
5. உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், [QBR2] தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள். [QBR]
6. அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், [QBR2] அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்; [QBR2] முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது. [QBR]
7. அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும், [QBR2] பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள்.
8. சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; [QBR2] யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும். [QBR]
9. எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்; [QBR2] நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும்.
10. உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது, [QBR2] வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது; [QBR] கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட, [QBR2] என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன். [QBR]
11. ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்; [QBR2] யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்; [QBR] குற்றமற்றோராய் நடப்போருக்கு [QBR2] அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை.
12. சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, [QBR2] உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 84 / 150
சங்கீதம் 84:77
1 சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது! 2 என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கிறது; என் உடலும் உள்ளமும் உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது. 3 என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உம்முடைய பீடத்தினருகே அடைக்கலான் குருவிக்கு வீடும், இரட்டைவால் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே. 4 உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள். 5 உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள். 6 அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்; முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது. 7 அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும், பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள். 8 சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும். 9 எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்; நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும். 10 உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது, வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது; கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட, என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன். 11 ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்; யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்; குற்றமற்றோராய் நடப்போருக்கு அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை. 12 சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 84 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References