1. [QS]சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, [QE][QS2]உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது! [QE]
2. [QS]என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக [QE][QS2]ஏங்கித் தவிக்கிறது; [QE][QS]என் உடலும் உள்ளமும் [QE][QS2]உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது. [QE]
3. [QS]என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, [QE][QS2]உம்முடைய பீடத்தினருகே [QE][QS2]அடைக்கலான் குருவிக்கு வீடும், [QE][QS]இரட்டைவால் குருவிக்குத் [QE][QS2]தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே. [QE]
4. [QS]உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; [QE][QS2]அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள். [QE][PBR]
5. [QS]உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், [QE][QS2]தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள். [QE]
6. [QS]அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், [QE][QS2]அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்; [QE][QS2]முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது. [QE]
7. [QS]அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும், [QE][QS2]பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள். [QE][PBR]
8. [QS]சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; [QE][QS2]யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும். [QE]
9. [QS]எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்; [QE][QS2]நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும். [QE][PBR]
10. [QS]உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது, [QE][QS2]வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது; [QE][QS]கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட, [QE][QS2]என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன். [QE]
11. [QS]ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்; [QE][QS2]யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்; [QE][QS]குற்றமற்றோராய் நடப்போருக்கு [QE][QS2]அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை. [QE][PBR]
12. [QS]சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, [QE][QS2]உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர். [QE]