1. [QS]இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; [QE][QS2]செவிகொடாமல் இருக்கவேண்டாம்; [QE][QS2]இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம். [QE]
2. [QS]பாரும், உமது பகைவர் எவ்வளவாய் கொந்தளித்திருக்கிறார்கள்; [QE][QS2]உமது எதிரிகள் எவ்வளவாய்த் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள். [QE]
3. [QS]அவர்கள் உமது மக்களுக்கு விரோதமாகத் தந்திரமாய் சூழ்ச்சி செய்கிறார்கள்; [QE][QS2]நீர் காக்கிறவர்களுக்கு விரோதமாய் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். [QE]
4. [QS]“அவர்கள், வாருங்கள், ஒரு நாடாக அவர்கள் இல்லாதவாறு அழிப்போம்; [QE][QS2]இஸ்ரயேலின் பெயரை இனி எவரும் நினைக்காதவாறு செய்திடுவோம்” என்று சொல்கிறார்கள். [QE][PBR]
5. [QS]அவர்கள் ஒரே மனதுடன் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகிறார்கள்; [QE][QS2]அவர்கள் உமக்கு விரோதமாக தங்களிடையே ஒரு நட்புடன்படிக்கை ஏற்படுத்துகிறார்கள். [QE]
6. [QS]அந்த உடன்படிக்கையிலே ஏதோமின் கூடாரத்தாரும், [QE][QS2]இஸ்மயேலர், மோவாபியர், ஆகாரியர், [QE]
7. [QS]கேபாலர், அம்மோனியர், அமலேக்கியர், பெலிஸ்தியர் ஆகியோரும், [QE][QS2]தீருவின் மக்களும் இணைந்திருக்கிறார்கள். [QE]
8. [QS]லோத்தின் சந்ததியினருக்குப் பக்கபலமாய் இருக்க [QE][QS2]அசீரியாவும் அவர்களோடு சேர்ந்துகொண்டது. [QE][PBR]
9. [QS]இறைவனே, நீர் மீதியானியருக்குச் செய்தது போலவும், [QE][QS2]கீசோன் நதியருகே சிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும் [QE][QS2]அவர்களுக்கும் செய்யும். [QE]
10. [QS]அவர்கள் எந்தோரில் [QE][QS2]அழிந்து நிலத்தின் குப்பைபோல் ஆனார்களே. [QE]
11. [QS]அவர்களுடைய தலைவர்களை ஓரேபையும், சேபையும் போலாக்கும். [QE][QS2]அவர்களுடைய இளவரசர்கள் எல்லோரையும் சேபாவையும், சல்முனாவையும் போலாக்கும். [QE]
12. [QS]“அவர்கள் இறைவனின் மேய்ச்சல் நிலங்களை எங்கள் உடைமையாக்குவோம்” [QE][QS2]என்று சொன்னார்களே. [QE][PBR]
13. [QS]என் இறைவனே, அவர்களைக் காய்ந்த சருகைப் போலவும், [QE][QS2]காற்றில் பறக்கும் பதரைப்போலவும் ஆக்கும். [QE]
14. [QS]காட்டை நெருப்பு எரித்து அழிப்பது போலவும், [QE][QS2]நெருப்புச் சுவாலை மலைகள் முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்வதுபோலவும், [QE]
15. [QS]அவர்களை உமது புயலினால் பின்தொடர்ந்து துரத்தும்; [QE][QS2]உமது சூறாவளியினால் திகிலடையச் செய்யும். [QE]
16. [QS]யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, [QE][QS2]அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும். [QE][PBR]
17. [QS]அவர்கள் எப்பொழுதும் வெட்கமடைந்து, மனம்சோர்ந்து போவார்களாக; [QE][QS2]அவர்கள் அவமானத்தால் அழிவார்களாக. [QE]
18. [QS]யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, [QE][QS2]பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக. [QE]