தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; [QBR2] “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:
2. “நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, [QBR2] கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்? [QBR]
3. பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; [QBR2] ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். [QBR]
4. பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; [QBR2] அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.
5. “அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; [QBR2] அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; [QBR2] பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.
6. “ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; [QBR2] நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன். [QBR]
7. ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; [QBR2] மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.”
8. இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; [QBR2] ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
சங்கீதம் 82:84
1 மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்: 2 “நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்? 3 பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். 4 பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள். 5 “அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன. 6 “ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன். 7 ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.” 8 இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References