1. [QS]இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே, [QE][QS2]எங்களுக்குச் செவிகொடும். [QE][QS]கேருபீன்களுக்கு இடையில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே, [QE]
[QS2]2. எப்பிராயீம், பென்யமீன், மனாசே கோத்திரங்களுக்கு முன்பாக பிரகாசியும். [QE][QS]உமது வல்லமையை எழச்செய்து, [QE][QS2]எங்களை இரட்சிக்க வாரும். [QE][PBR]
3. [QS]இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; [QE][QS2]உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். [QE][QS2]அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். [QE][PBR]
4. [QS]சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, [QE][QS2]உமது மக்கள் மன்றாடும்போது [QE][QS2]எவ்வளவு காலத்திற்கு கோபங்கொண்டிருப்பீர்? [QE]
5. [QS]நீர் அவர்களுக்குக் கண்ணீரை உணவாகக் கொடுத்தீர்; [QE][QS2]நீர் அவர்களை நிறைய கண்ணீரைப் பருகும்படிச் செய்தீர். [QE]
6. [QS]நீர் எங்களை அயலாருக்கிடையே கேலிப் பொருளாக்கினீர்; [QE][QS2]எங்கள் பகைவர் எங்களை ஏளனம் செய்யவிட்டீர். [QE][PBR]
7. [QS]சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; [QE][QS2]நாங்கள் இரட்சிக்கப்படும்படி [QE][QS2]உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். [QE][PBR]
8. [QS]நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்தீர்; [QE][QS2]பிற நாட்டு மக்களைத் துரத்திவிட்டு அதை நாட்டினீர். [QE]
9. [QS]நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்; [QE][QS2]அது வேர்விட்டு நாடெங்கும் படர்ந்தது. [QE]
10. [QS]அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன; [QE][QS2]அதின் கிளைகளால் வலிமையான கேதுரு மரங்களும் மூடப்பட்டன. [QE]
11. [QS]அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும், [QE][QS2]தன் தளிர்களை நதி[* அதாவது, ஐப்பிராத்து ] வரைக்கும் பரப்பியது. [QE][PBR]
12. [QS]நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்? [QE][QS2]அதைக் கடந்துபோகிற எல்லாருமே இப்போது அதின் பழங்களைப் பறிக்கிறார்களே. [QE]
13. [QS]காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன; [QE][QS2]வயல்வெளியின் உயிரினங்கள் அதில் மேய்கின்றன. [QE]
14. [QS]சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும், [QE][QS2]பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பாரும், [QE][QS]இந்தத் திராட்சைக் கொடியைக் கவனியும், [QE]
[QS2]15. உமது வலதுகரம் நாட்டிய வேரையும், [QE][QS2]உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த உமது மகனையும் காத்துக்கொள்ளும். [QE][PBR]
16. [QS]உமது திராட்சைக்கொடி வெட்டப்பட்டு, நெருப்பினால் எரிக்கப்பட்டது; [QE][QS2]உமது முகத்தின் கண்டிப்பான பார்வையினால் உமது மக்கள் அழிகிறார்கள். [QE]
17. [QS]உமது கரத்தை உமது வலதுபக்கத்திலுள்ள மனிதன்மேல், [QE][QS2]உமக்காகவே நீர் வளர்த்தெடுத்த மானிடமகன்மேல் அமரச்செய்யும். [QE]
18. [QS]அப்பொழுது நாங்கள் உம்மைவிட்டு விலகமாட்டோம்; [QE][QS2]எங்களை உயிர்ப்பியும், நாங்கள் உமது பெயரைச் சொல்லி வழிபடுவோம். [QE][PBR]
19. [QS]சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே, [QE][QS2]எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்; [QE][QS]நாங்கள் இரட்சிக்கப்படும்படி [QE][QS2]உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்யும். [QE]