தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, [QE][QS2]பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! [QE][PBR] [QS]நீர் வானங்களுக்கு மேலாக [QE][QS2]உமது மகிமையை வைத்திருக்கிறீர். [QE]
2. [QS]உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, [QE][QS2]உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் [QE][QS]உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக [QE][QS2]வல்லமையை உறுதிப்படுத்தினீர். [QE]
3. [QS]உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் [QE][QS2]அவற்றில் நீர் பதித்து வைத்த [QE][QS]சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி [QE][QS2]நான் சிந்திக்கும்போது, [QE]
4. [QS]மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், [QE][QS2]மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?[* எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்? ] [QE][PBR]
5. [QS]நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, [QE][QS2]அவர்களை[† அவர்களை அல்லது அவனை ] மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். [QE]
6. [QS]உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; [QE][QS2]அனைத்தையும்: [QE]
7. [QS]எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் [QE][QS2]காட்டு மிருகங்களையும் [QE]
8. [QS]ஆகாயத்துப் பறவைகளையும் [QE][QS2]கடல் மீன்களையும் [QE][QS2]கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர். [QE][PBR]
9. [QS]எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, [QE][QS2]பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது! [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது! நீர் வானங்களுக்கு மேலாக உமது மகிமையை வைத்திருக்கிறீர். 2 உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க, உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின் உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக வல்லமையை உறுதிப்படுத்தினீர். 3 உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும் அவற்றில் நீர் பதித்து வைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி நான் சிந்திக்கும்போது, 4 மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும், மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?* எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்? 5 நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை அவர்களை அல்லது அவனை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர். 6 உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்; அனைத்தையும்: 7 எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும் காட்டு மிருகங்களையும் 8 ஆகாயத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர். 9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References